August 28, 2010

நீதித்துறை - மக்களின் கடைசி நம்பிக்கை
செய்தி: சட்டத்துறை தொடர்பான தேர்வில் காப்பி அடித்த 5 நீதிபதிகள் கையும், களவுமாக பிடிபபட்டனர். தொடர்ந்து 5 பேரையும் சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்தியாவில், நீதித்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு,இது ஆந்திராவில் நடந்த சம்பவம்.எனது நண்பர் ஓருவர் வாயிலாக கேட்டுயிருக்கிறேன்,ஓரு பேப்பர் ஓன்றுக்கு இந்த விலை?(பல ஆயிரங்களில்)என்ற அடிப்படையில் விலை நிர்ணயக்கப்படுமாம்.பல ஆயிரங்களை செலவு செய்து,தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்களாம்.சட்ட கல்லூரி மாணவர்கள் ஏதோ காரணங்களை காட்டி ஸ்ரைக் செய்து கல்லூரியும் போக மாட்டார்கள்,தேர்வையும் காப்பி அடித்தோ(அ)பேப்பருக்கு காசு கொடுத்தோ பாஸ் செய்துவிடுவார்கள்.வெற்றி பெற்று,சட்டத்துறையில் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இந்த வழியில் வந்த வக்கீல் மற்றும் நீதிபதிகள் அவர்களால் மட்டும் எப்படி காப்பி அடிக்காமல் தேர்வு எழுத முடியும்.
எதிர்காலத்தில் இவர்கள் தான் வக்கீல்களாகவும்,நீதிபதியாகவும் வந்து, பின்னாளில் நமக்கு நீதியை போதித்து நீதியை காப்பாற்றுபவர்கள்...!


இந்திய நீதித்துறை,நெறிமுறை இல்லாத, ஒழுக்க கேடான ஆட்களை கொண்டு இயங்கி வருகிறது. ஊழல், லஞ்சம், போன்றவை நீதிமன்றகளில் பாசிகளாய் படிந்துகிடக்கிறது.சட்டம் படித்து சட்டத்தையே மதிக்காதது,உண்மையை பொய்யாக்குவது என்றே வித‌த்தில் மட்டுமே செயல்படுகிறது.


நம்மில் சில பேர் ஏதேனும் வழக்குகளில் சிக்கி, சிக்க வைக்கப்பட்டு நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் வாழக்கையின் பொன்னான நேரத்தை தொலைத்து, லட்சகணக்கில் பணத்தை வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் அழுது கொண்டு, மனநிம்மதியின்றி நீதிமன்ற‌ வாசல்களில் அலைந்து கொண்டு இருகிறார்கள். என்னை பொறுத்த வரையில், இவர்களிடம் வழக்கை கொண்டு செல்வதற்கு பதிலாக கிரிமினல் வழக்கை தவிர்த்து சிவில் வழக்குகளை பாதிக்கபட்டவர்களே பேசி தீர்த்துக்கொள்ளலாம் எந்த கர்வமும் இன்றி.


பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கமுடியாத பிரச்சனை உலகில் ஓன்றுமில்லை. வக்கீல்கள் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது.திறமையான வக்கீல்கள் சிலர் கட்சிகாரர்களின் பணவனப்பை பொறுத்தே வழக்கை எடுத்துக் கொள்கிறார்கள்.வழக்குகாக பணபலத்தைக் கொண்டு எதிர்கட்சிகாரர்களின் வக்கீல்களை வாங்கி கொள்ளும் அவல நிலையும் இருக்கிறது. நாடு நாசமா போறதுக்கு இந்த மாதிரி சிந்தனையுடைய‌ நீதிபதிகளும்,வக்கீல்களும், காவல் துறையும் முக்கிய காரணம்.நீதித்துறையை முழுவது குறை கூறிவிடவும் முடியாது.சில அதிரடியான நல்ல தீர்ப்புக்க்ளையும் கூறியிருக்கிறது.அரசியல்வாதிகளை அதிர வைத்த அறிக்கைகள் வந்துயிருக்கிறது.நேர்மையான‌ நீதிபதிகளும் சில பேர் இருப்பதனால் தான்,இன்றும் சில நியாயங்கள் பிழைத்துக்கொண்டிருக்கிறது.


