August 24, 2010
சென்னையும், அதன் தேவையும்
உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றான,சென்னை தமிழகத்தின் தலைநகர் மற்றும் இந்தியாவின் நான்கு பெரு நகரங்களில் ஒன்றாக திகழ்கிற சென்னை உதயமாகி நேற்றோடு 371 ஆண்டுகளாகிய நிலையில்.நம் கண்முண்ணே உள்ள பிரச்சினைகள்:
* மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் குடிநீர்.
* அதிக மக்கள் தொகை அடர்த்தி.
* குடிநீர் பற்றாக்குறை.
* வாகன நெரிசல்.
* சாலைகள் பராமரிக்கப்படாமை.
சென்னை முறையாக திட்டமிட்டு உருவாக்கிய நகரம் அல்ல,சுகாதாரக்கேட்டுக்கும்,போக்குவரத்து நெரிசலும் இதுவே காரணம்.ஏரி மற்றும் வாய்க்கால்கள் அழிக்கப்படுவதால்,குடிநீர் பஞ்சத்தையும்,கடும் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் அப்பகுதியே மிதக்கும் நிலையும் உருவாகிறது.புறகர் பகுதிகள் இஷ்டத்துக்கு அடுக்குமாடி குடியிருப்புகளாக எழுந்து நிற்கிறது.அடிப்படை வசதிகளில் உரிய கவனம் செலுத்தப்பட வில்லை.
பல்கிப் பெருகி வரும் சென்னை மாநகரின் நெரிசலைத் தவிர்க்கவும்,மக்கள் சென்னை நகரின் வசதிகளை வெளியிலும் அனுபவிக்கும் வகையில், சென்னைக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளை இணைத்து மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்கும் திட்டம் வரையறுக்கப்பட்டு,அதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது.
மாநகரில் தொடர்ந்து சாலைகள் போடுவதால் சாலைகள் உயர்வதை தடுக்கும் வகையில், புதிய நடை முறையில் (“கோல்டு மில்லிங்”) ஒரே நேரத்தில் 1.30 மீட்டர் அகலத்திற்கு சமமாக சாலையை அகழ்ந்தெடுத்து தார் சாலை அமைக்கப்படுகிறது. புதிய மேம்பாலங்கள் போடப்படுகிறது(இது சரியான தீர்வா?).கட்டப்பட்ட சில மேம்பாலங்களால் பயன் உள்ளதாகவே தெரிகிறது.(மேம்பாலங்கலால் பெரிய சாலைகள் குருகிய சாலைகளாக காட்சி அளிப்பது வேறு).போக்குவரத்து விதிகளை கடுமையாக ஆக்கப் பட்டு,இடையுறாக சாலையிலேயே வியாபாரம் நடக்கிறது.அதை சரி செய்ய முயல வேண்டும்.
பூங்காக்கள் பல நிறுவப்பட்டு,பளிச்சென்று இவை காணப்படுகின்றன. பலரும் வாக்கிங் போக இவற்றை பயன்படுத்துகிறார்கள்.நல்ல விஷயம்.
செம்மொழி மாநாட்டின் பயனாக,மாநகரில் அழகு தமிழில் பெயர் பலகைகள் நம்மை பார்த்துக் கண் சிமிட்டுகிறது.இந்த மாநாடு தேவையா? இல்லையா? என்று மற்றொரு பதிவில் விவாதித்துக்கொள்ளலாம்.
மாநகராட்சி ஓரளவு சிறப்பாக நடைபெறுவது போல தெரிகிறது,மாநகர தந்தை "Zee Tamil" தொலைக்காட்சியில் வந்து, மக்களோடு நேரடியாக பேசுவது ஆறுதலான விசயம்.
சமீபத்தில் வெளியான "மதராசபட்டிணம்” திரைப்படத்தில் கூவம் ஆற்றில் மக்கள் படகில் செல்வது போல் காண்பிக்கப்படுகிறது,அதை பார்த்த சென்னையை அறிந்த உள்ளங்கள் இப்போது அப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்று ஏக்கமாக பார்த்தவர்கள் ஏராளம்...!கூவம் நதியில் பல்வேறுப்பட்ட கழிவுகள் கலப்பதால்தான் கூவம் சாக்கடையாக காட்சியளிக்கிறது.
கூவத்தினால் நாமுடைய சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.இது சாக்கடையாக மாறி நதி ஓட்டம் இல்லாததனால்,பெரும் வெள்ளம் வரும் காலத்தில் சரியான வடிகாலாக இல்லாத நிலையும் மற்றும் கொசு உற்பத்தியாகி மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
கடந்த 40, 50 வருடங்களாக அரசு 3 திட்டங்களைத் தீட்டி அதில் முழுவதுமாக தோல்வியைக் கண்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த தோல்வி எதனால்?ஏற்பட்டது என ஆராய்ந்து,அதை களைந்து அரசு "கூவத்தை அழகுபடுத்துதல்" தீட்டத்தை வெற்றி பெறச் செய்தால் நன்றாக இருக்கும்.
அரசும்,மாநகரை அழகுபடுத்துதல் மட்டுமின்றி,ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டவேண்டும் மற்றும் தினமும் பல ஆயிரம் பேர் குடியேறும் மாநகர வளர்ச்சி மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்திடல் வேண்டும். இதற்கெல்லாம் தீர்வு....?அரசினின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் மக்களாகிய நாமும்.
நம் நகரை சுத்தமாக வைத்து கொள்வதில் நமக்கும் பங்கு உண்டு என்பதை மறக்க கூடாது.நம்முடைய கடமையும் முக்கியம்.வெறுமனே குற்றம் கூறுவது அழகல்ல.நாம் முன்னோடியாக இருந்து செயல் பட வேண்டும்.உரிய திட்டமிடல் நமது முக்கிய தேவை.அதை பின்பற்றுதல் அதனினும் முக்கிய தேவை.இத்தனை நிறைய குறைகளோடு,சென்னையில் வசிக்கும் மக்களில் நானும் ஓருவன்...!!!
போட்டோ கமெண்ட்:
சென்னை மாநகராட்சி கட்டிடம்(ரிப்பன் பில்டிங்)
படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுலகத்துக்கு புதியவன்...!பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!
ReplyDeleteஹாய் வெற்றி!
ReplyDeleteஏதாவது ஒரு விஷயத்தை இப்படி கையில எடுத்துட்டு எழுதுங்க.. நல்லாவே வரும் எழுத்து!
டெப்ம்ப்ளேட் ரொம்ப நெரமெடுக்குது அப்லோட் ஆக.. கலர் ஓவரா இருக்கறதாலன்னு நெனைக்கறேன்..
தொடர்ந்து கலக்குங்க!
Good Post ..
ReplyDeleteநல்லா அழகா சமுதாய அக்கறையோட எழுதுறிங்க , வாழ்த்துக்கள் , தொடருங்கள்
ReplyDeleteraittu
ReplyDelete