October 21, 2010

சென்னையின் தேவைகள்-1(தொடர் பதிவு)


சென்னையைப் பொறுத்தமட்டில், போக்குவரத்து நிர்வாகம்(Traffic management )என்ற சொல்லக்கூடியே ஒரு அணுகுமுறையே இல்லை. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத் தான் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு, மத்திய, மாநில‌ அர‌சுக‌ள் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.இச்சாலை மேம்படுத்தும் பணிகளும் பல்வேறு பிரச்சனைகளால்(கான்ட்ராக்டர்கள்,அதிகாரிகள் மெத்தனம், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்)பல கிடப்பில் கிடக்கிறது.வருகிற தேர்தலை முன்னுர்த்தி இனி விரைவாக நடக்கும் என்று நம்புவோமாக..!தரமற்ற சாலைகளில் மின்னல் வேகத்தில் பறந்து செல்வதால் விபத்துக்களும்,உயிரிழப்புகளும் தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

கடந்த 2008‍ம் ஆண்டு புள்ளி விபரத்தின் படி சென்னை மாநகரில் மட்டும் 6823 விபத்துக்கள் நடந்துள்ளதாக சொல்கிறது.மோசமான சாலை காரணமாக நடந்த 2 விபத்துக்களில் 3 பேர் இறந்துள்ளனர்.இருசக்கர வாகனங்களால் நடந்த 180 விபத்துக்களில் 183 பேரும், மூன்று சக்கர வாகனங்களால் நடந்த 68 விபத்துக்களில் 69 பேரும், இதர வாகனங்கள் மூலம் நடந்த 112 விபத்துக்களில் 117 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்த‌ விப‌த்துக்க‌ளுக்கு கார‌ண‌ங்க‌ளாக‌ அறிய‌ப‌டுப‌வை மோச‌மான‌ சாலை,போக்குவ‌ர‌த்து விதிமீற‌ல்க‌ள்,வாக‌ன‌ ஓட்டிக‌ளின் க‌வ‌ன‌மின்மை போன்ற‌வை.

சாலையின் நடைபாதை முழுவதும் நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.சென்னையில் சாலை இருபுறங்களில் உள்ள நடைபாதையில் 200mtrs வ‌ரைக்கூட‌ தொடர்ந்து நடக்க முடியாத சூழல் தான் காணப்படுகிறது.சாலை என்பது வாகனங்களை பயன்படுத்துவதற்கு, கார், பேருந்து,டூவீலர் போவதற்குதான் என்று ஆகிவிட்டது. சைக்கிள் போவதற்கோ, நடப்பதற்கோ இல்லை என்று ஆகிவிட்டது.மோட்டாரற்ற போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஏட்டில் மட்டுமே இருக்கிறது. மோட்டாரற்ற போக்குவரத்து என்றால் நடப்பதும் சைக்கிளும்தான். இந்த இரண்டுக்கும் ஒன்றுமே செய்யவில்லை என்பது வேதனையான விசயம்.

வயதில் முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் நடந்து வெளியே சென்று வீட்டுக்கு வந்துவிட்டால்,ஆயுள் இன்னொறு நாள் கூடிவிட்டதாகவே எண்ணும் அளவுக்கு சாலைகள் இருக்கிறது...!!.நடைபாதை வியாபாரிகளுக்கு வணிக வளாகம் திறக்கப்படவேண்டும்.(தி.நகரில் பாண்டிபஜார் உட்பட 3 இடங்களில் திறக்கப்பட்டும்,தொடர்ந்து வழியிலேயே கடை பரப்பி வருகின்றனர்...!)

மாநகருக்குள் நுழைந்துவிட்டால் தேவையான வழிதகவல் (sign boards) கொண்ட குறிப்புகள் இல்லை.புதிதாக வருபவர்கள் பாடு திண்டாடம் தான்..!!!நீங்கள் சிக்னலில் நிற்கும்போது,உங்களிடம் வழிகேட்டோர் பல எண்ணிக்கையில் தான் இருந்திருப்பார்கள்...!சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடுதல்( டிராஃபிக் டைவர்ஷன்) ஒன் வே டிராஃபிக், டூ வே டிராஃபிக் என்று மாற்றியமைத்து விடுகிறார்கள்.இதனால் பலன்கள் உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது...! உ.தா.அசோக் பில்லர் ஓன் வே முதலில் கொண்டுவந்தார்கள்,பின் எடுத்தார்கள் ...... மாற்றியமைக்கப்பட்டு மறுபடியும் ஓன் வே நடைமுறையில் உள்ளது.இதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை கிடையாது, முன்னோட்டம் கிடையாது.