நீதித்துறை, தன்னை முழுமையாக சுயபரிசோதனை செய்துகொள்ள தயாராக வேண்டும். நாடு முழுவதும் லஞ்ச லாவண்யத்தில் ஊறிக் கொண்டு,தவறு செய்கின்ற‌ நீதிபதிகளை கண்டுபிடித்து,களையெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கையையும் காப்பாற்ற அரசாங்கம் முன்வரவேண்டும்...!


படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 24, 2010

சென்னையும், அதன் தேவையும்


உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றான,சென்னை தமிழகத்தின் தலைநகர் மற்றும் இந்தியாவின் நான்கு பெரு நகரங்களில் ஒன்றாக‌ திகழ்கிற சென்னை உதயமாகி நேற்றோடு 371 ஆண்டுகளாகிய நிலையில்.நம் கண்முண்ணே உள்ள பிரச்சினைகள்:
* மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் குடிநீர்.
* அதிக மக்கள் தொகை அடர்த்தி.
* குடிநீர் பற்றாக்குறை.
* வாகன நெரிசல்.
* சாலைகள் பராமரிக்கப்படாமை.
சென்னை முறையாக திட்டமிட்டு உருவாக்கிய நகரம் அல்ல,சுகாதாரக்கேட்டுக்கும்,போக்குவரத்து நெரிசலும் இதுவே காரணம்.ஏரி மற்றும் வாய்க்கால்கள் அழிக்கப்படுவதால்,குடிநீர் பஞ்சத்தையும்,கடும் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் அப்பகுதியே மிதக்கும் நிலையும் உருவாகிறது.புறகர் பகுதிகள் இஷ்டத்துக்கு அடுக்குமாடி குடியிருப்புகளாக எழுந்து நிற்கிறது.அடிப்படை வசதிகளில் உரிய கவனம் செலுத்தப்பட வில்லை.

பல்கிப் பெருகி வரும் சென்னை மாநகரின் நெரிசலைத் தவிர்க்கவும்,மக்கள் சென்னை நகரின் வசதிகளை வெளியிலும் அனுபவிக்கும் வகையில், சென்னைக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளை இணைத்து மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்கும் திட்டம் வரையறுக்கப்பட்டு,அதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

மாநகரில் தொடர்ந்து சாலைகள் போடுவதால் சாலைகள் உயர்வதை தடுக்கும் வகையில், புதிய நடை முறையில் (“கோல்டு மில்லிங்”) ஒரே நேரத்தில் 1.30 மீட்டர் அகலத்திற்கு சமமாக சாலையை அகழ்ந்தெடுத்து தார் சாலை அமைக்கப்படுகிறது. புதிய மேம்பாலங்கள் போடப்படுகிறது(இது சரியான தீர்வா?).கட்டப்பட்ட சில மேம்பாலங்களால் பயன் உள்ளதாகவே தெரிகிறது.(மேம்பாலங்கலால் பெரிய சாலைகள் குருகிய சாலைகளாக காட்சி அளிப்பது வேறு).போக்குவரத்து விதிகளை கடுமையாக ஆக்கப் பட்டு,இடையுறாக சாலையிலேயே வியாபாரம் நடக்கிறது.அதை சரி செய்ய முயல வேண்டும்.

பூங்காக்கள் பல நிறுவப்பட்டு,பளிச்சென்று இவை காணப்படுகின்றன. பலரும் வாக்கிங் போக இவற்றை பயன்படுத்துகிறார்கள்.நல்ல விஷயம்.

