September 27, 2010

நடுரோட்டுல நம்பர் தெரியாம நின்னுயிருக்கீங்களா?


நீங்க சென்னைல,அம்பத்தூர்லருந்து கிளம்பி பெருங்குடி போய்,உங்கள் நண்பனை அலுவலகத்தில் பார்க்க போய்கிறீர்கள்.உங்க நண்பண் "மச்சி என் ஆபிஸ் பக்கத்துல வந்து கால் பண்ணு வெளியே வரேன்னு சொல்லுராறு".நீங்களும் பல டிராபிக் கஷ்டங்களைத் தாண்டி(வெள்ளை சீருடை தரகர்களைத் தாண்டி..!)நண்பண் ஆபிஸ் பக்கத்துல போய், பேசுறதுக்கு மொபைல எடுத்த ஆப் ஆயிடுச்சி,திரும்பவும் ஆன் சென்சா ஆன் ஆகல‌ன்னு வச்சிக்ங்க,உங்களுக்கு நண்பண் நம்பரும் நினைவில இல்ல(நினைவில் வைத்திருப்பதில்லை என்பதே உண்மை..!)என்ன செய்வீங்க?


நம்ம சோம்பேறியா இருக்குறத்துக்கு,விஞ்ஞானம் தான் காரணம் சொன்னா இல்லன்னு சொல்லவா போறிங்க?இப்பொ எல்லா தேவைகளும் கைக்கு அடக்கமாக கிடைப்பதால்,நமது மூளைக்கு பெரும்பாலும் வேலை கொடுப்பதில்லை.


80,90க்களில் இந்தியா மற்றும் அயல்நாடுகளில் மிக சிறந்த வல்லுனர்களாக திகழ்ந்தவர்கள் எல்லோருக்கும் மனக்கணக்கு,நினைவுத்திறன் போன்றவையும் வெற்றிக் காரணமாக இருந்திருக்கிறது.இன்றைய இளைய தலைமுறைகளிடம் கொஞ்சம் காணாமல் போய் கொண்டிருக்கின்றன என்பது உண்மையே..!


அதற்கு நாமும் கூட விதிவிலக்கல்ல.அன்றைய காலக்கட்டத்தில் உதாரணமாக வாய்ப்பாடு(Multiplication Tables)மேலிருந்து கீழாகவும்,கீழிருந்து மேலாகவும் 20‍ம் வாய்ப்பாடு வரை மனனம் செய்து வைத்திருப்பார்கள்.இன்றைய நாட்களில் இதை திக்கி தடுமாறி சொல்ல‌முடியாமலும்,கால்குலேட்டர் உதவியில்லாமல் கணக்கு போட தெரியாதவர்கள் தான் அதிகம்.


மொபைல் போன் வருவதற்கு முன், நெருங்கிய, முக்கியமான நபர்களின் தொலைபேசி எண்களை தெரிந்து வைத்திருந்தோம். ஆனால், இன்று...?யாராவது தொடர்பு கொள்ள எண் கேட்டால்,உடனே மொபைல் போனைத் தான் தேடுகிறோம்.முக்கிய நபர்களின் எண்களைக் கூட மனனம் செய்து வைப்பதில்லை.மொபைல் போன் தொலைந்தால்,எண்கள் மறையும்; நட்பு வட்டமும் மறையும்.காரணம், எந்த எண்களுமே நினைவில் இல்லை..!நினைவில் வைத்திருப்பதில்லை என்பதே உண்மை என்று மேலேயே சொல்லிவிட்டேன்.


வெகு சிலரோ வீட்டில் டைரி மற்றும் கணிணியில் பதிவு செய்து வைத்திருப்பது வேறு விஷயம்...! நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கும் போது, டைரியையோ அல்லது கணிணியோ தேடி செல்ல இயலாது? அதுவும், முக்கிய அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் போது, மொபைலை பறி கொடுத்து தவிக்கும் தவிப்பு...! இங்கே வார்த்தைகளாக எழுத முடியாது...!


