November 28, 2010

வெற்றி டைம்ஸ் 29/11/2010


ஜெயலலிதா Vs ஸ்டாலின்..?
ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் அடுத்த முதல்வர் யார் என்று ஒரு சர்வே பற்றி கேபிள் சங்கர் எழுதியிருக்கிறார்.கலைஞரா?ஜெயலலிதாவா? என்ற சர்வே மாற்றாக ஸ்டாலினா? ஜெயலலிதாவா? என்ற கேள்விக்கு வித்யசமான ரிசல்ட் கிடைக்கும் என்று சொல்கிறார்.இதை நானும் வழிமொழிகிறேன்.ஸ்டாலின் துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றுவதாகவே தெரிகிறது.தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக "முதல்வர் வேட்பாளர்" ஸ்டாலின் என்று களத்தில் இறக்கிவிட்டால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது..!
----------------------------------------------------------------------------------------
சமூக கொடுமை
செப்டிக் டேங்க்குகளை சுத்தம் செய்யவோ, இதற்கான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யும் பணிகளிலோ, எக்காரணம் கொண்டும் நேரடியாக துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்த பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தடை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மனித கழிவுகளை மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது சமூக நோக்கில் மிகவும் கொடுமையான விசயம்.இந்த உத்தரவுக்கு பின்னால் நாராயணன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு கிடைத்த வெற்றி இது..!சமூக அக்கறைக் கொண்ட தனி மனிதன் நாராயணணுக்கு நன்றி..!!!
-------------------------------------------------------------------------------------
பேஸ்புக் VS கூகுள்?
முகபுத்தக நிறுவனம் அதாங்க பேஸ்புக் தற்போது, இ-மெயில் சேவையிலும் நுழைந்துள்ளது என்றும்.பேஸ்புக் வலைதளத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. "ஸ்பாம்' மெயில்கள் இதில் வடிகட்டி அனுப்பப்படுவது இதில் சிறப்பம்சமாக கூறப்படுகிறது.இது கூகுள் மெயிலுக்கு போட்டியாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.என்னை பொருத்தவரை கூகுளை அவ்வளவு எளிதில் யாரலும் மிஞ்ச முடியாது..!!!விட்டா பட்டி தொட்டி எல்லாம் சொல்லுவான் கூகுள் பத்தி..!
------------------------------------------------------------------------------------

குடும்ப சண்டை
நடிகர் விஜயகுமார் வீட்டில் குடும்ப பிரச்சனை.மகளால இப்ப சந்தி சிரிக்குது. பழைய பகையை தீர்த்துக்கொள்ளுது ஓரு பேப்பர் குரூப்..!!!இன்னும் என்ன என்ன‌வெல்லாம் வரும் என்று?தினமும் பேப்பர படிக்குது ஓரு குரூப்..!!எப்பா அந்த புள்ளைய கூப்புட்டு சமாதான பேசுங்கப்பா..!ஆ..உனான்னா அடுத்தவன் உட்டு கதய ஆரம்பிப்பாளாம் ஆச்சி..!(ஹி..ஹி..."பஞ்ச்"பழமொழி தெரியல அதான்..!)
--------------------------------------------------------------------------------
பெட்ரோல் கொள்ளை
நேற்று கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வந்துக்கொண்டிருந்தேன்,பள்ளிக்க‌ரனை பாலம் ஏறி,இறங்கிய‌வுடன் எனது டூவீலருக்கு(Apache)பெட்ரோல் போட பங்குக்கு சென்றேன். பணம் கொடுப்பதாகட்டும்,பெட்ரோல் போடும் மீட்டராகட்டும் மற்றும் பெட்ரோல் போடும்போதாகட்டும் கவனமாக கவனித்தேன்.இதுல என்ன செய்திருக்கு? அப்படின்ன நினைக்க வேண்டாம்.சென்னையில பெட்ரோல் பங்குல நடக்குர மேட்டர பத்தி எனது நண்பர் என்னிடம் சொன்ன விசயம் கீழே:
உ.தா: நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்கிறீர்கள் என்றால் பங்குகளில் பணத்தை வசூல் செய்யும் நபர் உங்களிடம் 100 பணத்தை வாங்கிக்கொண்டே பெட்ரோல் போடச் சொல்லுவார் பங்கு பைப் பிடித்துக் கொண்டிருப்பவரிடம்,அவர் நமக்கு முன்னால் "0" ஆக்கிவிடுவார்,ஆனால் அவர் செட் பண்ணியிருப்பது "50ரூ"க்கு செய்திருப்பார்.நம்மிடம்"0" பார்த்துக்கொள்ள சொல்லிக்கொண்டே,நீங்கள் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் அவர் பெட்ரோல் போட ஆரம்பிப்பார்.அதே சமயம் பணம் பெற்றுக் கொண்டவர்"நம்மிடம் பேச ஆரம்பிப்பார்"..."வண்டி என்ன மைலேஜ் தருது சார்?" மற்றும் "வண்டி லாங் டிராவல் சுமூத்தா இருக்குதா சார்?"என்ற ரீதியில் இருக்கும்.அதற்குள் "50"க்கு போட்டுவிட்டு மீண்டும் "0" ஆக்கிவிடுவார் பெட்ரோல் போடுபவர்.இப்படி பல தினுசு தினுசா யோசிச்சி அடிக்குராங்களாம்.அதோடயில்ல பேசுற‌வன் வாய பார்த்த நம்ம பணம் இப்படி தான் போகுமாம்"?
-------------------------------------------------------------------------------------
மறுசூழர்ச்சி பற்றிய வீடியோ,இதில் வரும் பாடலும்,இசையும் நன்றாக இருக்கிறது.இசை ஜாக் ஜான்சன்...