செம்மொழி மாநாட்டின் பயனாக,மாநகரில் அழகு தமிழில் பெயர் பலகைகள் நம்மை பார்த்துக் கண் சிமிட்டுகிறது.இந்த மாநாடு தேவையா? இல்லையா? என்று மற்றொரு பதிவில் விவாதித்துக்கொள்ளலாம்.

மாநகராட்சி ஓரளவு சிறப்பாக நடைபெறுவது போல தெரிகிறது,மாநகர தந்தை "Zee Tamil" தொலைக்காட்சியில் வந்து, மக்களோடு நேரடியாக பேசுவது ஆறுதலான விசயம்.
சமீபத்தில் வெளியான‌ "மதராசபட்டிணம்” திரைப்படத்தில் கூவம் ஆற்றில் மக்கள் படகில் செல்வது போல் காண்பிக்கப்படுகிறது,அதை பார்த்த சென்னையை அறிந்த உள்ளங்கள் இப்போது அப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்று ஏக்கமாக பார்த்தவர்கள் ஏராளம்...!கூவம் நதியில் பல்வேறுப்பட்ட கழிவுகள் கலப்பதால்தான் கூவம் சாக்கடையாக காட்சியளிக்கிறது.

கூவத்தினால் நாமுடைய சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.இது சாக்கடையாக மாறி நதி ஓட்டம் இல்லாததனால்,பெரும் வெள்ளம் வரும் காலத்தில் சரியான வடிகாலாக இல்லாத நிலையும் மற்றும் கொசு உற்பத்தியாகி மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

கடந்த 40, 50 வருடங்களாக அரசு 3 திட்டங்களைத் தீட்டி அதில் முழுவதுமாக தோல்வியைக் கண்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த‌ தோல்வி எத‌னால்?ஏற்ப‌ட்ட‌து என‌ ஆராய்ந்து,அதை க‌ளைந்து அர‌சு "கூவத்தை அழகுபடுத்துதல்" தீட்ட‌த்தை வெற்றி பெற‌ச் செய்தால் ந‌ன்றாக‌ இருக்கும்.

அரசும்,மாநகரை அழகுபடுத்துதல் மட்டுமின்றி,ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டவேண்டும் மற்றும் தினமும் பல ஆயிரம் பேர் குடியேறும் மாநகர வளர்ச்சி மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்திடல் வேண்டும். இதற்கெல்லாம் தீர்வு....?அரசினின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் மக்களாகிய நாமும்.

நம் நகரை சுத்தமாக வைத்து கொள்வதில் நமக்கும் பங்கு உண்டு என்பதை மறக்க கூடாது.நம்முடைய கடமையும் முக்கியம்.வெறுமனே குற்றம் கூறுவது அழகல்ல.நாம் முன்னோடியாக இருந்து செயல் பட வேண்டும்.உரிய திட்டமிடல் நமது முக்கிய தேவை.அதை பின்பற்றுதல் அதனினும் முக்கிய தேவை.இத்தனை நிறைய‌ குறைகளோடு,சென்னையில் வசிக்கும் மக்களில் நானும் ஓருவன்...!!!

போட்டோ கமெண்ட்:
சென்னை மாநகராட்சி கட்டிடம்(ரிப்பன் பில்டிங்)

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 20, 2010

இன்றைய எம்.ஜி.ஆர்.?


து தனிமனித வ‌ழிபாடு,தாக்குதல் பற்றிய பதிவல்ல...!

