October 18, 2010

சென்னையின் தேவைகள்உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னை,பெங்களூரு மற்றும் அஹமதாபத் உள்ளிட்ட 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.சீனாவின் உள்பகுதியில் உள்ள நகரங்கள் போக்குவரத்து வசதிகள் உள்ளவையாகவும் வணிகம் செய்ய ஏற்றவையாகவும் இருப்பதாகக் கூறியுள்ள போர்ப்ஸ் என்ற அமெரிக்க இதழ்.இந்தியாவில் சரியான‌ திட்டமிடபடவில்லையென்றாலும் சீனாவைப் போன்றே சிறிய நகரங்களின் வளர்ச்சி இருக்கிறது என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் முக்கியத் தொழில் துறைகளான வாகன உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி மற்றும் பொழுது போக்கு ஆகியவை சென்னை உட்பட மூன்று நகரங்களில் உள்ளதாகவும் போர்ப்ஸ் கூறியுள்ளது.

2025ஆம் ஆண்டு 1 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சென்னை, நடப்பாண்டில் இதுவரை 1 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. டில்லி, மும்பை உள்ளிட்ட மற்ற இந்திய நகரங்களைவிட இது அதிகம் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.

இதை படிக்கும்போது ந‌ம‌க்கு எல்லாம் பெருமையாக தான் இருக்கிறது..!போர்ப்ஸ் கூறிய‌தில் நாம் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து முறையாக‌ திட்டமிட‌ப‌ட‌வில்லையென்றாலும்,வ‌ள‌ர்ச்சியை நோக்கி நாம் போய்க் கொண்டிருப்ப‌து.இது எவ்வ‌ள‌வு நாள் நீடிக்கும் என்று சொல்ல‌முடியாது,ஆக‌வே நாம் திட்ட‌மிட‌ நேர‌ம் வ‌ந்துவிட்ட‌தாக‌வே தெரிகிற‌து.ச‌ரி சென்னையில் நாம் இப்போது ச‌ந்திந்துக் கொண்டிருக்கும் பல பிர‌ச்ச‌னைக‌ளில் சிலவற்றை ப‌ற்றி பார்ப்போம்.

1. போக்குவ‌ர‌த்து பிர‌ச்ச‌னை.
2. ஆட்டோ வாட‌கை கொள்ளை.
3. வீட்டு வாட‌கை கொள்ளை.

விரிவாக அலசுவோம்.... தொடர் பதிவுகளாக எழுத எண்ணுகிறேன்....


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

24 comments:

 1. பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!

  ReplyDelete
 2. நல்ல முயற்சி நண்பரே.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. நல்ல டாபிக்.... தொடர்ந்து எழுதுங்க... :-)

  ReplyDelete
 4. @வெறும்பய said...
  ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி..!

  ReplyDelete
 5. @Chitra...
  ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி..!

  ReplyDelete
 6. மிக அவசியமான பதிவு! தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. 3 பிரச்சினை மட்டுமா? இன்னும் நிறைய இருக்குங்க.... எழுதுங்கள் தொடர்கிறேன்

  ReplyDelete
 8. @அருண் பிரசாத்
  //3 பிரச்சினை மட்டுமா? இன்னும் நிறைய இருக்குங்க.... எழுதுங்கள் தொடர்கிறேன்.//
  நிறைய இருக்குங்க...முழுமையாக எழுத முயற்சி செய்கிறேன்..!

  ReplyDelete
 9. நிச்சயம் தொடர் பதிவாக எழுதுங்கள் அவசியம் தேவையான ஒன்று..தனித்துவம் பெறும்

  ReplyDelete
 10. நாளுக்கு நாள் வளர்ந்துவரும் சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகள் என்பது வெகு சுமார்தான்.. வெகு விரிவான அலசலை எதிர்பார்க்கிறேன் ,,,

  ReplyDelete
 11. @ஆர்.கே.சதீஷ்குமார்
  தொடர் வருகைக்கு நன்றி..!

  ReplyDelete
 12. @கே.ஆர்.பி.செந்தில்...
  தலைவரே,
  உங்கள் ஊக்கத்துக்கு நன்றி..!நன்றாக எழுத முயற்சி செய்கிறேன்..!!!

  ReplyDelete
 13. துணை முதல்வர் பரிந்துரைத்த துணை நகர் (சோளிங்கநல்லூர்) அருகே வந்து இருந்தால் , நகரின் மைய்யப் பகுதியில் இருக்கும் போக்குவரத்து நெருக்கடி சற்று குறைந்து இருக்கும்.

  வெளி மாவட்ட பேருந்துகள் இப்போது பெருன்குளத்தூர் காடங்குளத்தூர் இல் இருந்து மதுரவாயல் புறவழி சாலை வழியாக செல்வது சற்று நிம்மதி.

  விரைவில் வர இருக்கும் சிற்றுந்துகளால் ஆட்டோ தொல்லை குறையும் என நம்புகிறேன்

  மிக முக்கிய பிரச்னை - சென்னை வெப்பமயமாகி விட்டது

  ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நகரில் இப்போது வெப்பம் அதிகம்

  ReplyDelete
 14. @ ராம்ஜி_யாஹூ

  தங்கள் வருகைக்கு நன்றி...!!!

  எனது அடுத்த பதிவுக்கு முன்னோட்டம் நீங்கள் பின்னூட்டமாக எழுதிவிட்டீர்கள்..!!

  ReplyDelete
 15. நீங்க வெறும்பயலாகத் தெரியவில்லையே... கண்டிப்பாக ஒரு வெற்றிபயலாகதான் இருப்பீங்க ...நம்புங்க நண்பரே

  சிவபார்க்கவி

  ReplyDelete
 16. உங்கள் சிந்தனையில் தோன்றியதை விரிவான விளக்கங்களுடன் எழுதுங்கள்.இதுதான் தற்போதைய தேவையும் கூட

  ReplyDelete
 17. இந்த காலகட்டத்துக்கு தேவையான பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. @சிவபார்கவி
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...!!!

  ReplyDelete
 19. @யோகி ஸ்ரீ ராமானந்த குரு

  சிந்தனையில் தோன்றியவையை எழுத்துக்களாக எழுத முயல்கிறேன்...

  ReplyDelete
 20. @ மனசாட்சியே நண்பன்
  தங்கள் வருகைக்கு நன்றி...!!!

  ReplyDelete
 21. //போர்ப்ஸ் என்ற அமெரிக்க இதழ்.இந்தியாவில் சரியான‌ திட்டமிடபடவில்லையென்றாலும் சீனாவைப் போன்றே சிறிய நகரங்களின் வளர்ச்சி இருக்கிறது என்றும் கூறியுள்ளது.// its true. thanks for sharing.

  ReplyDelete
 22. நல்ல முயற்சி நண்பரே...
  தொடர்ந்து எழுதுங்க.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete