Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

October 21, 2010

சென்னையின் தேவைகள்-1(தொடர் பதிவு)


சென்னையைப் பொறுத்தமட்டில், போக்குவரத்து நிர்வாகம்(Traffic management )என்ற சொல்லக்கூடியே ஒரு அணுகுமுறையே இல்லை. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத் தான் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு, மத்திய, மாநில‌ அர‌சுக‌ள் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.இச்சாலை மேம்படுத்தும் பணிகளும் பல்வேறு பிரச்சனைகளால்(கான்ட்ராக்டர்கள்,அதிகாரிகள் மெத்தனம், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்)பல கிடப்பில் கிடக்கிறது.வருகிற தேர்தலை முன்னுர்த்தி இனி விரைவாக நடக்கும் என்று நம்புவோமாக..!தரமற்ற சாலைகளில் மின்னல் வேகத்தில் பறந்து செல்வதால் விபத்துக்களும்,உயிரிழப்புகளும் தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

கடந்த 2008‍ம் ஆண்டு புள்ளி விபரத்தின் படி சென்னை மாநகரில் மட்டும் 6823 விபத்துக்கள் நடந்துள்ளதாக சொல்கிறது.மோசமான சாலை காரணமாக நடந்த 2 விபத்துக்களில் 3 பேர் இறந்துள்ளனர்.இருசக்கர வாகனங்களால் நடந்த 180 விபத்துக்களில் 183 பேரும், மூன்று சக்கர வாகனங்களால் நடந்த 68 விபத்துக்களில் 69 பேரும், இதர வாகனங்கள் மூலம் நடந்த 112 விபத்துக்களில் 117 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்த‌ விப‌த்துக்க‌ளுக்கு கார‌ண‌ங்க‌ளாக‌ அறிய‌ப‌டுப‌வை மோச‌மான‌ சாலை,போக்குவ‌ர‌த்து விதிமீற‌ல்க‌ள்,வாக‌ன‌ ஓட்டிக‌ளின் க‌வ‌ன‌மின்மை போன்ற‌வை.

சாலையின் நடைபாதை முழுவதும் நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.சென்னையில் சாலை இருபுறங்களில் உள்ள நடைபாதையில் 200mtrs வ‌ரைக்கூட‌ தொடர்ந்து நடக்க முடியாத சூழல் தான் காணப்படுகிறது.சாலை என்பது வாகனங்களை பயன்படுத்துவதற்கு, கார், பேருந்து,டூவீலர் போவதற்குதான் என்று ஆகிவிட்டது. சைக்கிள் போவதற்கோ, நடப்பதற்கோ இல்லை என்று ஆகிவிட்டது.மோட்டாரற்ற போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஏட்டில் மட்டுமே இருக்கிறது. மோட்டாரற்ற போக்குவரத்து என்றால் நடப்பதும் சைக்கிளும்தான். இந்த இரண்டுக்கும் ஒன்றுமே செய்யவில்லை என்பது வேதனையான விசயம்.

வயதில் முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் நடந்து வெளியே சென்று வீட்டுக்கு வந்துவிட்டால்,ஆயுள் இன்னொறு நாள் கூடிவிட்டதாகவே எண்ணும் அளவுக்கு சாலைகள் இருக்கிறது...!!.நடைபாதை வியாபாரிகளுக்கு வணிக வளாகம் திறக்கப்படவேண்டும்.(தி.நகரில் பாண்டிபஜார் உட்பட 3 இடங்களில் திறக்கப்பட்டும்,தொடர்ந்து வழியிலேயே கடை பரப்பி வருகின்றனர்...!)

மாநகருக்குள் நுழைந்துவிட்டால் தேவையான வழிதகவல் (sign boards) கொண்ட குறிப்புகள் இல்லை.புதிதாக வருபவர்கள் பாடு திண்டாடம் தான்..!!!நீங்கள் சிக்னலில் நிற்கும்போது,உங்களிடம் வழிகேட்டோர் பல எண்ணிக்கையில் தான் இருந்திருப்பார்கள்...!சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடுதல்( டிராஃபிக் டைவர்ஷன்) ஒன் வே டிராஃபிக், டூ வே டிராஃபிக் என்று மாற்றியமைத்து விடுகிறார்கள்.இதனால் பலன்கள் உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது...! உ.தா.அசோக் பில்லர் ஓன் வே முதலில் கொண்டுவந்தார்கள்,பின் எடுத்தார்கள் ...... மாற்றியமைக்கப்பட்டு மறுபடியும் ஓன் வே நடைமுறையில் உள்ளது.இதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை கிடையாது, முன்னோட்டம் கிடையாது.

சாலையில் ஓரங்களில் கண்ட கண்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. மேலும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மினிகார்கள் பஸ் ஸ்டாப்புகளில் நிறுத்தப்படுவதால் மாநகர பேருந்து சற்று தள்ளி நிறுத்தப் படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. குறிப்பாக அலுவலக நாட்களில் காலை, மாலை நேரங்களில் பீக் அவர்'களில் சாலைகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சில‌ போக்குவரத்து போலீசாரும் ஏனோத‌னோ என்ற‌ பார்வையில் கண்டுகொள்வதில்லை.

கட்டுமானத்திற்கு சாலை ஆக்கிரமிக்கப்படுகிறது.அப்புறம் டாஸ்மாக் கடை இருக்கும் சாலை நடக்க,மோசமாக இருக்கும் வழியிலேயே குடிப்பார்கள்,குடித்துவிட்டு நடப்பவர்கள் நடை நம்மை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.இப்படி சாலையில் போவது என்பது பயங்கரமான அனுபவமாக உள்ளது. ....!!!!இதற்கெல்லாம் தீர்வு...!!!???

பதிவுகள் தொடரும்....

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)

October 18, 2010

சென்னையின் தேவைகள்



உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னை,பெங்களூரு மற்றும் அஹமதாபத் உள்ளிட்ட 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.சீனாவின் உள்பகுதியில் உள்ள நகரங்கள் போக்குவரத்து வசதிகள் உள்ளவையாகவும் வணிகம் செய்ய ஏற்றவையாகவும் இருப்பதாகக் கூறியுள்ள போர்ப்ஸ் என்ற அமெரிக்க இதழ்.இந்தியாவில் சரியான‌ திட்டமிடபடவில்லையென்றாலும் சீனாவைப் போன்றே சிறிய நகரங்களின் வளர்ச்சி இருக்கிறது என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் முக்கியத் தொழில் துறைகளான வாகன உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி மற்றும் பொழுது போக்கு ஆகியவை சென்னை உட்பட மூன்று நகரங்களில் உள்ளதாகவும் போர்ப்ஸ் கூறியுள்ளது.

2025ஆம் ஆண்டு 1 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சென்னை, நடப்பாண்டில் இதுவரை 1 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. டில்லி, மும்பை உள்ளிட்ட மற்ற இந்திய நகரங்களைவிட இது அதிகம் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.

இதை படிக்கும்போது ந‌ம‌க்கு எல்லாம் பெருமையாக தான் இருக்கிறது..!போர்ப்ஸ் கூறிய‌தில் நாம் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து முறையாக‌ திட்டமிட‌ப‌ட‌வில்லையென்றாலும்,வ‌ள‌ர்ச்சியை நோக்கி நாம் போய்க் கொண்டிருப்ப‌து.இது எவ்வ‌ள‌வு நாள் நீடிக்கும் என்று சொல்ல‌முடியாது,ஆக‌வே நாம் திட்ட‌மிட‌ நேர‌ம் வ‌ந்துவிட்ட‌தாக‌வே தெரிகிற‌து.ச‌ரி சென்னையில் நாம் இப்போது ச‌ந்திந்துக் கொண்டிருக்கும் பல பிர‌ச்ச‌னைக‌ளில் சிலவற்றை ப‌ற்றி பார்ப்போம்.

1. போக்குவ‌ர‌த்து பிர‌ச்ச‌னை.
2. ஆட்டோ வாட‌கை கொள்ளை.
3. வீட்டு வாட‌கை கொள்ளை.

விரிவாக அலசுவோம்.... தொடர் பதிவுகளாக எழுத எண்ணுகிறேன்....


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

August 24, 2010

சென்னையும், அதன் தேவையும்


உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றான,சென்னை தமிழகத்தின் தலைநகர் மற்றும் இந்தியாவின் நான்கு பெரு நகரங்களில் ஒன்றாக‌ திகழ்கிற சென்னை உதயமாகி நேற்றோடு 371 ஆண்டுகளாகிய நிலையில்.நம் கண்முண்ணே உள்ள பிரச்சினைகள்:
* மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் குடிநீர்.
* அதிக மக்கள் தொகை அடர்த்தி.
* குடிநீர் பற்றாக்குறை.
* வாகன நெரிசல்.
* சாலைகள் பராமரிக்கப்படாமை.
சென்னை முறையாக திட்டமிட்டு உருவாக்கிய நகரம் அல்ல,சுகாதாரக்கேட்டுக்கும்,போக்குவரத்து நெரிசலும் இதுவே காரணம்.ஏரி மற்றும் வாய்க்கால்கள் அழிக்கப்படுவதால்,குடிநீர் பஞ்சத்தையும்,கடும் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் அப்பகுதியே மிதக்கும் நிலையும் உருவாகிறது.புறகர் பகுதிகள் இஷ்டத்துக்கு அடுக்குமாடி குடியிருப்புகளாக எழுந்து நிற்கிறது.அடிப்படை வசதிகளில் உரிய கவனம் செலுத்தப்பட வில்லை.

பல்கிப் பெருகி வரும் சென்னை மாநகரின் நெரிசலைத் தவிர்க்கவும்,மக்கள் சென்னை நகரின் வசதிகளை வெளியிலும் அனுபவிக்கும் வகையில், சென்னைக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளை இணைத்து மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்கும் திட்டம் வரையறுக்கப்பட்டு,அதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

மாநகரில் தொடர்ந்து சாலைகள் போடுவதால் சாலைகள் உயர்வதை தடுக்கும் வகையில், புதிய நடை முறையில் (“கோல்டு மில்லிங்”) ஒரே நேரத்தில் 1.30 மீட்டர் அகலத்திற்கு சமமாக சாலையை அகழ்ந்தெடுத்து தார் சாலை அமைக்கப்படுகிறது. புதிய மேம்பாலங்கள் போடப்படுகிறது(இது சரியான தீர்வா?).கட்டப்பட்ட சில மேம்பாலங்களால் பயன் உள்ளதாகவே தெரிகிறது.(மேம்பாலங்கலால் பெரிய சாலைகள் குருகிய சாலைகளாக காட்சி அளிப்பது வேறு).போக்குவரத்து விதிகளை கடுமையாக ஆக்கப் பட்டு,இடையுறாக சாலையிலேயே வியாபாரம் நடக்கிறது.அதை சரி செய்ய முயல வேண்டும்.

பூங்காக்கள் பல நிறுவப்பட்டு,பளிச்சென்று இவை காணப்படுகின்றன. பலரும் வாக்கிங் போக இவற்றை பயன்படுத்துகிறார்கள்.நல்ல விஷயம்.

செம்மொழி மாநாட்டின் பயனாக,மாநகரில் அழகு தமிழில் பெயர் பலகைகள் நம்மை பார்த்துக் கண் சிமிட்டுகிறது.இந்த மாநாடு தேவையா? இல்லையா? என்று மற்றொரு பதிவில் விவாதித்துக்கொள்ளலாம்.

மாநகராட்சி ஓரளவு சிறப்பாக நடைபெறுவது போல தெரிகிறது,மாநகர தந்தை "Zee Tamil" தொலைக்காட்சியில் வந்து, மக்களோடு நேரடியாக பேசுவது ஆறுதலான விசயம்.
சமீபத்தில் வெளியான‌ "மதராசபட்டிணம்” திரைப்படத்தில் கூவம் ஆற்றில் மக்கள் படகில் செல்வது போல் காண்பிக்கப்படுகிறது,அதை பார்த்த சென்னையை அறிந்த உள்ளங்கள் இப்போது அப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்று ஏக்கமாக பார்த்தவர்கள் ஏராளம்...!கூவம் நதியில் பல்வேறுப்பட்ட கழிவுகள் கலப்பதால்தான் கூவம் சாக்கடையாக காட்சியளிக்கிறது.

கூவத்தினால் நாமுடைய சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.இது சாக்கடையாக மாறி நதி ஓட்டம் இல்லாததனால்,பெரும் வெள்ளம் வரும் காலத்தில் சரியான வடிகாலாக இல்லாத நிலையும் மற்றும் கொசு உற்பத்தியாகி மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

கடந்த 40, 50 வருடங்களாக அரசு 3 திட்டங்களைத் தீட்டி அதில் முழுவதுமாக தோல்வியைக் கண்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த‌ தோல்வி எத‌னால்?ஏற்ப‌ட்ட‌து என‌ ஆராய்ந்து,அதை க‌ளைந்து அர‌சு "கூவத்தை அழகுபடுத்துதல்" தீட்ட‌த்தை வெற்றி பெற‌ச் செய்தால் ந‌ன்றாக‌ இருக்கும்.

அரசும்,மாநகரை அழகுபடுத்துதல் மட்டுமின்றி,ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டவேண்டும் மற்றும் தினமும் பல ஆயிரம் பேர் குடியேறும் மாநகர வளர்ச்சி மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்திடல் வேண்டும். இதற்கெல்லாம் தீர்வு....?அரசினின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் மக்களாகிய நாமும்.

நம் நகரை சுத்தமாக வைத்து கொள்வதில் நமக்கும் பங்கு உண்டு என்பதை மறக்க கூடாது.நம்முடைய கடமையும் முக்கியம்.வெறுமனே குற்றம் கூறுவது அழகல்ல.நாம் முன்னோடியாக இருந்து செயல் பட வேண்டும்.உரிய திட்டமிடல் நமது முக்கிய தேவை.அதை பின்பற்றுதல் அதனினும் முக்கிய தேவை.இத்தனை நிறைய‌ குறைகளோடு,சென்னையில் வசிக்கும் மக்களில் நானும் ஓருவன்...!!!