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!

November 26, 2010

எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள் (தொடர் பதிவு)



தம்பி பிலாசபி பிரபாகரன் என்னை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார்.தலைப்பாக "எனக்கு பிடித்த 10 கமல் படங்கள்" கொடுத்திருந்தார்.
நான் சிறுவயதில் இருந்து ரஜினி படங்கள் பார்த்த அளவுக்கு கமல் படங்கள் பார்த்ததில்லை...!!!இருந்தாலும் என்னை கவர்ந்த,பிடித்த‌ கமல் படங்களும் இருக்கின்றன,எண்ணிக்கையில் பத்தை தாண்டும்.நினைவில் உள்ளதை எழுதுகிறேன்,10 படங்களுக்கு மிகாமல் எழுதுகிறேன்.அது போல புது படத்திற்கு விமர்சனத்திற்கும்,பழைய பட விமர்சனத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.ஏறக்குறைய எல்லோராலும் பார்க்கபட்டிருக்கும்...!!!பலராலும் ரசிக்கப் பட்ட விசயத்தை நாம் ரசித்து எழுதாமல் விட்டால் எப்படி இருக்கும்?வரிசை எண்க்கும் பிடித்த படங்களுக்கு சம்பந்தமில்லை.

* சத்யா
* அபூர்வ சகோதரர்கள்
* குணா
* தேவர் மகன்
* மகாநதி
* குருதிப்புனல்
* இந்தியன்
* ஹே ராம்
* அன்பே சிவம்
* விருமாண்டி


1.சத்யா:

சத்யா வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரி மற்றும் கோபக்கார‌ இளைஞனாக நடித்திருப்பார்.சமுதாயத்தில் நடக்கும் பல அட்டூழியங்களை கண்டு பொங்கியொழும் கேரக்டராக வாழ்த்திருப்பார்.இதில் அவருடைய ஹேர்ஸ்டையில் பிரமாதமாக இருக்கும்.அமலா ஜோடியாக நடித்திருப்பார்.நண்பன் கொலைக்கு சாட்சி சொல்ல பொதுமக்களை கூப்பிடும் காட்சியில் கூர்மையான வசனங்கள் கையாண்டிருப்பார்கள்.கமலோட முக பாவனை ஏமாற்றத்தோடும்,வெறுப்போடும் வசனம் பேசி நடித்திருப்பார்."வளையோசை கல கலவென" என்ற பிரபல படலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர் பாடிருப்பார்கள்.இது தான் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிற்கு முதல்படம்.

2.அபூர்வ சகோதரர்கள்:


கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.ஏன் மூன்று வேடங்களில் (அப்பா கமலையும் சேர்த்து,அவர் அணிந்து வரும் காவல்துறை உடை நன்றாக இருக்கும்.) நடித்திருப்பார்.புத்திசாலிதனமாக தனது அப்பாவை கொன்றவர்களை பழி வாங்குபவராக குள்ள உருவத்தில் நடித்து அசத்திருப்பார்.உயரமாக வரும் ராஜா கேரக்டரிலும் மின்னிருப்பார்."ராஜா கைய வச்சா" மற்றும் "உன்ன நினைச்சேன்" பாடலும் இளையராஜாவின் இசையில் கேட்க இனிமையாக இருக்கும்.

