August 28, 2010
நீதித்துறை - மக்களின் கடைசி நம்பிக்கை
செய்தி: சட்டத்துறை தொடர்பான தேர்வில் காப்பி அடித்த 5 நீதிபதிகள் கையும், களவுமாக பிடிபபட்டனர். தொடர்ந்து 5 பேரையும் சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்தியாவில், நீதித்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு,இது ஆந்திராவில் நடந்த சம்பவம்.எனது நண்பர் ஓருவர் வாயிலாக கேட்டுயிருக்கிறேன்,ஓரு பேப்பர் ஓன்றுக்கு இந்த விலை?(பல ஆயிரங்களில்)என்ற அடிப்படையில் விலை நிர்ணயக்கப்படுமாம்.பல ஆயிரங்களை செலவு செய்து,தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்களாம்.சட்ட கல்லூரி மாணவர்கள் ஏதோ காரணங்களை காட்டி ஸ்ரைக் செய்து கல்லூரியும் போக மாட்டார்கள்,தேர்வையும் காப்பி அடித்தோ(அ)பேப்பருக்கு காசு கொடுத்தோ பாஸ் செய்துவிடுவார்கள்.வெற்றி பெற்று,சட்டத்துறையில் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இந்த வழியில் வந்த வக்கீல் மற்றும் நீதிபதிகள் அவர்களால் மட்டும் எப்படி காப்பி அடிக்காமல் தேர்வு எழுத முடியும்.
எதிர்காலத்தில் இவர்கள் தான் வக்கீல்களாகவும்,நீதிபதியாகவும் வந்து, பின்னாளில் நமக்கு நீதியை போதித்து நீதியை காப்பாற்றுபவர்கள்...!
இந்திய நீதித்துறை,நெறிமுறை இல்லாத, ஒழுக்க கேடான ஆட்களை கொண்டு இயங்கி வருகிறது. ஊழல், லஞ்சம், போன்றவை நீதிமன்றகளில் பாசிகளாய் படிந்துகிடக்கிறது.சட்டம் படித்து சட்டத்தையே மதிக்காதது,உண்மையை பொய்யாக்குவது என்றே விதத்தில் மட்டுமே செயல்படுகிறது.
நம்மில் சில பேர் ஏதேனும் வழக்குகளில் சிக்கி, சிக்க வைக்கப்பட்டு நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் வாழக்கையின் பொன்னான நேரத்தை தொலைத்து, லட்சகணக்கில் பணத்தை வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் அழுது கொண்டு, மனநிம்மதியின்றி நீதிமன்ற வாசல்களில் அலைந்து கொண்டு இருகிறார்கள். என்னை பொறுத்த வரையில், இவர்களிடம் வழக்கை கொண்டு செல்வதற்கு பதிலாக கிரிமினல் வழக்கை தவிர்த்து சிவில் வழக்குகளை பாதிக்கபட்டவர்களே பேசி தீர்த்துக்கொள்ளலாம் எந்த கர்வமும் இன்றி.
பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கமுடியாத பிரச்சனை உலகில் ஓன்றுமில்லை. வக்கீல்கள் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது.திறமையான வக்கீல்கள் சிலர் கட்சிகாரர்களின் பணவனப்பை பொறுத்தே வழக்கை எடுத்துக் கொள்கிறார்கள்.வழக்குகாக பணபலத்தைக் கொண்டு எதிர்கட்சிகாரர்களின் வக்கீல்களை வாங்கி கொள்ளும் அவல நிலையும் இருக்கிறது. நாடு நாசமா போறதுக்கு இந்த மாதிரி சிந்தனையுடைய நீதிபதிகளும்,வக்கீல்களும், காவல் துறையும் முக்கிய காரணம்.
நீதித்துறையை முழுவது குறை கூறிவிடவும் முடியாது.சில அதிரடியான நல்ல தீர்ப்புக்க்ளையும் கூறியிருக்கிறது.அரசியல்வாதிகளை அதிர வைத்த அறிக்கைகள் வந்துயிருக்கிறது.நேர்மையான நீதிபதிகளும் சில பேர் இருப்பதனால் தான்,இன்றும் சில நியாயங்கள் பிழைத்துக்கொண்டிருக்கிறது.
நீதித்துறை, தன்னை முழுமையாக சுயபரிசோதனை செய்துகொள்ள தயாராக வேண்டும். நாடு முழுவதும் லஞ்ச லாவண்யத்தில் ஊறிக் கொண்டு,தவறு செய்கின்ற நீதிபதிகளை கண்டுபிடித்து,களையெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கையையும் காப்பாற்ற அரசாங்கம் முன்வரவேண்டும்...!
படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுலகத்துக்கு புதியவன்...!பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!
ReplyDeleteநண்பரே நீதியாவது வெங்காயமாவது..
ReplyDeleteநடக்கும் தவறுகளை மனதி வைத்து உடனடியாக தண்டனைகளை கொடுத்தல் ஏன் தவறுகள் செய்கிறார்கள்...
இன்னும் சொல்லப் போனால் நீதிதுறையிலையே நேர்மை இல்லை.. . வேறெங்கு போய் நியாயம் கேட்ப்பது..
எல்லா துறைகளிலும் குறுக்கு வழிதான் சுலபம் என்றாகிவிட்டது ...
ReplyDeleteThank you for inviting me to visit your blog. Followed and voted. :-)
ReplyDeleteBest wishes!!!
வாழ்த்துக்கள்... சகோதரா..
ReplyDeleteநல்ல விஷயங்கள் எழுத வ்ந்திருக்கிங்க! வாழ்த்துக்கள்! புதிய தலைமுறை உயிர் துடிப்புடன் இருப்பதை பார்க்க ஆனந்தமாக இருக்கிறது.
ReplyDeleteநாம் எந்த வகையிலும் ஊழலை ஆதரிக்காத நிலையை கைகொள்ளுவோம். charity begins at home! அடுத்த தலைமுறைகள் மேம்பட்ட தலைமுறையாக அமைய நாம் தான் பாடுபட வேண்டும்.
வாழ்த்துக்கள்! வளருங்கள்!
வெற்றி, உங்கள எழுத்து நடை நன்றாக இருக்கிறது.புது விஷயங்கள் எழுதுங்கள்.வாழ்த்துக்கள்
ReplyDelete@மோகன்ஜி
ReplyDeleteவந்து வாழ்ந்திமைக்கு நன்றி...
உங்கள எழுத்து நடை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபுது விஷயங்கள் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.