August 12, 2010

நமது பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை :


தொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் பார்ப்பவரா .. எங்களுக்கு எல்லாம் வெற வேலையே இல்லையா? என்று கோபப்படக்கூடாது.அப்படி பார்த்துக்கிட்டு, படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு தான் கீழே உள்ள மேட்டர்...அப்படி மொய்பவர்களுக்கு இருதயம் சம்மந்தமான நோய் வரும் என அமெரிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என நாளிதழ் ஓன்றில் செய்தி வந்துள்ளது.
அமெரிக்காவின் டெய்லி மெயில் எனும் மருத்து இதழின் ஆசிரியர் டேவிட் டஸ்டன் கூறுகையில்... நாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டரில் பணி செய்வதன் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இணையதளத்தில் முழ்கிவிடுவோம் அவ்வாறு நாள் ஒன்றுக்கு 23 மணிநேரமும் சைட் பார்ப்பவர்களுக்கு 65 சதவீத இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இது சாதாரணமாக 11 மணிநேரம் சைட் பார்ப்பவர்களைவிட அதிகம் ஏற்படும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக நாம் நடக்கும் போது, நிற்கும் போது கால்களில் தசைகளில் வேலை செய்கின்றன. இதன் மூலம் உடலில் நம் இதயத்தில் செல்லக்கூடிய ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு சீராக உள்ளது. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் போது தான் உடல் ஆக்கச்சிதைவு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இருதயம் பலவீனமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது போன்று ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பதும் அதற்கு காரணமாகும். ஆகவே சிறிது நேரம் எழுந்து நிற்பது தான் சிறந்தது எனவும் அறிவுறுத்துகின்றனர்.பெண்களில் ஆறு மணிநேரத்திற்கு மேல் பணியாற்றினால் 37 சதவீதமும், ஆண்களுக்கு 18 சதவீதமும் அதிகரிக்கும் என அமெரிக்காவின் மயோ மருத்துவமனையின் மருத்து பேராசிரியர் ஜேம்ஸ் லேவின் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதை படிக்கும் போது "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நச்சு" என தோன்றுகிறது.இப்போதொல்லாம் பத்திரிக்கை,தொலைக்காட்சி போன்றவற்றில் இதை செய்யாதால் அது வரும்,அதை செய்தால் இது வரும் என்றெல்லாம் வருகிறது.இது போன்று செய்திகளை படிக்கும் போது எனக்கு மனதில் தோன்றும் எண்ணம், இதையொல்லாம் யார் யார் கடைபிடிப்பார்கள் என்று....அந்த செய்தியை படித்தவர்கள் எல்லோருமா? இல்லை படித்துவிட்டு அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்ணவா? நான் எந்த ரகம் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை என நினைக்கிறேன்...

போட்டோ கமெண்ட்:
அந்த அம்மணிய எத காட்டி,சொல்லி சிரிக்க வச்சியிருப்பான்...! அது அவர் அவர் எண்ணத்தை பொறுத்தது....!

எனது முதல் பதிவு இது...! படிச்சிட்டு ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

1 comment:

  1. பதிவுலகுக்கு வரவேற்புகள் வெற்றி!

    தொடர்ந்து எழுதுங்க... ‘வெற்றி’ நிச்சயம்!

    ReplyDelete