கையில் மொபைல் போன் இருந்தாலும், முக்கிய எண்களை மனனம் செய்ய வைத்துக்கொள்ளலாம், பர்ஸ்சில் கைகளுக்கு அடக்கமான டைரிகளில்( 5 ரூபாய் விலையில் கிடைக்கிறது) எண்களை எழுதி வைத்துக்கொள்ளலாம்!(இந்த டைரிய தொலைச்சுபுட்டு தேடுர ஆளுங்களுக்கொல்லாம் நான் பொறுப்பு கிடையாது..!).எண்களை (4 +4 +2=10)இலக்க எண்களாக மனனம் செய்துக் கொள்ளலாம்..!இதை போல உங்களுக்கு என்ன செய்தால் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமோ, அப்படி வைத்துக்கொள்ளுங்கள்..!
ஆகவே நான் சொல்ல வரக்கூடிய கருத்து என்னா?மொபைல உள்ள நம்பர மட்டும் நம்பி வெளிய கிளம்பி நடுரோட்டுல நம்பர் தெரியாம நிற்காதிங்க..!‌

போட்டோ கமெண்ட்:

நடுரோட்டுல நிக்கும்போது இப்படியா இருக்கும் முகம்..!


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 23, 2010

இராஜராஜ சோழனும்,மழைநீர் சேகரிப்பும்இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது என்று ஓர் ஆய்வு சொல்கிறது.எதிர் காலத்தில் நீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் ஏற்படும் என்றும். நீரை சேமித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுத்திருப்பதை நாம் அறிவோம். எனவே இருக்கின்ற நீரை செம்மையாக பயன்படுத்திடவும், பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்திடுவதிலுமே தமிழகத்தின் நீர் மேலாண்மை சார்ந்துள்ளது.மழைநீர் சேகரிப்புக்கு உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், ஊருணிகள் மற்றும் கோவில் குளங்கள் அனைத்தும் இன்றும் அப்பணியினைச் செவ்வனே செய்தும்,செய்யாமலும் இருக்கிறன...!நகர்ப்புறங்களில் மழைநீர் சேகரிப்பு முயற்சி இராஜஇராஜன் (கி.பி. 10ம் நூற்றாண்டு) காலத்திலேயே தஞ்சையில்தொடங்கப்பட்டது. தஞ்சைப் பெரியகோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுமையும் சேமிக்கும் இடமாகச் சிவகங்கை குளத்தை இராஜஇராஜன் அமைத்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. அதற்குப் பின்னர் தஞ்சையை ஆண்டு செல்வப்ப நாயக்கன், செல்வப்பன் ஏரியைப் (சேப்பன வாரி) வெட்டி அதில் தஞ்சை நகரில் பெய்யும் மழை நீரைச் சேகரித்து, வண்டல் கலந்த நீர் தெளிந்த பின்னர், தனிக்குழாய் மூலம் சிவகங்கைக் குளத்தில் சேமிக்கும்படி அமைத்தான். பிறகு நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் நகரில் உள்ள முக்கிய குளங்களுக்கும், கிணறுகளுக்கும், அரண்மனைக்கும் விநியோகம் செய்த தடயங்கள் கிடைத்துள்ளது‌.


பண்டைய தமிழர்கள் நீரை எவ்வாறு சேமித்து பாசனங்களுக்கு பயன்படுத்தியதையும், நீர்மேலாண்மை குறித்த தமிழர்களின் அறிவு, ஆற்றல் இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மழை நீரை சேமிப்பதற்காக குளம், குட்டைகள், ஏரிகள், மடு, கண்மாய் என்று ஏராளமான நீர் நிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.இதை கல்வெட்டுகளிலும் குட ஓலைகளிலும், செப்பேடுகளிலும் மூலம் அறியபடுகிறது.

முதலாம் பரமேஸ்வரன், நஞ்சுவர்மன், கரிகால சோழன்,ராஜேந்திர சோழன் உள்ளிட்ட மன்னர்களும் குளங்கள், கிணறுகள், அணைகள் மற்றும் ஏரிகளை உருவாக்கி நீர் மேலாண்மை செய்த வரலாறுகள் பல உண்டு.இவ்வாறு உருவான ஏரிகள்தான் உத்திரமேரூர் ஏரி, பொன்னேரி ஏரி, வீரானம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளாகும்.

