November 20, 2010

புயல்களுக்கு பெயர் ?


சென்னையில் ஓரு மழைக் காலம் இது...!பதிவெல்லாம் மழை,புயல் பற்றி வந்துக்கொண்டிருக்கிறது.பல பேரு கவிதை எழுதி கவிதைமழை ஏற்படுத்துறாங்க...!!!!நானும் மழை,புயல் பற்றிய ஓரு செய்திய போட்டுவிடுகிறேன்.சமீப வருடங்களாக, புயல் வரும்போது,அதன் கூடவே ஓரு அழகிய பெயரும் ஓட்டிக்கொண்டு வருகிறது.எனக்கு இந்த புயல்களுக்கு யார் பெயர் வைக்கிறார்கள்? என தெரிந்துக் கொள்ள ஆசை இருந்தது,வழக்கம் போல் நண்பர்களிடமும்,இணையத்திலும் கிளிக்'ய போது எனக்கு கிடைத்த தகவல் ஓரு தொகுப்பாக உங்கள் பார்வைக்கு.

புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் 20ம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் இருந்துள்ளது. அப்போது, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர், தங்களுக்கு பிடிக்காத அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். அமெரிக்காவில் 1954ம் ஆண்டில் புயல்களுக்கு பெயர் சூட்டும் நடைமுறை வந்துள்ளது.

இந்தியாவில் வானிலை ஆய்வு மையங்கள் 1ஏ, 1பி என்று ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி புயலுக்கு பெயர் வைத்து வந்தன.கடந்த 2000ல் உலக வானிலை அமைப்பு மற்றும் பசிபிக் மற்றும் ஆசியாவுக்கான பொருளாதார சமூகக் கமிஷன் நடத்தியக் கூட்டத்தில் வடஇந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தோன்றும் புயல்களுக்குப் பல்வேறு பெயரிடப்படும் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்தியாவில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004ம் ஆண்டில் இருந்து உருவானது.

இந்திய ஆய்வு மையம் சிறப்பு மிக்க வானிலை ஆய்வு மையமாக விளங்குவதால்,இந்தியா தவிர வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் இலங்கைக்கும் வானிலை தொடர்பான முன் அறிவிப்புகளை வழங்கி வருகிறது. வானிலை பற்றிய தகவல்களைத் தரும் போது, புயல்களுக்கு என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதை தெரிவிக் கும்படி, அந்த நாடுகளை கேட்டது. பின்னர் உறுப்பினர் நாடுகள் தெரிவித்த பெயர்களை அகர வரிசைப்படி பட்டியலிட்டுள் ளது.

8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை கொண்ட பட்டியலை தயாரித்திருக்கின்றன.இந்த பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன.புயல் உருவாகி கரை கடந்ததும், பட்டியலில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுகிறது. பிறகு, அந்த நாட்டின் சார்பில் புதிய பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.

எப்படி பட்ட பெயர்களாக இருக்க வேண்டும்?

#பெயர்கள் சிறிய வார்த்தை கொண்டதாவும், உச்சரிப்பதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும்.
#பண்பாட்டிற்கு எதிரானதாகவோ, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது.
#தனிநபர்களின் பெயர்களாகவும் இருக்கக் கூடாது.

புயல்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இடுவதன் நோக்கமே, மக்கள் அவற்றை அடையாளம் கண்டறிந்து எச்சரிக்கையாக இருக்கத்தான். வானிலை ஆய்வு மையங்கள் பல விதமான பெயர்களைச் சூட்டி குழப்பம் உண்டாக்குவதை தடுக்கவும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எண்கள் மற்றும் துறை சார்ந்த சொற்களை நினைவில் வைத்துக் கொள்வதை விட, சிறிய வேறுபட்ட பெயர்கள் மக்கள் மனதில் எளிதில் பதிந்து விடுகின்றன .கடைசியாக வந்த ஜல் ஜில் அனுபவத்தை மட்டுமே சென்னைக்கு தந்தது...!!!!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!
பின்னூட்டம் போடுங்க..!!

15 comments:

 1. பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!

  ReplyDelete
 2. ஒரு அறியப்படாத தகவல். பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 3. @தமிழ் உதயம் said...

  தங்கள் வருகைக்கு நன்றி...!!!

  ReplyDelete
 4. புதுமையான தகவல் புயல்களின் பெயரை பற்றி யோசித்திருக்கிறேன். இப்போது அறிந்துகொண்டேன்!

  ReplyDelete
 5. @எஸ்.கே said...
  தங்களை போல் யோசித்தன் விளைவு இந்த பதிவு...!!!!

  ReplyDelete
 6. புயல் வரும்போதெல்லாம் இந்த பதிவு நினைவுக்கு வரும் ...

  ReplyDelete
 7. @கே.ஆர்.பி.செந்தில் said...
  புயல் வரும்போதெல்லாம்..உங்களுக்கு நினைவு வருகிறதோ இல்லையோ..?எனக்கு வரும்..!
  வருகைக்கு நன்றி..!!!

  ReplyDelete
 8. @வெறும்பய said...

  நன்றி..!!நன்றி...!!!

  ReplyDelete
 9. // எப்படி பட்ட பெயர்களாக இருக்க வேண்டும்?

  #பெயர்கள் சிறிய வார்த்தை கொண்டதாவும், உச்சரிப்பதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும்.
  #பண்பாட்டிற்கு எதிரானதாகவோ, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது.
  #தனிநபர்களின் பெயர்களாகவும் இருக்கக் கூடாது. //

  இந்த தகவல்களை எங்கேயும் கேள்விப்பட்டதில்லை... புதிதாக தெரிந்துக்கொண்டேன்...

  ReplyDelete
 10. @philosophy prabhakaran said...

  தங்கள் வருகைக்கு நன்றி..!!!
  சில விசயங்கள் எனக்கும் பிரமிப்பை மட்டுமே ஏற்படுத்தியது...

  ReplyDelete
 11. neenga edhavadhu oru puyalukku enna name vaippenga..

  ReplyDelete
 12. @Ravi kumar Karunanithi said...
  கண்டிப்பாக என் பெயரோ,உங்க பெயரோ வைக்க மாட்டேன்..!!!!

  ReplyDelete
 13. உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...

  ReplyDelete
 14. //@philosophy prabhakaran said...
  உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...//


  வாய்ப்புக்கு நன்றி..!!எழுத முயற்சிக்கிறேன்...!!!

  ReplyDelete