எம்.ஜி.ஆரின் புகழ்,வசீகரம்,வெற்றிக்கு அடிப்படையாகவும்,இன்றைய எம்.ஜி.ஆராக உருவாக என்னென்ன தகுதிகள் வேண்டும்? எண்ணியதன் விளைவு...இந்த பதிவு..!
"ஓருவன் எந்த செயலைத் தொடங்கினாலும்,அதனால் அழிவதையும்,அழிந்த பின் ஆவதையும் பின்பு உண்டாகும் ஆதாயத்தையும், அறிந்து செய்ய வேண்டும்" என்றதை பயன்படுத்தியவராக எம்.ஜி.ஆர் தெரிகிறார்.
மக்களால், வெவ்வேறு முறைகளில் நம்பிக்கை ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. சிலர் இறைவனிடம் வைத்திருக்கும் நம்பிக்கை அல்லது ஏதாவது பிரபஞ்ச சக்தி என்றும் அல்லது ஓரு பிரத்தியோகமான காப்பாற்றுபவர் அல்லது மதக்கோட்பாடு அல்லாத ஓருவர், அவரது உயர்ந்த, சொந்தத் தனித்தன்மையில் நம்பிக்கை வைத்தல் அப்படியாக உயர்ந்த செல்வாக்கை ஏற்படுத்த சினிமா பிம்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றவராக எம்.ஜி.ஆர்.
அறியாமையில் உழலுபவர்கள் நம்பிக்கையில்லாதவர்கள், அறியாமை ஓர் விதத்தில் கல்வி கற்காமை போன்று பொருளாதாரத்தை சார்ந்தாகவும் இருக்குமோ? என்று கருதுகிறேன்.அறியாமையை நம்பிக்கையாக மாற்றக்கூடிய சக்தி எம்.ஜி.ஆரிடம் இருந்திருக்க வேண்டும்."நம்பிக்கை","விசுவாசம்" என்ற இரண்டு பிரிக்க முடியா முகங்களை பற்றிய புரிதல் அவருக்கு இருந்திருக்க வேண்டும்.
நம்பிக்கையை தொழில்(சினிமா) சாராத மக்களிடத்திலும், விசுவாசத்தை தொழில் சார்ந்த மக்களிடத்திலும் ஏற்படுத்திருக்க வேண்டும். இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து பொருளாதார துணையோடு ஓர் வசீகரத்தை உருவாகிருக்கவேண்டும்.நம்பிக்கையும்,விசுவாசமும் கைகோர்த்து சுமுகமான மனித உறவிற்கும், ஓர் இணக்கமான சமூக செயல் திறனுக்கு அடிப்படையாக மாறியிருக்க வேண்டும்.
சினிமா வெளிச்சமும், பத்திரிக்கை ஊடகமும், செவி வழி கதை சொல்லிகளும்(ஊருக்கு நாலு பேர் அருமை,பெருமைகளை, தங்கள் கற்பனைகளோடு எடுத்துச் சொல்லி ஆலமரத்தடிகளிலும், திண்ணையிலும் பேசியவர்கள்). எதிர்மறை செய்தி வராமல் பார்த்துக் கொள்ள விசுவாசிகளும், பொருளாதாரமும் கை கொடுத்திருக்க வேண்டும்.இது தான் அர‌சிய‌லில் வெற்றிக் கொடியை ப‌ற‌க்க‌விட்டிருக்கும்.என் பார்வையில் ந‌ம்பிக்கையை ஏற்ப‌டுத்தி,விசுவாச‌த்தை உருவாக்கி வெற்றி பெற்ற‌வ‌ராக‌ எம்.ஜி.ஆர்.
இன்றைய காலகட்டத்தில்,பொருளாதாரத்தை கொண்டு "நம்பிக்கை","விசுவாசத்தை" உருவாக்குவது எளிதான காரியமல்ல.ஓவ்வொரு செயலிலும் பொருளாதாரத்தை ஓட்டிய‌ சிந்தனையில் இன்றைய மக்கள்.சினிமா ரசிகனும் சினிமா பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு போய்விடுவான்.அறிந்தும்,அறியாமையில் இருப்பது போல மக்கள் மனநிலை என்பது தான் நிதர்சனமான உண்மை.சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று,இன்றைய எம்.ஜி.ஆராக‌ உருவாவது....?


போட்டோ கமெண்ட்:
சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 18, 2010

சரி செய்யுமா இரயில்வே நிர்வாகம்?


தமிழகத்தில்,சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் இரண்டு வகையான பயணம் வசதி இருக்கிறது. ஓன்று முதல்வகுப்பு பயணம் மற்றொன்று இரண்டாம்வகுப்பு பயணம்.பிளாட்பார கவுண்டரில் நாம் பயணம் செய்ய வாங்கினால் இரண்டாம் வகுப்பு டிக்கெட்களே தரப்படுக்கிறது. முதல் வகுப்பு டிக்கெட்டுக்கும் இரண்டாம் வகுப்புக்கு டிக்கெட்டுக்கும் விலையில் இரண்டு மடங்கு வித்தியாசம் இருக்கும்.பெரும்பாலும் சீசன் டிக்கெட் எடுப்பவர்கள் கூட்டத்திற்கு பயந்து முதல்வகுப்பு சீசன் டிக்கெட் எடுத்துவிடுபவர்கள் உண்டு.

இது சொல்ல வந்த மேட்டர் இல்ல....ஊரில் இருந்து அதாவது மற்ற மாவட்டங்களில் இருந்து(மின்சார ரயிலை பயன்படுத்தாதவர்கள்) வருபவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால், அவர்களுக்கு இரண்டு வகையான டிக்கெட் விபரம் தெரித்திருக்க வாய்ப்பில்லை.டிக்கெட் கவுண்டரில் வாங்கிய இரண்டாம்வகுப்பு டிக்கெட் கையில் வைத்திருப்பார்கள், ரயில் வந்தவுடன் ஏதோ பெட்டியில் ஏறிவிடுவார்கள்.ஏறிய பெட்டி முதல்வகுப்பாயிருந்தால் அடுத்த ரயில்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பிடித்து,இறக்கி பைன் கட்டச் சொல்லுவார்கள்.மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்தியவர்களுக்கு தெரியும்,ரயில்நிலைய பரிசோகர் அறையில் இருந்து பரிசோகர் பார்த்துவிட்டு"மானை பிடிக்க பாய்கிற புலியை" போல பாய்வார்கள்.நீங்கள் ரயில்நிலையத்தில் கவனித்தீர்கள்ளானால்,பரிசோதகர் அறையில் பைன் கட்ட சொல்லி வாக்குவாதம் நடந்துக்கொண்டிருக்கும்,பிடிப்பட்ட நபர்களை பார்த்தால் தெரியும் கண்டிப்பாக மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்தாதவர்கள் இருப்பார்கள்.
ஏன் அவர்கள் மட்டும் இப்படி தவறுதலாக ஏறி மாட்டிக்கொள்கிறார்கள்? என்று நான் யோசித்தப்போது, ரயில்வே நிர்வாகம் விளக்கமான விளம்பரப்பலகைகள் வைப்பதில்லை. ரயிலில் பெட்டிகளில் இரண்டாம்வகுப்பு பெட்டிக்கும்,முதல் வகுப்பு பெட்டிக்கும் வர்ணத்தால் வித்தியாசப்படுத்தி இருப்பார்கள்.அந்த வித்தியாசம் பெரிதாக பெட்டிகளை வேறுபடுத்தி காட்டுவதில்லை. அதிகம் பேருந்தை பயன்படுத்தியவர்களுக்கு இந்த வேறுபாடு புரிவதில்லை.
இரயில்வே நிர்வாகம் முதலில் கண்ணில்படுகிறபடி விளம்பரபலகைகள் வைக்கவேண்டும். மற்றும் இப்படியாக மாட்டிக்கொள்ளும் அப்பாவிகளை விளக்கம் சொல்லி எச்சரித்து அனுப்பலாம்.(அவர்கள் தெரிந்து ஏறியிருக்க வாய்ப்பில்லை).இதை சரி செய்யுமா ரயில்வே நிர்வாகம்?ரயில்வே பற்றி நிறைய எழுதலாம்...இப்பொ இதுமட்டும்....