பண்டைய தமிழகர்களிடம் இருந்த அறிவு, ஆற்றல் இப்போ எங்க போய் அடமானம் வைச்சொம்முன்னு தெரியல.அவங்க தோண்டிய ஏரி,குளத்த மூடி பிளாட்டு போட்டு வித்து,வீடுக் கட்டிக்கிட்டு,அவங்க கட்டுன கோயில போய் இறைவன "நல்லா இருக்குன்னு" கும்பிட்ட எப்படி நல்லா இருப்போம்..? நீர் ஆதாரம் தான் அடிப்படை,அத காப்பாத்தினா தான் நல்லா இருப்போம்...!பிரேசில் நாட்டின் திரு. ரோஜர் எல் சாண்டோஸ் அவர்களின் ‘Right Under Our Nose’ குறும்படம்,சில வினாடிகளில் மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை அழகாக சொல்கிறது..!என்னை இந்த பதிவு எழுத தூண்டிய இந்த குறும்படத்திற்கு நன்றி..!

தமிழக கட்டுமான விதிகளின் படி, வீடுகள் கட்டப்படும்போது, தரையில் சிமெண்டால் வீட்டைச் சுற்றித் தளம் அமைப்பது தவறு. ஆனால், சென்னை போன்ற நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், இந்த விதி சர்வ சாதாரணமாக மீறப்படுகிறது. இதனால், பூமிக்குச் செல்லும் நீர்வரத்து நின்றுபோய், நில நீரளவும் குறைந்து விட்டது. குறைந்த பட்சம் கார் பார்க்கிங் லது மணல் தரைய விட்டு வைக்கலாம்...!


கவனித்துத் தடுக்கவேண்டிய அரசாங்க அதிகாரிகள் சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு, வாய்மூடி மௌனியாய் இருப்பது வேதனை தருகிறது.இதன் அவசியத்தை அதிகாரத்தில் உள்ளவர்களும்,மக்களுமாகிய நாமும் தான் உணரவேண்டும், உணர மட்டுமல்ல‌ கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதும் தேவையாகிறது..!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 20, 2010

நீ மட்டும் என்ன ரொம்ப ஓழுங்கா?


"நீ மட்டும் என்ன ரொம்ப ஓழுங்கா?"

என்று உங்களை ஓருவர் கேட்கிறார் என்றால்,நாம என்ன செஞ்சியிருந்த நம்மல பார்த்து கேட்டுயிருப்பார்?ரூம் போடாமலேயே யோசிச்ச தெரிஞ்சிடும்..!நீங்க அவரது செயல்பாடுகளை சுட்டிக்காட்டி,குறைக் கூறியிருக்கீறீர்கள் என்று அர்த்தம்.எப்பொழுதுமே பிறர் தங்களை நோக்கிச் சுட்டுவிரல் காட்டுவதை யாரும் விரும்புவதில்லை.இன்னும் சிலர் இந்த‌ கேள்விய கேட்க‌முடியாம‌?ப‌க்க‌த்துல‌ உள்ள‌வ‌ர்கிட்ட‌ சொல்லிவிட்டு,இல்ல "கிளம்பி வந்தூட்டனுங்க"...ன்னு மனசுக்குள்ளே புலம்பிக்கிட்டு போய்விடுவார்.

ஏன் நாம் சுட்டிக் காட்ட ஆசைப் படுகிறோம்..?என்கிற கேள்விக்கு... "ஏதோ நமக்கு தெரிச்ச‌ நல்லத சொல்லலாமேன்னு..." பதில் வரும்.நீங்க என்ன தான் நல்ல நோக்கத்தோடு சென்னாலூம்,அவை சில நேரங்களில் பலிக்காது இத்தனைக்கும் யாரோ ரோட்டில் நடந்து போரவர்கிட்ட சொல்ல போவதில்லை.(சொன்ன காட்டுன சுட்டுவிரல கையோட எடுத்துக்கிட்டு போற ஆளுளாம் இருக்கான்).நம்முடைய நெருங்கிய சொந்தமோ, நண்பர்களிடத்தில் சொல்லியிருப்போம்..!நம் நோக்கம் வீணடிக்கப்பட்டதற்காகவும் , திசைமாறிப் போனதற்காகவும் நாம் நிச்சயம் வருந்த வேண்டிவரும்.நாம் வார்த்தைக‌ளை வாய்க்குள்ள‌யே விழுங்க‌ வேண்டியிருக்கும்.

