August 20, 2010

இன்றைய எம்.ஜி.ஆர்.?


து தனிமனித வ‌ழிபாடு,தாக்குதல் பற்றிய பதிவல்ல...!

எம்.ஜி.ஆரின் புகழ்,வசீகரம்,வெற்றிக்கு அடிப்படையாகவும்,இன்றைய எம்.ஜி.ஆராக உருவாக என்னென்ன தகுதிகள் வேண்டும்? எண்ணியதன் விளைவு...இந்த பதிவு..!
"ஓருவன் எந்த செயலைத் தொடங்கினாலும்,அதனால் அழிவதையும்,அழிந்த பின் ஆவதையும் பின்பு உண்டாகும் ஆதாயத்தையும், அறிந்து செய்ய வேண்டும்" என்றதை பயன்படுத்தியவராக எம்.ஜி.ஆர் தெரிகிறார்.
மக்களால், வெவ்வேறு முறைகளில் நம்பிக்கை ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. சிலர் இறைவனிடம் வைத்திருக்கும் நம்பிக்கை அல்லது ஏதாவது பிரபஞ்ச சக்தி என்றும் அல்லது ஓரு பிரத்தியோகமான காப்பாற்றுபவர் அல்லது மதக்கோட்பாடு அல்லாத ஓருவர், அவரது உயர்ந்த, சொந்தத் தனித்தன்மையில் நம்பிக்கை வைத்தல் அப்படியாக உயர்ந்த செல்வாக்கை ஏற்படுத்த சினிமா பிம்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றவராக எம்.ஜி.ஆர்.
அறியாமையில் உழலுபவர்கள் நம்பிக்கையில்லாதவர்கள், அறியாமை ஓர் விதத்தில் கல்வி கற்காமை போன்று பொருளாதாரத்தை சார்ந்தாகவும் இருக்குமோ? என்று கருதுகிறேன்.அறியாமையை நம்பிக்கையாக மாற்றக்கூடிய சக்தி எம்.ஜி.ஆரிடம் இருந்திருக்க வேண்டும்."நம்பிக்கை","விசுவாசம்" என்ற இரண்டு பிரிக்க முடியா முகங்களை பற்றிய புரிதல் அவருக்கு இருந்திருக்க வேண்டும்.
நம்பிக்கையை தொழில்(சினிமா) சாராத மக்களிடத்திலும், விசுவாசத்தை தொழில் சார்ந்த மக்களிடத்திலும் ஏற்படுத்திருக்க வேண்டும். இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து பொருளாதார துணையோடு ஓர் வசீகரத்தை உருவாகிருக்கவேண்டும்.நம்பிக்கையும்,விசுவாசமும் கைகோர்த்து சுமுகமான மனித உறவிற்கும், ஓர் இணக்கமான சமூக செயல் திறனுக்கு அடிப்படையாக மாறியிருக்க வேண்டும்.
சினிமா வெளிச்சமும், பத்திரிக்கை ஊடகமும், செவி வழி கதை சொல்லிகளும்(ஊருக்கு நாலு பேர் அருமை,பெருமைகளை, தங்கள் கற்பனைகளோடு எடுத்துச் சொல்லி ஆலமரத்தடிகளிலும், திண்ணையிலும் பேசியவர்கள்). எதிர்மறை செய்தி வராமல் பார்த்துக் கொள்ள விசுவாசிகளும், பொருளாதாரமும் கை கொடுத்திருக்க வேண்டும்.இது தான் அர‌சிய‌லில் வெற்றிக் கொடியை ப‌ற‌க்க‌விட்டிருக்கும்.என் பார்வையில் ந‌ம்பிக்கையை ஏற்ப‌டுத்தி,விசுவாச‌த்தை உருவாக்கி வெற்றி பெற்ற‌வ‌ராக‌ எம்.ஜி.ஆர்.
இன்றைய காலகட்டத்தில்,பொருளாதாரத்தை கொண்டு "நம்பிக்கை","விசுவாசத்தை" உருவாக்குவது எளிதான காரியமல்ல.ஓவ்வொரு செயலிலும் பொருளாதாரத்தை ஓட்டிய‌ சிந்தனையில் இன்றைய மக்கள்.சினிமா ரசிகனும் சினிமா பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு போய்விடுவான்.அறிந்தும்,அறியாமையில் இருப்பது போல மக்கள் மனநிலை என்பது தான் நிதர்சனமான உண்மை.சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று,இன்றைய எம்.ஜி.ஆராக‌ உருவாவது....?


போட்டோ கமெண்ட்:
சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

3 comments:

  1. நல்ல பதிவு நண்பரே .. வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  2. நன்றாகவே அலசி இருக்கிறீர்கள் நண்பரே...நல்ல பதிவு..

    பதிவுலகுக்கு புதிதா? வாருங்கள் நண்பரே...வந்தவுடன் சமுதாய நோக்கோடே பதிவிட்டிருக்கிறீர்கள்...நன்றாக இருந்தது..

    ReplyDelete
  3. நானும் புதியவன்தான் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

    http://rameshspot.blogspot.com

    ReplyDelete