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 16, 2010

காப்பி குடிக்கலாம் வாங்க‌


நாம் அன்றாடம் பயன்படுத்தும் விசயங்களை நாம் கூர்ந்து கவனிப்பதில்லை.சில விசயங்களை கவனிக்கும்போது ஆச்சரியப்படுத்தும் செய்திகள் நமக்கு கிடைக்கும்.சிலருக்கு காலையில் எழுந்தவுடன், காப்பி இல்லையேன்றால் வேலையே ஓடாது."ஸ்ராங்க காப்பி குடிச்சா தான் தலைவலி விடும்" என்ற நம்பிக்கை கொண்டவர்களை நான் பார்த்துயிருக்கிறேன். காப்பியைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டு இணையத்தில் தேட ஆரம்பிக்க கிடைத்தது ஓர் பதிவு.(200 மில்லி லிட்டர்) காப்பி குடித்தாலே அதில் 80-140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கிறது என்று நாம் அறிந்ததே.

ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள். ஆடுகள் காப்பிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு தாங்களும் அவ்வாறே உண்டு காப்பியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள்.எத்தியோப்பியாவில் இருந்து இக்கண்டுபிடிப்பு எகிப்துக்கும் ஏமன் நாட்டிற்கும் பரவியது. அதன் பின்னர் ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டளவில் பெர்சியா, துருக்கி, மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கும் பரவியது.
காப்பி உலகில் மிகவும் அதிகமாக பருகுகும் நீர்ம உணவுகளில் ஒன்றாகும். 1998-2000 ஆண்டுகளில் உலகில் ஆண்டொன்றுக்கு 6.7 மில்லியன் டன் காப்பி விளைவிக்கிறார்கள். இது 2010ல் 7 மில்லியனாக உயரும் என்று கருதுகிறார்கள்.
உலகிலேயே அதிகமாக விற்று-வாங்கக்கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காப்பிதான். மொத்தமாக கடைவிலை மதிப்பில் (retail value) ஆண்டுக்கு 70 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். காப்பி, உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில் சற்றேறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்படுகின்றது. இன்று ஏறத்தாழ 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காப்பிப் பயிரை ஒட்டி நடக்கின்றது.

காப்பி விளைச்சலில் முதல் பத்து இடங்களை வகிக்கும் நாடுகள் 2005ம் படி எடுத்த கணக்கின்படி நாம் 6 வது இடத்தில் இருக்கிறோம்.இன்னும் நிறைய மேட்டர் இருக்கு....பதிவு பெரிசா போகும்...அதான்...ஓகே..ஓர் கப் காப்பி குடிக்கலாம் வாங்க...!

போட்டோ கமெண்ட்:

3D-Art Effectல்
காப்பியுடன் கப்
படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 12, 2010

108 அவசர சிகிச்சை சேவையிலும் லஞ்சம்


தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவி சேவை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை, நோயாளிகளின் விருப்பமின்றி கட்டாயமாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து லஞ்சம் பெற்றுக் கொள்வதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதாகவும். தவறு செய்த ஒன்பது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு, நான்கு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது.மேலும் 108 ஊழியர்கள் பணம் கேட்டாலோ, லஞ்சம் பெற்றிருந்தாலோ 108 இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளது.இப்பொழுதோ இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.வளரவிட்டால் எதிர்க்காலத்தில் நமக்கு ஆபத்து.இது போன்ற சமயத்தில் லஞ்சம் கேட்டால்,நாம் இருக்கும் அவசரத்தில் கொடுத்துவிடுவோம்.இதுபோன்றோர்களிடம் உரக்க கத்திக் கேளுங்கள்."எதற்கு தர வேண்டும் பணம்?" என்று..!
புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கவாபோகிறார்கள்? என்று விட்டுவிட வேண்டாம்.நமது எதிப்பை பதிவு செய்துவிடுங்கள்.என்ன ஒரு அரக்கக் குணம் பாருங்கள் ! அல்லாடிக் கொண்டிருக்கும் ஒரு உயிரையோ, உற்றாரையோ பற்றிச் சற்றும் கவலையின்றி, என்ன அரக்கத்தனம். யார் எப்படி?என்ன? ஆனால் என்ன பணத்தைப் பிடுங்கித் தன் வயிறை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
இதே நிலைதான் பிணகிடங்கு வேன் ஊழியர்களிடமும் ! பிணத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசும் பல ஜாதிக் கழிசடைகள் !அவர்கள் குடும்பத்தருக்கு அவசர உதவி தேவை படும் போது இவர்களின் சக உழியர்கள் இவர்களிடமே லஞ்சம் கொடுக்கும் போது தான் இவர்களுக்கு புரியுமோ?..