நாம‌ சொல்ல‌ வேண்டிய பொறுப்புல‌ இருக்குர‌த‌னால‌ சொல்ல‌ வேண்டிருக்கும் போது, நம்ம என்ன சொல்ல விரும்புறோமோ,அதை பார்முலா பயன்படுத்திச் சொன்ன கேப்பாங்க..!பார்முலாவா எது எதுக்கெல்லாம் க‌ண்டுபிடிப்பிங்க‌டா?

பார்முலா : (கட்டம் கட்டுனா தனியா 2 மார்க் போடுவாங்கன்னு எங்க வாத்தியார் பள்ளிகூடத்துல சொன்னது)

****************************
* முர‌ண்பாடா பேசுற‌து...! *
****************************

"என்ன மச்சான் (நண்பேண்டா) டைலியும் சரக்கு போல..!"சில கணங்கள் அவர் முகத்தை பார்த்துவிட்டு,"வேல டென்சனா இருக்கும்...!என்ன தான் டென்சனா இருந்தாலும் டைலி அது கொஞ்சம் ஓவர் தான்..!" இந்த ரீதில பேசனூம்.இந்த இடத்துல டைலாக் டெலிவரி ரொம்ப முக்கியம்..

"வீட்டையும் கொஞ்சம் கவனிங்க மச்சான்!(சொந்தம்டா) அத்தனை பேருக்கும் உங்கமேல ரொம்ப எதிர்பார்ப்பும்,வருத்தமும் நிறைய இருக்கு?” சிறு கணத்தை முழுங்கிவிட்டு, ”நீங்க என்ன பண்ணுவீங்க? எல்லா தொழிலயும் நஷ்டம் வர தான செய்யுது? குடும்பத்துக்கு குறை வைக்கக் கூடாதுன்னுதான் பார்க்குறீங்க! நீங்களும் வீட்ல இருக்கறவங்களும் மனசுவிட்டுப் பேசினாதானே?” என்கிற‌ ரீதியில்...

இது தான் முரண்பாடா பேசுர பார்முலா? இந்த முரண்பாடு என்னத்த சொல்லுது? "நாணயத்தின் இருபக்கங்களையும் உணர்ந்தது போல இருபுறமும் உணர்ந்துதான் இருக்கிறேன். இருந்தாலும் நான் சொன்னதில் நல்லதை எடுத்துக்கோ" என்கிற இந்த மாதிரியன அணுகுமுறைகள்தான் நம்மை பார்த்து சுட்டுவிர‌லை நீட்டி கேட்காது
"நீ மட்டும் என்ன ரொம்ப ஓழுங்கா?"


போட்டோ கமெண்ட்:

மேலே உள்ள கேள்வி கேட்டா முகத்த பக்கெட் போட்டு மூடிக்கிட்ட சுத்த முடியாது..!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 17, 2010

ஆன்லைன் வசதி -‍ அரசு துறைகள்தமிழக அரசு,ஆன்லைனில் வசதி பெறும் வகையில் இரண்டு சேவைகளை,இரண்டு நாட்களுக்கு முன் ஏற்படுத்தியிருக்கிறது.