போட்டோ கமெண்ட்:
சென்னை மாநகராட்சி கட்டிடம்(ரிப்பன் பில்டிங்)

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

August 20, 2010

இன்றைய எம்.ஜி.ஆர்.?


இது தனிமனித வ‌ழிபாடு,தாக்குதல் பற்றிய பதிவல்ல...!

எம்.ஜி.ஆரின் புகழ்,வசீகரம்,வெற்றிக்கு அடிப்படையாகவும்,இன்றைய எம்.ஜி.ஆராக உருவாக என்னென்ன தகுதிகள் வேண்டும்? எண்ணியதன் விளைவு...இந்த பதிவு..!
"ஓருவன் எந்த செயலைத் தொடங்கினாலும்,அதனால் அழிவதையும்,அழிந்த பின் ஆவதையும் பின்பு உண்டாகும் ஆதாயத்தையும், அறிந்து செய்ய வேண்டும்" என்றதை பயன்படுத்தியவராக எம்.ஜி.ஆர் தெரிகிறார்.
மக்களால், வெவ்வேறு முறைகளில் நம்பிக்கை ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. சிலர் இறைவனிடம் வைத்திருக்கும் நம்பிக்கை அல்லது ஏதாவது பிரபஞ்ச சக்தி என்றும் அல்லது ஓரு பிரத்தியோகமான காப்பாற்றுபவர் அல்லது மதக்கோட்பாடு அல்லாத ஓருவர், அவரது உயர்ந்த, சொந்தத் தனித்தன்மையில் நம்பிக்கை வைத்தல் அப்படியாக உயர்ந்த செல்வாக்கை ஏற்படுத்த சினிமா பிம்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றவராக எம்.ஜி.ஆர்.
அறியாமையில் உழலுபவர்கள் நம்பிக்கையில்லாதவர்கள், அறியாமை ஓர் விதத்தில் கல்வி கற்காமை போன்று பொருளாதாரத்தை சார்ந்தாகவும் இருக்குமோ? என்று கருதுகிறேன்.அறியாமையை நம்பிக்கையாக மாற்றக்கூடிய சக்தி எம்.ஜி.ஆரிடம் இருந்திருக்க வேண்டும்."நம்பிக்கை","விசுவாசம்" என்ற இரண்டு பிரிக்க முடியா முகங்களை பற்றிய புரிதல் அவருக்கு இருந்திருக்க வேண்டும்.
நம்பிக்கையை தொழில்(சினிமா) சாராத மக்களிடத்திலும், விசுவாசத்தை தொழில் சார்ந்த மக்களிடத்திலும் ஏற்படுத்திருக்க வேண்டும். இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து பொருளாதார துணையோடு ஓர் வசீகரத்தை உருவாகிருக்கவேண்டும்.நம்பிக்கையும்,விசுவாசமும் கைகோர்த்து சுமுகமான மனித உறவிற்கும், ஓர் இணக்கமான சமூக செயல் திறனுக்கு அடிப்படையாக மாறியிருக்க வேண்டும்.
சினிமா வெளிச்சமும், பத்திரிக்கை ஊடகமும், செவி வழி கதை சொல்லிகளும்(ஊருக்கு நாலு பேர் அருமை,பெருமைகளை, தங்கள் கற்பனைகளோடு எடுத்துச் சொல்லி ஆலமரத்தடிகளிலும், திண்ணையிலும் பேசியவர்கள்). எதிர்மறை செய்தி வராமல் பார்த்துக் கொள்ள விசுவாசிகளும், பொருளாதாரமும் கை கொடுத்திருக்க வேண்டும்.இது தான் அர‌சிய‌லில் வெற்றிக் கொடியை ப‌ற‌க்க‌விட்டிருக்கும்.என் பார்வையில் ந‌ம்பிக்கையை ஏற்ப‌டுத்தி,விசுவாச‌த்தை உருவாக்கி வெற்றி பெற்ற‌வ‌ராக‌ எம்.ஜி.ஆர்.
இன்றைய காலகட்டத்தில்,பொருளாதாரத்தை கொண்டு "நம்பிக்கை","விசுவாசத்தை" உருவாக்குவது எளிதான காரியமல்ல.ஓவ்வொரு செயலிலும் பொருளாதாரத்தை ஓட்டிய‌ சிந்தனையில் இன்றைய மக்கள்.சினிமா ரசிகனும் சினிமா பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு போய்விடுவான்.அறிந்தும்,அறியாமையில் இருப்பது போல மக்கள் மனநிலை என்பது தான் நிதர்சனமான உண்மை.சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று,இன்றைய எம்.ஜி.ஆராக‌ உருவாவது....?


போட்டோ கமெண்ட்:
சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!