3.குணா:


கமல் மனநோயாளியாக நடித்திருப்பார்.நண்பன் வற்புறுத்தலால் கோவிலுக்கு கொள்ளையடிக்க செல்லுமிடத்தில்,தன் கனவில் பார்த்த பெண்"அபிராமி"என நினைத்து மலைக்கு கடத்திச்சென்று காதல் மழை பொழிவார்.பல திருப்பங்களுக்கு பிறகு கடைசியில் நாயகியின் ‌சொத்துக்களை அடைய விரும்புப‌வன் அவளைச் சுட்டு வீழ்த்துகின்றான்.தனது காதலி மடிந்து கிடப்பதைப் பார்த்த குணா அவள் உடலைத் தூக்கியவாறு தற்கொலை செய்து கொள்வதாக படம் முடிவடையும்.மனநோயாளியாக மிக பிரமாதமாக நடித்திருப்பார்.பிறகு வந்த கதாநாயகன் மனநோயாளியாக காட்ட படங்களுக்கு முன்னோடி படம் இது.படம் வந்தபோது "அபிராமி,அபிராமி" என்ற வசனம் மிகவும் புகழ் பெற்றது."கண்மணி அன்போடு காதலன்" என்ற வாலி பாடலை கமல் மற்றும் ஜானகி பாடியிருப்பார்கள்.எனக்கு மிகவும் பிடித்த காட்சியாக "பார்த்த விழி" பார்த்தடி" என்ற பாடலும்,அது இடம்பெறும் காட்சிகள் படமாக்கிய விதமும்.இளையராஜாவின் "பிஜிம்" மனதை வருடும் விதமாக இருக்கும்.

4.தேவர் மகன்:


வெளிநாட்டில் படித்து கிராமத்துக்கு காதலியோடு வருவார் கமல்.கிராமத்தில் நடைபெறும் பங்காளி சண்டையை கண்முன் நிறுத்திருப்பார் இயக்குனர்.இதில் கமலும்,சிவாஜியும் கிராமத்து மனிதர்களாக வாழ்த்திருப்பார்கள்.பிடித்த காட்சிகளாக‌ எழுதினால்,ஏறக்குறைய படம் முழுவதும் எழுத வேண்டும்.பஞ்சவர்ணமாக நடித்த ரேவதி மற்றும் கவுதமி
என்று எல்லோருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.எனக்கு எல்லா பாடல்களும் பிடிக்கும்.

5.மகாநதி:

கமல் படங்களிலே என்னை ரொம்பவும் கவர்ந்த படம்.முதன்முதலில் சினிமா சூட்டிங் பார்த்த படம்.நான் கும்பகோணத்தில் ஸ்கூல் படிக்கும் போது,பக்கத்தில் மகாநதி சூட்டிங் நடந்தது.அங்கே "ஸ்ரீதேவி தேவி ரெங்க ரெங்க நாதனின் பாதம்" என்ற பாடல் எடுக்கப்பட்டது.கமல் மற்றும் சந்தானபாரதி இருவரையும் பார்த்தேன்.படம் மிக அம்சமான காட்சிகளுடனும்,சிறப்பான வசனங்களுடனும் எடுக்க பட்டிருக்கும்.கிளைமாக்ஸ் காட்சி மிக சிறப்பாக கையாளப்பட்டிருக்கும்.

6.குருதி புனல்:


கமல் மற்றும் அர்ஜீன் இருவரும் காவல் துறை அதிகார்களாக நடித்த படம்.பத்ரி என்ற வேடத்தில் நாசர் தனது திறமையை வெளிபடுத்திருப்பார்.ஓளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இயக்கிய படம்.ஆங்கில படங்களுக்கு இணையாக காமிரா ஆங்கிள் வைக்கப்பட்டிருக்கும். "குருதி புனல்" என்ற தமிழ் பெயர் வைத்து வந்த தமிழ் படம்.அப்பொழுது தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற சட்டமில்லை என்பது குறிப்பிடதக்கது...!!!பாடல்கள் இல்லாத படம்...!!!

7.இந்தியன்:

சுதந்திர போராட்ட தியாகியாகவும்,R.T.O வாகவும் கமல் இரட்டை வேடங்களில் நடித்த படம்.இயக்குனர் ஷங்கரின் மூன்றாவது படம்.காட்சிகள்,இசை,வசனம் மற்றும் நடிப்பு என சரியான கலவையாக அமைந்த படம்.இதிலும் பிளாஷ்பக் காட்சிகள் மனதை நேருடும் வகையில் அமைத்திருக்கும்.வர்மக்கலையும்,இந்தியன் தாத்தாவும் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது.நகைச்சுவை காட்சிகளும் நன்றாக இருக்கும்."பச்சை கிளிகள்" பாடல் சிறப்பாக இருக்கும்.அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமை

8.ஹே ராம்:


1940ல் நடைபெறும் கதைகளமாக அமைக்கப்பட்டிருக்கும்.கமல் இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்திருப்பார்."சாக்கேத் ராம்" என்ற கேரட்டரில் நடித்திருப்பார்.இளையராஜா இசை கதைக்கு சரியாக பொருத்திருக்கும்.பிடித்த காட்சிகளாக பல இருக்கிறது.அதில் தனது கைத் துப்பாக்கியை ,காவல்துறையினரால் தேடப்படும் போது ஒரு ஊர்தியி ல் போட்டு விடுவார்.அவ்வூர்தியும் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவே அங்கு தனது பழைய நண்பனான அம்ஜத்தையும் சந்திக்கும் காட்சி மற்றும் காந்தி ஆசரமத்தில் நடைபெறும் காட்சிகள் நன்றாக இருக்கும்."நீ பார்த்த பார்வை ஒரு நன்றி" என்ற பாடல் மனதை கொள்ளை கொள்பவை.

9.அன்பே சிவம்:

பயண‌ கதையாக அமைத்திருக்கும் படம்.கமலும்,மாதவனும் இணைத்து புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு வரும் போது பிளாஷ்பாக் காட்சிகளாக படம் விரியும்.இப்படத்தில் "மதன்" அவர்கள் வசனம் எழுதியிருப்பார்.வசனங்கள் மிகவும் ரசிக்க தக்கவையாக இருக்கும்.நாசர் மற்றும் சந்தான பாரதியுடைய நடிப்பு நன்றாக இருக்கும்.முதலில் பிரியதர்ஷன் இயக்குவதாக இருந்தது,பின் கமலுக்கும்,அவருக்கும் ஏற்பட்ட மனகசப்பால் இயக்குனர் "சுந்தர்.சி" இயக்கியிருப்பார்.படத்தில் எல்லா காட்சிகளும் நன்றாகவே இருக்கும்.கிளைமாக்ஸ் காட்சியில் கமல் நடிப்பால் பிரமாதப்படுத்திருப்பார்."யார் யார் சிவம்" என்ற பாடலும் "பூ வாசம் புறப்படும் பெண்ணே" என்ற பாடலும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

10.விருமாண்டி:


திரைக்கதை தான் இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக‌ நகரும்.விருமாண்டியாக‌ அச்சு அசலாக வெளிநாடு போய் திரும்பி வந்த கிராமத்து ஆளாக நடித்திருப்பார் கமல்.அவருடைய கெட்‍டப் அருமையாக இருக்கும்.இளையராஜா இசையில் பாடல்கள் நன்றாக இருக்கும்.கிணற்றுக்குள் உட்கார்ந்து காதலியோடு பேசுவது,மாடு ஓட்டிக் கொண்டு போகும்போது கமல் பேசிக் கொண்டு வருவது.இப்படியாக காட்சி அமைப்புக்கள் நன்றாக இருக்கும்.ஓரு கொலையை விருமாண்டி செய்ததாக எண்ணிஅபிராமி தூங்கிக்கொண்டிருக்கும் கமல் மீது பானையை போட்டு பேசும் வசனமும்,அதற்கு கமல் எதிர்வினையும் இயல்பாக,ரசிக்க கூடியவைகளாக இருக்கும்."உன்ன விட" என்ற பாடல் சிறப்பாக இருக்கும்.


குறிப்பு:‍
தொடர் பதிவை மற்றவரை தொடரச் சொல்வது தான் மரபு என்பத‌ற்க்கிணங்க..!இத்தொடர் பதிவை சூப்பர் ஸ்டாரின் விரும்பிகளை எழுத அழைக்கிறேன்.மாறுபட்ட விமர்சனமாக அமையும் என்றும்,ஆரோக்கியமான விமர்சனமாக அமையும் என்பதால்...தொடர் பதிவை எழுத‌
1.வெறும்பய
2.கொஞ்சம் வெட்டி பேச்சு
அழைக்கிறேன்....!!!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!

November 22, 2010

வெற்றி டைம்ஸ் 22/11/10


கடந்த வாரம் "திறந்த வெளி" என்ற பெயரில் எழுதிய பதிவு இனி "வெற்றி டைம்ஸ்" என்ற பெயரில்...
---------------------------------------------------------------

எடியூரப்பா = ஏடாகூட‌ம்?
முதல்வர் எடியூரப்பா தனது மகன்களுக்கு ஏக்கர் கணக்கில் நிலம் ஒதுக்கிய சிக்கலில் மாட்டிக்கொண்டு,தற்போது பதவியில் நீடிப்பாரா அல்லது அவருக்கு பதில் மாற்று நபர் முதல்வர் பதவியில் அமர்த்தப்படுவார்களா என்று பட்டிமன்றம் நடந்து வருகிறது.
காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழல்-முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்புவதற்கு எடியூரப்பா விவகாரம் இடையூறாக இருப்பதாக பாஜகவினர் கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.அதனால் அவரை தில்லி வருமாறு பாஜக அழைத்திருக்கிறது.இந்தியாவில் அதிக சோதனையை சந்தித்த முதல்வர்...இவராக‌ மட்டுமே இருக்க முடியும்...!!!!எதிராளியால் போகாத பதவி..பாஜகவின்னாலேயே போகுமோ?
--------------------------------------------------------------------------------------------
உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க‌:

தொலைக்காட்சியில் நேர‌டி ஓளிப‌ர‌ப்பில் ஓவ்வொரு சேன‌லிலும் கால் ப‌ண்ணி பேசும் நேய‌ர்க‌ள் கால்பேசும் போது தொகுப்பாளினி நேய‌ர்க‌ளின் போனை மூயூட் அ ச‌வுண்டை குறைக்க‌வோ சொல்கிறார்க‌ள்.எக்கோ ஆகும் என‌ சொல்வார்க‌ள்.நேய‌ர்க‌ள் கால் ப‌ண்ணி பேசுவ‌தே அவ‌ர்க‌ள் பேசுற‌து டிவில‌ கேட்குறத,அவங்க வீட்டில‌ உள்ள‌வ‌ங்க‌ கேட்க‌னுன்னு உள்ள‌ ஆசையில‌ தான்...!இதுக்கு டெக்கினிக்க‌ல‌ ஏதாவ‌து செய்யுங்க‌ டெக்னிக்க‌ல் புழு க்க‌ளே(புத்த‌க‌ புழு போல‌ இது)...!!!
--------------------------------------------------------------------------------------------
மழை சீசன் இது:

டூவீலர் பயணம் செய்பவர்கள் கவனிக்கவேண்டியது.மழை பெய்யும் போதோ இல்ல மழை விட்டு இருக்கும் போதோ ரோட்டுல தேங்கியிருக்கிற மழை தண்ணி முன்னாடி போற வண்டி பின்னால் வரும் வண்டியில வர‌வங்கள குளிப்பாட்டி கிட்டே வருகிறது.முன்னல்லாம் வண்டி பின்னாடி வீல்ல லெதர் ஓண்ணு தொங்கும் அது மண்ணு கலத்த தண்ணிய தேக்கி பின்னாடி அடிக்க விடாது.இப்பொ வர்ற வண்டியில பேசன் ங்க்கிற பேர்ல பின்னாடி வீல் “மட்காட்” சின்னதா புது வண்டியில வர்து..இதுக்கு ஹேண்டில ஏதாவது சுவீட்சி போல வைச்சி,மழை நேரத்துல மட்டும் வெளியே வந்து,உபயோக படுத்திக்கொள்வது போல செய்யலாம்.
--------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல் சமூக விழிப்புணர்வுக்காக பிளாஸ்டிக் ஓழிப்பு பற்றிய அனிமேட்டட் வீடியோ:



--------------------------------------------------------------------------------------------
படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!

November 20, 2010

புயல்களுக்கு பெயர் ?


சென்னையில் ஓரு மழைக் காலம் இது...!பதிவெல்லாம் மழை,புயல் பற்றி வந்துக்கொண்டிருக்கிறது.பல பேரு கவிதை எழுதி கவிதைமழை ஏற்படுத்துறாங்க...!!!!நானும் மழை,புயல் பற்றிய ஓரு செய்திய போட்டுவிடுகிறேன்.சமீப வருடங்களாக, புயல் வரும்போது,அதன் கூடவே ஓரு அழகிய பெயரும் ஓட்டிக்கொண்டு வருகிறது.எனக்கு இந்த புயல்களுக்கு யார் பெயர் வைக்கிறார்கள்? என தெரிந்துக் கொள்ள ஆசை இருந்தது,வழக்கம் போல் நண்பர்களிடமும்,இணையத்திலும் கிளிக்'ய போது எனக்கு கிடைத்த தகவல் ஓரு தொகுப்பாக உங்கள் பார்வைக்கு.

புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் 20ம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் இருந்துள்ளது. அப்போது, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர், தங்களுக்கு பிடிக்காத அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். அமெரிக்காவில் 1954ம் ஆண்டில் புயல்களுக்கு பெயர் சூட்டும் நடைமுறை வந்துள்ளது.

இந்தியாவில் வானிலை ஆய்வு மையங்கள் 1ஏ, 1பி என்று ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி புயலுக்கு பெயர் வைத்து வந்தன.கடந்த 2000ல் உலக வானிலை அமைப்பு மற்றும் பசிபிக் மற்றும் ஆசியாவுக்கான பொருளாதார சமூகக் கமிஷன் நடத்தியக் கூட்டத்தில் வடஇந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தோன்றும் புயல்களுக்குப் பல்வேறு பெயரிடப்படும் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்தியாவில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004ம் ஆண்டில் இருந்து உருவானது.