அ:

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், "கம்ப்யூட்டர் நெட் ஒர்க்" மூலம் இணைக்கப்பட்டுள்ளதால்,வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதியை துவங்கி இருக்கிறது தமிழக அரசு.
ஆன்லைனில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

ஆ:

ஓட்டுநர் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை தமிழக போக்குவரத்துத் துறை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

முதல்ல -க்கு வருவோம்,5 கோடி ரூபாய் மதிப்பில் இதை செயல்படுத்திருக்கிறது அரசு.இனி கல்வித் தகுதியை,அவரவர் வீட்டில் இருந்தபடியே இணையதள முகவரியான : www.tnvelaivaaippu.gov.in ஆன்லைனில் பதிவு செய்யலாம்.விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் "ஸ்கேன்' செய்து அனுப்ப வேண்டும்.அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும்.மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை என்கிறது தமிழக அரசு.பயனாளர்களின் சார்பாக‌ பாராட்டுக்கள்...!

முதல்ல -க்கு வருவோம், http://transport.tn.nic.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பதாரரின் கேட்கப்பட்ட விபரங்களைக் கொடுத்தால்,அடையாள எண்ணோடு (ஐ.டி. எண்) ஒப்புகை சீட்டு(Acknowledgement) வந்துவிடும்.சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சென்று கட்டணத்தைச் செலுத்தி, கணினி மூலம் நடத்தப்படும் எல்.எல்.ஆர். தேர்வில் வெற்றி பெற்றால்,உடனடியாக ஓட்டுநர் பழகுனர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.தனக்கு விரும்பிய நாளையும்,நேரத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம் என்பது இதன் சிறப்பு அம்சமாக கூறுகிறது அரசு.

ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிவு வந்ததும் 10, பிளஸ்2 மாணவர்களின் கூட்டம் எந்நேரமும் அலைமோதும்.நான் பலமுறை அலுவலகத்தை கடந்து செல்கையில், மாணவிகளோடு "வறுகடலை" வறுத்தப்படி மாணவர்களை...! பார்த்துயிருக்கிறேன்.(இனி அவங்க என்ன செய்வாங்க..?).

ஏனைய நாட்களில் பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் தங்கள் கல்வித் தகுதியை பதிவு மற்றும் பதிவுமூப்பு செய்ய வருவதால்,எந்நேரமும் கூட்டம் அலைமோதும். அதே போன்று எல்.எல்.ஆர். விண்ணப்பத்துக்கு ஒப்புகை அட்டையும் கிடைக்கிறது.விரும்பிய நாளில், விரும்பிய நேரத்தில் தேர்வு செய்துகொள்ளலாம். விண்ணப்பதார‌ருடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம் முதலான விவரங்களை பிழையின்றி பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது.பொதுவாக‌ இந்த வசதிகள் மூலம் ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுவது குறையும்.நான் எல்.எல்.ஆர். எடுக்க கே.கே.நகர்(சென்னை) ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பட்டபாடு எனக்கு தானே தெரியும்..!?

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் அலையாமலாவது இருக்கலாம் அல்லவா?போக்குவரத்து துறையில்,எல்.எல்.ஆர். எடுப்பதற்கே தரகர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு நிற்பவர்களை நான் பார்த்துயிருக்கிறேன்...!இனி இந்த தரகர்கள் சாரி சாரி...(ஓட்டுநர் பயிற்சி பள்ளி (அ) இந்தியன் கமல்'கள்)புண்ணியவான்கள் என்ன செய்வாங்க...?எல்லாத்துக்கும் வழியிருக்கும் பாஸ்...!

அரசின் இன்னும் சில துறைகளில் ஏற்கனவே கணினி மயமாக்கப்பட்டுயிருக்கிறது மின்சார வாரியம்,பத்திரபதிவு அலுவலகம் போன்றவற்றில்...? அந்த அலுவலங்களில் எப்படியொல்லாம் இந்த வசதிகள் பயன்பாட்டில் இருக்கிறது என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றங்கள் தான் காத்திருக்கிறது..!? உதாரணமாக கணினியில் பிரிண்டர் சரி இல்லை,மை தீர்ந்துரிருக்கும்,அந்த இணையதளம் வேலை செய்யாது இப்படியாக இருக்கும் பிரச்சனைகள்...!
இரண்டு நாட்களில் வேலை வாய்ப்பு பதிவு தளம் வேலை செய்யவில்லை...??!!திட்டங்கள் கொண்டு வருவது போல,அதில் கூடுதல் கவனம் செலுத்த அரசு முன்வர வேண்டும்.