எனது இரண்டவது பதிவு இது...! படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

நமது பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை :


தொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் பார்ப்பவரா .. எங்களுக்கு எல்லாம் வெற வேலையே இல்லையா? என்று கோபப்படக்கூடாது.அப்படி பார்த்துக்கிட்டு, படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு தான் கீழே உள்ள மேட்டர்...அப்படி மொய்பவர்களுக்கு இருதயம் சம்மந்தமான நோய் வரும் என அமெரிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என நாளிதழ் ஓன்றில் செய்தி வந்துள்ளது.
அமெரிக்காவின் டெய்லி மெயில் எனும் மருத்து இதழின் ஆசிரியர் டேவிட் டஸ்டன் கூறுகையில்... நாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டரில் பணி செய்வதன் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இணையதளத்தில் முழ்கிவிடுவோம் அவ்வாறு நாள் ஒன்றுக்கு 23 மணிநேரமும் சைட் பார்ப்பவர்களுக்கு 65 சதவீத இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இது சாதாரணமாக 11 மணிநேரம் சைட் பார்ப்பவர்களைவிட அதிகம் ஏற்படும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக நாம் நடக்கும் போது, நிற்கும் போது கால்களில் தசைகளில் வேலை செய்கின்றன. இதன் மூலம் உடலில் நம் இதயத்தில் செல்லக்கூடிய ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு சீராக உள்ளது. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் போது தான் உடல் ஆக்கச்சிதைவு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இருதயம் பலவீனமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது போன்று ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பதும் அதற்கு காரணமாகும். ஆகவே சிறிது நேரம் எழுந்து நிற்பது தான் சிறந்தது எனவும் அறிவுறுத்துகின்றனர்.பெண்களில் ஆறு மணிநேரத்திற்கு மேல் பணியாற்றினால் 37 சதவீதமும், ஆண்களுக்கு 18 சதவீதமும் அதிகரிக்கும் என அமெரிக்காவின் மயோ மருத்துவமனையின் மருத்து பேராசிரியர் ஜேம்ஸ் லேவின் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதை படிக்கும் போது "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நச்சு" என தோன்றுகிறது.இப்போதொல்லாம் பத்திரிக்கை,தொலைக்காட்சி போன்றவற்றில் இதை செய்யாதால் அது வரும்,அதை செய்தால் இது வரும் என்றெல்லாம் வருகிறது.இது போன்று செய்திகளை படிக்கும் போது எனக்கு மனதில் தோன்றும் எண்ணம், இதையொல்லாம் யார் யார் கடைபிடிப்பார்கள் என்று....அந்த செய்தியை படித்தவர்கள் எல்லோருமா? இல்லை படித்துவிட்டு அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்ணவா? நான் எந்த ரகம் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை என நினைக்கிறேன்...

போட்டோ கமெண்ட்:
அந்த அம்மணிய எத காட்டி,சொல்லி சிரிக்க வச்சியிருப்பான்...! அது அவர் அவர் எண்ணத்தை பொறுத்தது....!

எனது முதல் பதிவு இது...! படிச்சிட்டு ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!