இந்திய ஆய்வு மையம் சிறப்பு மிக்க வானிலை ஆய்வு மையமாக விளங்குவதால்,இந்தியா தவிர வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் இலங்கைக்கும் வானிலை தொடர்பான முன் அறிவிப்புகளை வழங்கி வருகிறது. வானிலை பற்றிய தகவல்களைத் தரும் போது, புயல்களுக்கு என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதை தெரிவிக் கும்படி, அந்த நாடுகளை கேட்டது. பின்னர் உறுப்பினர் நாடுகள் தெரிவித்த பெயர்களை அகர வரிசைப்படி பட்டியலிட்டுள் ளது.

8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை கொண்ட பட்டியலை தயாரித்திருக்கின்றன.இந்த பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன.புயல் உருவாகி கரை கடந்ததும், பட்டியலில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுகிறது. பிறகு, அந்த நாட்டின் சார்பில் புதிய பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.

எப்படி பட்ட பெயர்களாக இருக்க வேண்டும்?

#பெயர்கள் சிறிய வார்த்தை கொண்டதாவும், உச்சரிப்பதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும்.
#பண்பாட்டிற்கு எதிரானதாகவோ, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது.
#தனிநபர்களின் பெயர்களாகவும் இருக்கக் கூடாது.

புயல்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இடுவதன் நோக்கமே, மக்கள் அவற்றை அடையாளம் கண்டறிந்து எச்சரிக்கையாக இருக்கத்தான். வானிலை ஆய்வு மையங்கள் பல விதமான பெயர்களைச் சூட்டி குழப்பம் உண்டாக்குவதை தடுக்கவும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எண்கள் மற்றும் துறை சார்ந்த சொற்களை நினைவில் வைத்துக் கொள்வதை விட, சிறிய வேறுபட்ட பெயர்கள் மக்கள் மனதில் எளிதில் பதிந்து விடுகின்றன .கடைசியாக வந்த ஜல் ஜில் அனுபவத்தை மட்டுமே சென்னைக்கு தந்தது...!!!!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!
பின்னூட்டம் போடுங்க..!!

November 15, 2010

திறந்தவெளி 15/11/2010


எனது முந்தைய பதிவில் சினிமா விமர்சனம் முதன்முறையாக எழுதினேன்.அதற்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..!நன்றி..!
க‌லவை (அ)தொகுப்பு செய்திக‌ள் எழுதி சுவ‌ர‌ஸ்ய‌ ப‌திவாக‌ மாற்ற‌லாம் என க‌ண்டுபிடித்த‌ ப‌திவுல‌க‌ ச‌க்க‌ர‌வ‌ர்த்திக்கு ந‌ன்றி..!ந‌ன்றி..!!!(குரு வணக்கம்).இன்னொரு விச‌ய‌ம் இம்மாதிரியான‌ ப‌திவுகளுக்கு த‌லைப்பை பிடிப்ப‌து என்பது மகா கஷ்டம்.அதிலும் அடித்து,பிடித்து ஏதோ த‌லைப்பை க‌ண்டுபிடித்துவிட்டு ப‌திவுல‌கில் பார்த்தால் ந‌ம‌க்கு முன்னாடியே ஏதோ ம‌க‌ராசன்கள் அந்த‌ பெய‌ரில் கும்மிய‌டிக்கிறார்க‌ள்.

அப்புற‌ம் கற்பனை பஞ்சம் வந்தாலும் வரும்...!ஆனா த‌மிழில் வார்த்தைக‌ளுக்கா ப‌ஞ்ச‌ம்?ப‌ர‌ந்து விரிந்த‌து உல‌க‌ம்..!த‌மிழ் மொழியே திற‌ந்த‌வெளி பல்கலைகழகம் போன்றது.அதில் கிடைக்காத‌ வார்த்தைக‌ளா?ஆ வார்த்தையை பிடிச்சாசு.."திற‌ந்த‌வெளி" இனி ஒரு புது முயற்சியாக வார வாரம் "திறந்தவெளி" என்னும் பெயரில் அந்தவார நிகழ்வுகளும் எனது கருத்துக்களும் மற்றும் நான் ரசித்த,சொல்ல நினைக்கிற‌ விசயங்களையும் பற்றிய தொகுப்பாக‌ பதிவை எழுத‌ உள்ளேன்.உங்க‌ள் ஆதரவு,எதிர் க‌ருத்துக்க‌ளை பின்னூட்ட‌மாக‌ எதிர்ப்பார்க்கிறேன்.‍‍‍‍

-------------------------------------------------------------------------------------
கோட்டையில்லை கொடியில்லை அப்பவும் நான் ராஜா..!!!