சாலையில் ஓரங்களில் கண்ட கண்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. மேலும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மினிகார்கள் பஸ் ஸ்டாப்புகளில் நிறுத்தப்படுவதால் மாநகர பேருந்து சற்று தள்ளி நிறுத்தப் படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. குறிப்பாக அலுவலக நாட்களில் காலை, மாலை நேரங்களில் பீக் அவர்'களில் சாலைகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சில‌ போக்குவரத்து போலீசாரும் ஏனோத‌னோ என்ற‌ பார்வையில் கண்டுகொள்வதில்லை.

கட்டுமானத்திற்கு சாலை ஆக்கிரமிக்கப்படுகிறது.அப்புறம் டாஸ்மாக் கடை இருக்கும் சாலை நடக்க,மோசமாக இருக்கும் வழியிலேயே குடிப்பார்கள்,குடித்துவிட்டு நடப்பவர்கள் நடை நம்மை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.இப்படி சாலையில் போவது என்பது பயங்கரமான அனுபவமாக உள்ளது. ....!!!!இதற்கெல்லாம் தீர்வு...!!!???

பதிவுகள் தொடரும்....

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)

October 18, 2010

சென்னையின் தேவைகள்உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னை,பெங்களூரு மற்றும் அஹமதாபத் உள்ளிட்ட 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.சீனாவின் உள்பகுதியில் உள்ள நகரங்கள் போக்குவரத்து வசதிகள் உள்ளவையாகவும் வணிகம் செய்ய ஏற்றவையாகவும் இருப்பதாகக் கூறியுள்ள போர்ப்ஸ் என்ற அமெரிக்க இதழ்.இந்தியாவில் சரியான‌ திட்டமிடபடவில்லையென்றாலும் சீனாவைப் போன்றே சிறிய நகரங்களின் வளர்ச்சி இருக்கிறது என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் முக்கியத் தொழில் துறைகளான வாகன உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி மற்றும் பொழுது போக்கு ஆகியவை சென்னை உட்பட மூன்று நகரங்களில் உள்ளதாகவும் போர்ப்ஸ் கூறியுள்ளது.

2025ஆம் ஆண்டு 1 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சென்னை, நடப்பாண்டில் இதுவரை 1 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. டில்லி, மும்பை உள்ளிட்ட மற்ற இந்திய நகரங்களைவிட இது அதிகம் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.

இதை படிக்கும்போது ந‌ம‌க்கு எல்லாம் பெருமையாக தான் இருக்கிறது..!போர்ப்ஸ் கூறிய‌தில் நாம் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து முறையாக‌ திட்டமிட‌ப‌ட‌வில்லையென்றாலும்,வ‌ள‌ர்ச்சியை நோக்கி நாம் போய்க் கொண்டிருப்ப‌து.இது எவ்வ‌ள‌வு நாள் நீடிக்கும் என்று சொல்ல‌முடியாது,ஆக‌வே நாம் திட்ட‌மிட‌ நேர‌ம் வ‌ந்துவிட்ட‌தாக‌வே தெரிகிற‌து.ச‌ரி சென்னையில் நாம் இப்போது ச‌ந்திந்துக் கொண்டிருக்கும் பல பிர‌ச்ச‌னைக‌ளில் சிலவற்றை ப‌ற்றி பார்ப்போம்.

1. போக்குவ‌ர‌த்து பிர‌ச்ச‌னை.
2. ஆட்டோ வாட‌கை கொள்ளை.
3. வீட்டு வாட‌கை கொள்ளை.

விரிவாக அலசுவோம்.... தொடர் பதிவுகளாக எழுத எண்ணுகிறேன்....


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

October 14, 2010

உடல்நலனில் தண்ணீரின் பங்கு


தண்ணீர் வைத்தியம் பல பேரால் கூறப்பட்டு,நீங்கள் கேள்விபட்டியிருக்கலாம்.ஏன் இங்கயே எழுதப்பட்டிருக்கலாம்?இருந்தாலும் ஓரு நல்ல விசயத்தை திரும்ப,திரும்ப சொல்லுரது தப்பில்லன்னு நினைக்கிறேன்.பல்வேறு தளங்கள் மற்றும் இதழ்கள் படித்ததின் விளைவு இந்த பதிவு...!காலையில் எழுந்து,வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துதல்...!இந்த பழக்கம் ஆரோக்கியமான உடல்நலத்தை தரும்..!

தண்ணீர் அவசியம் :

1. அசைவ உணவு, பால், தக்காளி போன்ற ஆக்ஸலேட் உப்பு அதிகம் உள்ள உணவை அதிகம் சாப்பிடுபவர்கள்.
2. தினமும் கீரை சேர்ப்பவர்கள் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.
3. ஜாக்கிங் செல்பவர்களும், உடற்பயிற்சி செய்பவர்களும் உடலில் நீர்ச்சத்தை வியர்வை மூலம் அதிகம் அகற்றுகிறார்கள். அதே நேரத்தில் இந்த இழப்பை ஈடுகட்டப் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
4. உணவில் உப்பை நிறையச் சேர்த்துக் கொள்பவர்கள்,அவசியம் உட்கொள்ள வேண்டிய மருந்து தண்ணீர்.
5. 50 கிராமிற்கு மேல் வேர்க்கடலை சாப்பிடுவதும் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடும்,ஆகவே தண்ணீர் அருந்துங்கள்.

இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்...

நாளோன்றுக்கு ஒரு முறை குடிக்கும் அளவாக‌ 250 மில்லி வீதம் 8 முறையாவது ஒவ்வொருவரும் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.காலை எழுந்தவுடன் தண்ணீர் குடித்து விட்டு,இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை என கூறப்படுகிறது.குடித்த தண்ணீரை வற்றவைத்து விடுமாம் காபியில் உள்ள காபின்...!

முக்கியமாக அழகை பற்றி கவலைப்ப்டுபவர்கள்,அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும்.அது முகச்சுருக்கத்தை நீக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.(இந்த ஓரு காரணம் போதுமே..!)

இரவு நேர பணிக்கு செல்பவர்கள் குடிக்க வேண்டிய அருமருந்தும் தண்ணீர்.பணி முடிந்து காலையில் சிறுநீர் கழிக்கும் போது கவனித்தால் "மஞ்சள்" நிறத்தில் வெளியேரும் மாறாக இரவு நேர பணியில் இருக்கும் போது தண்ணீர் குடித்தால் மாற்றம் தெரியும்.

தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.மாற்றாக நாவின் சுவை உணர்வோடு கொஞ்சம்,கொஞ்சமாக பருக வேண்டுமாம்.

இரவு நேரத்தில் தூக்கம் கலைந்து சிறுநீர் கழித்தால்,குடி தண்ணீர் நன்கு அருந்திய பிறகு படுக்கைக்குச் செல்லுங்கள் என கூறப்படுகிறது(தண்ணீர் குடித்துவிட்டு,தொடர்ந்து தூக்கம் வராது சிலருக்கு.)

சிலர் நன்கு தண்ணீர் அருந்தினால்,அடிக்கடி சிறுநீர் கழிக்கப் போகவேண்டும் என்பதற்காகவே தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கிறார்க்ள.குறிப்பாக நீண்ட நேரம் பேருந்தில் பயணிக்கிறவர்கள் இதே போல் தவிர்த்து விடுகிறார்கள். இது நல்ல பழக்கமல்ல. ..! இருப்பினும் பயண‌முடிவில் இறங்குவதற்குச் சற்று முன்பும், பயணத்திற்கு இருமணி நேரம் முன்பும் தண்ணீர் அருந்தலாம்.பேருந்துப் பயண‌த்தில் அவசியம் பயணிகள் கையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்வது மிகவும் உகத்தது...!

தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்கின்றனர் பலர்.அவ்வாறில்லாமல் அடிக்கடி தண்ணீர் குடுக்க வேண்டும்.தண்ணீர் நிறைய குடிப்பதால் நமது செயல்திறனும் கவனமும் அதிகரிக்கும்..!தினமும் தண்ணீரை நன்கு அருந்தி உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...!தண்ணீர் நன்கு அருந்துவதால் பல நோய்கள் குணமாவதுடன் மன இறுக்கம் அகலும்...!உடல்நலனில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது..!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

October 08, 2010

மரங்களை வேரறுப்போம்..!!"மரங்கள் வளர்ப்போம்" என்ற கோஷத்தை கேள்விப்பட்டுயிருக்கிறோம்.அது என்ன
" மரங்களை வேரறுப்போம்" என்று சொல்கிறேன் என்று பார்க்கீறீர்களா?சமீபகாலங்களாக சமூக ஆர்வலர்களும்,சில நாளிதழ்களும் ஓரு மரத்தைப் பற்றி கூறிவருகிற தகவல் நமக்கு அதிர்ச்சி தருபவைகளாக இருக்கிறது.