இந்தியாவில் ஐ.டி துறையில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஓன்றான,தமிழ் நாட்டில் பொறியியல் மற்றும் இளங்கலை படிப்பின் மூலம் ஆண்டிற்கு லட்சங்களில் மென் பொருள் வல்லுனர்களை உருவாக்கும் இந்த முற்போக்கு மாநிலத்தில் இந்த முறைகள் பல‌ ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும்...!அரசின் தாமதமான முடிவானாலும் வரவேற்க தவற மாட்டோம்.வரவேற்க தயாராயிருக்கின்ற நாங்கள் சில தவறுகளை சுட்டிக் காட்டுவதும் எங்கள் கடமையாகி விடுகிறது...!

போட்டோ கமெண்ட்:எல்.எல்.ஆர். விண்ணப்பிக்க ஆன் லைனில் இடம்பெற்றிருக்கிற விண்ணப்பம்

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 14, 2010

இறந்தும் வாழ்கிறார்கள் சிலர்...!


ச‌மீப‌கால‌ங்க‌ளில்,நாளிதழ்களில் வெளியாகிற செய்திகளில் ஓன்று மூளைச்சாவு (பிரெய்ன் டெட்) மற்றும் உடல் உறுப்பு தானம் ப‌ற்றிய‌ச் செய்தி.அதைப் ப‌ற்றி தெரிந்துக் கொள்ள‌ எண்ணி இணையம் மற்றும் நாளிதழ்களில் என‌க்கு கிடைத்த தகவல்கள் உங்க‌ள் பார்வைக்கு ஓர் ப‌திவாக‌.தகவல்கள் தவறாக அர்த்தம் புரித்துக்கொள்ளாமல் இருக்க தகவல்கள் எடுக்கப்பட்ட சில இணைத்தின் எழுத்து நடையிலேயே சில வரிகள் இடம்பெற்றியிருக்கிறது,நடு நடுவே என் எண்ண எழுத்துக்களும் இடம்பெற்றியிருக்கிறது.என்னால் முடிந்த‌ வ‌ரை நீங்க‌ள் ப‌டிப்ப‌த‌ற்கு சுவார‌சிய‌மாக‌ வ‌ழ‌ங்கியிருக்கிறேன்...!


முதலில் மூளைச்சாவு ன்னா என்னான, ஓருவர் விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்து, உடல் செயலற்றுப்போவதை,டாக்டர்கள் "கோமா" என்கின்றனர்.அந்த‌ "கோமா"வை பல‌ வகையாக பிரிக்கப்படுகிறது.அதில் ஓரு வகை மீண்டு வர முடியாத நிலை தான் மூளைச்சாவு எனப்படுகிறது.இது அடைந்தவரின் இதயம் துடிக்கின்றபோதும்,சொந்தமாக மூச்சுவிட முடியாததால் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவிக் கொண்டு மூச்சு செலுத்தப்படும்.


மூளைச்சாவை உறுதிசெய்வ‌த‌ற்கு 13 வகையான சோதனைகள் க‌டைபிடிக்க‌ப்ப‌டுகிறது‌.


* ஆறு மணி நேர இடையில் இரு முறை சோதனைகள் நடத்தப்படும்.
* சோதனையின்போது,மூளைச்சாவு அடைந்தவர் உடல்,குளிர்ந்த நிலையிலும்,இரத்த வெளியேறி,உடல் சூடான நிலையிலும் இருக்கக் கூடாதாம்.
* கண்மணியின் அளவு எப்படி உள்ளது;அது சுருங்கி விரிகிறதா? மற்றும் காட்டன் துணியால், கரு விழி அசைகிறதா என தொட்டுப் பார்க்கப்படும்.
* ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் அகற்றிய பிறகு,அவரால் சுயமாக மூச்சு விட முடிகிறதா என்று சோதிக்கப்படும்.
* வாயில் பிளாஸ்க்டிக் டியூப் வைத்து, இருமல் உள்ளதா என்றும், காதுக்குள் சுடுநீர் ஊற்றி கண்ணசைவு உள்ளதா என்றும் சோதிக்கப்படும்.


இந்தச் சோதனைகளை நடத்தி ஒருவர் மூளைச்சாவு அடைந்ததை, அவருக்கு சிசிச்சை அளிக்கும் டாக்டர் முதலில் உறுதி செய்வார். அதன்பிறகு, அம்மருத்துவமனையின் சூப்பிரண்டு உறுதிப்படுத்துவார். தொடர்ந்து, நரம்பியல் நிபுணர்கள் (நியூராலஜிஸ்ட்) அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (நியூரோ சர்ஜன்) சோதிப்பர். அவர்களும் உறுதி செய்த பிறகு, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பதிவு பெற்ற டாக்டர் சோதிப்பார். இவ்வாறு நான்கு டாக்டர்கள் சோதனை நடத்திய பிறகே, ஒருவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படும்.


மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் ஒரு வாரம் வரை துடித்துக்கொண்டே இருக்கும். உடல் உள்ளுறுப்புகளைத் தொடர்ந்து இயங்க வைக்கத் தேவையான சக்தியைக் கொடுக்க, ஊசி மூலம் குளுகோஸ் செலுத்த வேண்டும். இதயத்தை சீராக இயங்க வைக்க டோபோமின், டிரன்லெனின், டோடிடமின், ஹைசோ பெர்னலின், வேசோ பிரசின், டி3 தைராக்சின் உள்ளிட்ட மருந்துகளை உடலினுள் தேவைக்கேற்ப செலுத்த வேண்டும்.


மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து இதயத்தை அகற்றிய பின், அதை நான்கு மணி நேரத்திற்குள்,மற்றவர் உடலில் செலுத்த வேண்டும்.இதயம் மட்டுமின்றி இதய வால்வுகளையும் தேவைப்படும் நபர்களுக்கு பயன்படுத்த முடியும்.கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், எலும்புகள், தோல் ஆகியவற்றையும் மற்றவர்களுக்கு பயன்படுத்தலாம்.கடந்த ஆண்டில் மூளைச்சாவு ஏற்பட்ட 59 பேர், அவர்களது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்துள்ளனர். அவர்களது உடலில் இருந்து, 118 சிறுநீரகங்கள், 47 கல்லீரல்கள், 15 இருதயங்கள், 84 கண் வழித்திரை படலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் பாகங்கள், உடல் உறுப்புகளுக்காக காத்திருந்த பலருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இருதய மாற்று ஆபரேசன் சென்னை அரசு பொது மருத்துவமனை உட்பட இரண்டு மருத்துவமனைகளில் செய்யப்படுகின்றன. மற்ற உடல் உறுப்புகள் பெரும்பாலான மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்களால் பொருத்தப்படுகின்றன.இப்படியாக இறத்தும் வாழ்கிறார்கள் சிலர்...!


மூளைச்சாவு ஏற்பட்டவர்களை பராமரிக்க ரூ.5 கோடியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழக அரசு விசேஷ மையத்தை திறந்துள்ளது. மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. தானம் செய்யக்கூடிய உறுப்புகளை பாதுகாக்கத்தான் அரசு அதற்காக தனி பராமரிப்பு மையத்தை உருவாக்கி உள்ளது.


உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது மேலும் விளம்பரங்கள் மூலம் மக்களை சென்றடைய வைக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.தமிழகத்தில் மூளைச்சாவு ஏற்பட்டவரது உடல் உறுப்புகளை, ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு விரைவாக எடுத்துச் சென்று பொருத்த, தமிழக அரசுக்கு சொந்தமான சிறிய ரக விமானம், ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கு வருவ‌தாக‌ செய்தி வ‌ந்த‌து,அது ந‌டைமுறை ப‌ட்ட‌தாக‌ தெரிய‌வில்லை...!ஒருவர் கோமா நிலையில் இருக்கும்போதே பணத்திற்காக, இறந்ததாகக் கூறி அவரின் இதயத்தை வசதி படைத்தவர்களுக்கு விற்கும் வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.இது போன்ற‌ செய‌ல்க‌ள் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தால், ம‌க்க‌ளிட‌த்தில் ஏற்ப‌ட்டுள்ள‌ விழிப்புண‌ர்வு கேள்விகுறியாகிவிடும்,ஆக‌வே அர‌சு இதுபோன்ற‌ த‌வ‌றுக‌ள் ந‌டத்திடா வ‌ண்ண‌ம் தீவிர கண்காணிப்பு மற்றும் க‌டுமையான‌ ச‌ட்ட‌ங்க‌ள் மூல‌ம் நடக்காமல் தடுக்கப்பட‌ வேண்டும்.

போட்டோ கமெண்ட்:
உடல் உறுப்புக்கள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய இதயேந்திரன்.


படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 01, 2010

மனுக்களுக்கு இரசீது தரும் மாவட்டஆட்சியர்:


வேற எங்கையுமில்லை நம்ம தமிழ்நாட்டில் தான்..!காஞ்சிபுரத்தில் ஆட்சியராக பதவி வகிக்கும் "சந்தோஷ் மிஸ்ரா"இதை செயல்படுத்தி வருகிறார்.அவருக்கு மனுக்கள் கொடுத்தால் இரசீது கிடைக்கிறதாம்.மனுக்கள் தொடர்பான நடவடிக்கை எடுக்கபடுகிறதாம்,ரசீதைக் காட்டி "இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை என்ன?என்று வினவலமாம்.


இரசீது இல்லாமல் மனுக்கள் வாங்கப்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை என்று எச்சரித்துள்ளதாக கேள்வி.இதன் மூலம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை ஏற்படுகிறது...!


பொதுவாக நான் கேள்வி பட்டவரை,நமது தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இ.ஆ.ப அதிகாரிகளின் ஈடுபாடு மந்தமாக இருப்பது போல் தோன்றுகிறது,சிலரே தனித்துவத்துடன் செயல்படுத்துகின்றனர்.உதாரணமாக இறையன்பு,உமாசங்கர்,இராதகிருஷ்ணண் இப்படியாக உள்ளது.ஆனால் வேற்று மாநிலத்தில் இருந்து உயர் பொறுப்புக்கு வரும் அதிகாரிகள் தைரியமாக செயல்படுவது போல தெரிகிறது.சில ஆட்சியர்களின் நிலை இன்று வருந்ததக்கதாய் இருக்கிறது,ஆட்சியாளார்களுக்கு ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் உதைபந்தாக தெரிவது பரிதாபமாகயுள்ளது...!


மனுக்களுக்கான இரசீது முறை மூலம் ஒருவிதத் தார்மீகப் பொறுப்பையும் சந்தோஷ் மிஸ்ரா பெற்றுள்ளார் என்றே நாம் நம்ப வேண்டியுள்ளது.ரசீதுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் அரசியல் மற்றும் எந்த ஓரு நிர்பந்தங்களுக்கும் உட்பட தேவையில்லை.இந்த மாதிரியான செயல்கள் மக்களுக்கும் அதிகாரிக்கும் உள்ளே இடைவெளியை குறைக்கும் என்பதில் சிறிது அளவும் சந்தேகமில்லை.இது போல சின்ன சின்ன மாற்றங்களை ஆட்சியர் மற்றும் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கொண்டு வரலாம்.

ஆட்சியர் பணி என்பது நாட்டின் முக்கியமான பதவி ஆகும்.அதை கெளரவ பணியாக கருதாமல்,நிறைய மாற்றங்களை செய்து,நற்காரியங்கள் செய்ய வாய்ப்பு இருக்கிறது.புதியதாக ஓரு வேலை செய்யும்போது,மனதுக்குள் ஓர் வேகம் இருக்கும் இது மனித இயல்பு.புதிதாக பொறுப்புக்கு வரும் உயர் அதிகாரிகள் சட்டங்களை பயன்படுத்தி,புதிய செயல்களை,திட்டங்களை வெளிக்கொண்டு வரலாம்.சிறிய செயல்கள் நாளை ஓர் பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்...!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!