நேற்றிரவு திரு ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முன்னாள் ‌மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆகியிருக்கிறார்..!இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட காத்திருத்தன எதிர்கட்சிகள்.
இதற்கிடையில் ராசா வகித்த பதவியை திமுக அமைச்சர்களுக்கு கொடுக்கக்கூடாது என திரு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆரம்பித்துவிட்டார்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு அது மீண்டும் கிடைக்குமா?ன்னு தெரியலை..!!!தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்துச்சோ இல்லியோ..!நம்ம கிட்ட அந்த பதவி இருந்த பீலீங் இப்பொ கிடைக்காது..!!!எது எப்படியோ ராசா விவகாரம் வடநாட்டு சேனல்களுக்கு நல்ல தீனீ..!!!

-------------------------------------------------------------------------------------
பாடவா டூயட் பாடலை
குரல் தேடலுக்கு குரல் கொடுத்து கலைஞர் டிவியில் விளம்பரம் வருகிறது.இவர்கள் குரல் தேடலை வேறு விதமாக ஆரம்பித்துவிட்டார்கள்.தனி தனியாக பாடிக் கொண்டிருப்பதை பார்த்து போர் அடித்துவிட்டது.இனி ஜோடியாக பாடுவதை குறிப்பாக தம்பதி சகவிதமாக டூயட் பாடுவதை காணலாம்.இந்நிகழ்ச்சி கலைஞர் டிவியின் டி.ஆர்.பி ரேட்டை கூட்டுமா? பார்ப்போம்...!!

-------------------------------------------------------------------------------------

கேமரா கண்ணில் பட்டு வாழ்..!!!

நிறுவனங்களில் மற்றும் பள்ளிகளில் கேமிரா பொறுத்துவது இன்று பேசஸனாகிவிட்டது (அ) கட்டாயமாக்கப்பட்டுவிட்டது..!.காசி தியேட்டரில் கழிவறையில் கேமிரா என கேள்விப்பட்டோம்.இம்..இம்..பாதுகாப்பு என்கிற பெயரில் ஏதோ அன்னிய கண்ணில் நாம் பதிவாகி கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே ஓரு மாதிரியாக இருக்கிறது...மற்றும் அவசரத்துக்கு தலையில் அறிப்பெடுத்தால் தலையை சொறிஞ்சால் கூட இந்த தேதியில்,இந்த நேரத்தில் இந்த நிமிடத்தில் இந்த ஆள் தலையை செறிஞ்சார் என டேடாபெஸ் சொல்லும்.இது வரமா?சாபமா? தெரியவில்லை..!!!வருங்காலங்களில் வீட்டைவிட்டு இறங்கியவுடன் தெருக்களில்,சாலைகளில்,பேருந்துகளில்..இப்படியாக பாதுகாப்பு என்கின்ற பெயரில் கேமராக்கள் வரும்....இதற்கு மாற்றாக வாழ முடியாது...ஊரோடு ஓட்டி வாழ பழக வேண்டும்...பழகுவோம்..!!!!

------------------------------------------------------------------------------------
தண்ணீர் அவசியம் பற்றிய வீடியோ காட்சி கீழே...



படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!
பின்னூட்டம் போடுங்க..!!

November 06, 2010

மைனா - காதல் பயண‌ம்


எனது முதல் திரைவிமர்சனம் இது.முடிந்த வரை நன்றாக எழுத முயற்சித்திருக்கிறேன்.தீபாவளி ரீலீஸில் திரைப்பட டிரைலர் மற்றும் விளம்பரங்களால் மற்றும் இயக்குனர் பிரபு சாலமன்னுக்காகவும் என்னை பார்க்க தூண்டிய திரைப்ப்டம் " மைனா".கமலா சினிமாஸில் நேற்று இரவுகாட்சியாக‌ பார்த்தேன்.பிரபு தனது படங்களில்,சிற் சில விசயங்களை கையாள தெரியாமல் முயற்சித்து,தோற்று...தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க தவறியவர்.

கதைசுருக்கம்:

தேனீ மாவட்டம் குரங்குனி என்ற மலைக்கிராமம் தான் கதைக்களம்.தீபாவளிக்கு முந்தைய நாளும்,தீபாவளியென்றும் நடக்கும் சம்பவங்களே கதை.பெரியகுளம் கிளைச்சிறையில் இருந்து ஆரம்பிக்கிறது கதை.சிறுவயதிலேயே நாயகன்(சுருளி) நாயகியோட அம்மாவுக்கும்,நாயகி(மைனா)க்கும் தனக்கு தெரிந்த பாட்டியின் மூலம் அடைக்கலம் கொடுக்கிறான்.மைனாவின் மேல்,சிறு வயது முதல் ஏற்பட்ட‌ அன்பு வளர்ந்துகொண்டே வந்து அவள் பூப்பெய்தும்போது காதலாக முழுமையடைகிறது. அவள்மேல் உயிரையே வைக்கிறான். அவள் தனக்குத்தான் என்று நம்புகிறான்.சூழ்நிலையில் நாயகி அம்மா காதலை எதிர்க்க, நாயகன் அடிக்க வர போலீஸ் அவரை கொலைமுயற்சி என‌ கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்கிறது. விடுதலையாக 2 நாட்களே உள்ள நிலையில் நாயகிக்கு அவரது தாய் வேறு திருமண ஏற்பாடு செய்ய நாயகன் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்து நாயகியை மீட்டேடுக்கிறார். அதே சமயம் நெருக்கடியான சூழலில் இருக்கும் போலீசார் மீண்டும் நாயகனை கைது செய்து,சிறைக்கு கூப்பிட்டு வர வழியில் ஏற்படும் சம்பவங்களே மீதி கதை.


நாயகன் வித்தார்த் நன்றாக நடித்திருக்கிறார்.முக சாயலை பார்பதற்கு விக்ரம் மற்றும் மனோரமா மகன் பூபதியையும் நினைவூட்டுகிறது எனக்கு..!!!!கதைக்கு ஏற்ற நாயகன்...!!!வித்தார்த் முகத்தில் ஏதோ வசீகரம் தெரிகிறது.வரும் படங்களில் பார்ப்போம்.

நாயகி அமலாபால் அழகாக , மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார்,நன்றாக இருக்கிறது.இக்கதையில் அமலா இடத்தில் அஞ்சலியாக இருந்தாலும் ரசிக்கலாம்...!!!இருப்பினும் அமலா ரசிக்க முடிகிறது..!!!தமிழ் சினிமாவில் வருகின்ற படங்களில் இவரை காணலாம்.

மற்றபடி இன்ஸ்பெக்டராய் வரும் சேது ,ஜெயிலர் தம்பி ராமையா, மைனாவின் அம்மா,பொணம்தின்னி,நாயகன் உடன் வரும் அதிகம் பேசும் பையன்,சேது மனைவி மற்றும் அவரது குடும்பம் என்று எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இமான் இசையில் எல்லாப் பாட்டுகளும் நன்றாக இருப்பதோடு ,பாட்டின் வரிகள் அழகாக புரிகிறது.படமாக்கிய விதமும் அருமை.ப‌டத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் மற்றும் கலை இயக்குனர் வைரபாலனும். தங்களது திறமையினால், நம் மனதில் இடம்பிடிக்கின்றனர். தேனி மாவட்ட அழகை குறிப்பாக குறங்கினி, மூணார் போன்ற‌ பச்சைப்பசேல் இடங்களை நமக்கு காட்டிய‌ படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.


பிடித்த காட்சிகள்:
@ சைக்கிள்:
நாயகியை,நாயகன் பள்ளிக்கு சைக்கிளில் அழைத்து வரும் காட்சி.
@பயண‌ம்:
ஜீப் களில் மலை பாதையில் பயணம் செய்யும் காட்சிகள்.தத்ரூபமாக எடுக்கப்பட்டுயிருக்கிறது.
@ தோளில் சுமத்து வரும் காட்சி :
நாயகன் நாயகியை தன் தோளில் சுமந்து வரும் காட்சி.
@ பஸ் விபத்து காட்சி: ‍‍
நாயகன் காப்பாற்றும் காட்சி அருமை. காட்சி அமைப்பு ஆங்கில படங்களுக்கு இணையாக.

@ எதிர்பாராத கிளைமாக்ஸ்:

நல்ல கிளைமாக்ஸ் .நன்றாக எடுக்கப்பட்டுள்ளது.என்னால் யூகிக்க முடித்தது...!!!

இயக்குனர் இந்த திரைபடத்திலும் திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டுயிருப்பது உண்மை...!!! எனினும் தனக்கான இடத்தை கைப்பற்றிவிட்டார் என்பதும் உண்மை..!!!
சில குறைகள் இருந்தாலூம் ...!பல பேரின் உழைப்பு மற்றும் இயக்குனரின் விடாமுயற்சிக்காக‌ பார்க்கலாம்..!!!!

மைனா ‍- காதல் பயண‌ம்


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!
பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்).