காட்டுகருவை என்றும்,சீமை கருவை என்றும் வேலி காத்தான் என்றும் அழைக்கப்படும், இந்த விஷ அரக்கனை முற்றாக அழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.எதற்காக இந்த மரத்தை அழிக்க‌ வேண்டும்? என்ற கோஷம் வெளிவருகிறது என்பதை பார்ப்போம்.இந்த‌ ப‌திவில் நான் "சீமை கருவை" என்ற சொல்லையே பயன்படுத்திருக்கிறேன்.சீமையிலிருந்து நம் கருவை(சந்ததியை) அழிக்க வந்தது என்ற பொருளில்..!


சீமை கருவை:
1. மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை.
2. வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது.
3. வெப்பத்தைக் மட்டுமே கக்கும் தன்மைக் கொண்டது.
4. ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது.இதனால் சுற்றுப்புற காற்று மண்டலம் நச்சு தன்மைக்கு மாறுகிறது.
5. நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு...!
6. முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளமையோடு வளரமுடியாது.
7. வெட்டினால் மட்டும் அழித்துவிடாது,வேரோடு அழிக்கவேண்டும்.
8. இதில் எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை.(ஐந்தறிவு உயிரினம்...!நாம்?).
9. மரத்தைச் சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன.
10. முட்கள் விஷ‌த்த‌ன்மை கொண்ட‌வை.


எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமை கருவை மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி ,தனது இலைகளை வாட‌விடாமல் பார்த்துக்கொள்கிறது.நாமலே பல வழிகளில் நீரை தேவையில்லாமல் செலவிட்டு வருகிறோம்,இதில் இது வேறு..!பார்க்க போனால் நம் அரசியல்வியாதிகளை விட சுயநலமாக இருக்குதே..! நிலத்தடி நீரை முடிந்த வரை உறிஞ்சிவிடுவதால், பூமி தானாகவே வறண்டு விடுகிறது.இது தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது.


சீமை கருவை மற்றும் யூகலிப்டஸ் மரமும் நம் நாட்டு தாவரங்கள் இல்லை,இறக்குமதி செய்யப்பட்டவை. இரண்டும் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சுபவை.சீமை கருவை விதைகள் மெக்சிகோவிலிருந்து வரவழைக்கப்பட்டு காமராஜர் அவர்கள் காலத்தில் ஆகாயத்தில் இருந்து தூவப்பட்டன என தெரிகிறது.அமெரிக்கா உணவு உதவி வழ‌ங்கும்போது இலவசமாக கொடுத்தது ;அப்போதைய காங்கிரஸ் அரசு இதை சரியாக ஆராயாமல் இந்த மரம் விறகுக்கு ஆகும் என்று அனுமதிததாக தகவல்.


அமெரிக்காவில், சீமை கருவை மரங்களை வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது.நமக்கு கொடுக்கும்போது இது நச்சுத்தன்மை வாய்ந்தது என அமொரிக்காவுக்கு தெரிந்ததா? என தகவல் இல்லை.பேராண்மை திரைப்படத்தில் சீமை கருவை அடியோட அழிக்க வேண்டும் என்பதாக காட்சி வைக்கப்பட்டதற்கு இயக்குனர் S.P.ஜன‌நாதனுக்கு நன்றி..!


இரு மரங்கள் புதிதாய் வைப்பதற்க்கு சமம். ஒரு சீமை கருவை அழிப்பது. மரம் நடுவோம் என்ற கோஷத்தை விட நாம் அதிகம் பின்பற்றவேண்டியது, இருக்கும் சீமை கருவை மரங்களை வேரறுப்போம் என்பதே!


விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என சீமை கருவையின் பாகங்களை பிரித்து மேய்ந்து விற்பனை செய்து ஈட்படும் தனிநபர் லாபத்திற்காக ஒட்டு மொத்த பூமி பழியாவதை தடுக்க வேண்டும்.அரசு அலுவலங்கம் மற்றும் நிலங்களில் வெற்றி வாகை சூடியது போல் நின்று காட்சி தரும் மரங்களை அரசு அழிக்க வேண்டும். இந்த மரங்களை அழித்துவிட்டு அந்த இடத்தினில் நன்மை பயக்கக்கூடிய வேறு மரங்களை நடுதல் வேண்டும்.பொதுமக்கள் தரப்பில் இது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும்...!படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!