August 18, 2010

சரி செய்யுமா இரயில்வே நிர்வாகம்?


தமிழகத்தில்,சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் இரண்டு வகையான பயணம் வசதி இருக்கிறது. ஓன்று முதல்வகுப்பு பயணம் மற்றொன்று இரண்டாம்வகுப்பு பயணம்.பிளாட்பார கவுண்டரில் நாம் பயணம் செய்ய வாங்கினால் இரண்டாம் வகுப்பு டிக்கெட்களே தரப்படுக்கிறது. முதல் வகுப்பு டிக்கெட்டுக்கும் இரண்டாம் வகுப்புக்கு டிக்கெட்டுக்கும் விலையில் இரண்டு மடங்கு வித்தியாசம் இருக்கும்.பெரும்பாலும் சீசன் டிக்கெட் எடுப்பவர்கள் கூட்டத்திற்கு பயந்து முதல்வகுப்பு சீசன் டிக்கெட் எடுத்துவிடுபவர்கள் உண்டு.

இது சொல்ல வந்த மேட்டர் இல்ல....ஊரில் இருந்து அதாவது மற்ற மாவட்டங்களில் இருந்து(மின்சார ரயிலை பயன்படுத்தாதவர்கள்) வருபவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால், அவர்களுக்கு இரண்டு வகையான டிக்கெட் விபரம் தெரித்திருக்க வாய்ப்பில்லை.டிக்கெட் கவுண்டரில் வாங்கிய இரண்டாம்வகுப்பு டிக்கெட் கையில் வைத்திருப்பார்கள், ரயில் வந்தவுடன் ஏதோ பெட்டியில் ஏறிவிடுவார்கள்.ஏறிய பெட்டி முதல்வகுப்பாயிருந்தால் அடுத்த ரயில்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பிடித்து,இறக்கி பைன் கட்டச் சொல்லுவார்கள்.மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்தியவர்களுக்கு தெரியும்,ரயில்நிலைய பரிசோகர் அறையில் இருந்து பரிசோகர் பார்த்துவிட்டு"மானை பிடிக்க பாய்கிற புலியை" போல பாய்வார்கள்.நீங்கள் ரயில்நிலையத்தில் கவனித்தீர்கள்ளானால்,பரிசோதகர் அறையில் பைன் கட்ட சொல்லி வாக்குவாதம் நடந்துக்கொண்டிருக்கும்,பிடிப்பட்ட நபர்களை பார்த்தால் தெரியும் கண்டிப்பாக மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்தாதவர்கள் இருப்பார்கள்.
ஏன் அவர்கள் மட்டும் இப்படி தவறுதலாக ஏறி மாட்டிக்கொள்கிறார்கள்? என்று நான் யோசித்தப்போது, ரயில்வே நிர்வாகம் விளக்கமான விளம்பரப்பலகைகள் வைப்பதில்லை. ரயிலில் பெட்டிகளில் இரண்டாம்வகுப்பு பெட்டிக்கும்,முதல் வகுப்பு பெட்டிக்கும் வர்ணத்தால் வித்தியாசப்படுத்தி இருப்பார்கள்.அந்த வித்தியாசம் பெரிதாக பெட்டிகளை வேறுபடுத்தி காட்டுவதில்லை. அதிகம் பேருந்தை பயன்படுத்தியவர்களுக்கு இந்த வேறுபாடு புரிவதில்லை.
இரயில்வே நிர்வாகம் முதலில் கண்ணில்படுகிறபடி விளம்பரபலகைகள் வைக்கவேண்டும். மற்றும் இப்படியாக மாட்டிக்கொள்ளும் அப்பாவிகளை விளக்கம் சொல்லி எச்சரித்து அனுப்பலாம்.(அவர்கள் தெரிந்து ஏறியிருக்க வாய்ப்பில்லை).இதை சரி செய்யுமா ரயில்வே நிர்வாகம்?ரயில்வே பற்றி நிறைய எழுதலாம்...இப்பொ இதுமட்டும்....

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...! ...!

12 comments:

  1. நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. தவறு செய்ய வைத்து விட்டு, பிடித்துவிட்டேன் பார் என்று கூறுவார்கள்.
    தவறு நிகழாமல் இருக்க மக்களுக்கு அதிக அளவில் எடுத்து கூற வேண்டும். முடித்த அளவில் தவறு நிகழ வண்ணம் செய்ய வலி செய்ய வேண்டும்.
    (பெரும் தொழில் இடங்களில் error proofing என்ற ஒன்று உண்டு. மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் அதை எல்லா இடங்களிலும் கொண்டு வர வேண்டும். தவறு கண்டு பிடிக்கும் துறை இருந்தாலும், அவர்கள் பிடிபதெல்லாம் எளியவர்களையே.

    ReplyDelete
  2. ஆமாம், முதல் வகுப்பில் ஏறி விட்டு அவஸ்தை படுவர்களை அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மாற்றும் படி நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். உள்ளே ஏறிய பின் தான் சீட் வித்தியாசம் தெரியும்.புதியதாய் ஏறுபவர்களுக்கு நாம்சொல்லும் போது தான் தெரியும்.இரண்டாம் வகுப்பு 8 ரூபாய் என்றால் முத்ல் வகுப்பில் ஒரு டிக்கெட் 40 ரூபாய் வரும்.

    ReplyDelete
  3. @வெப் தமிழன்
    எனது வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி...!

    ReplyDelete
  4. @அமுதா கிருஷ்ணா
    நானும் இதைச் செய்துயிருக்கிறேன்..!
    எனது வலைப்பக்கம் வந்தமைக்கும்,பின்னூட்டம் போட்டமைக்கும் நன்றி...!

    ReplyDelete
  5. அதென்ன மின்சார ரயில் மின்சார ரயில். இப்பொழுது பெரும்பாலான ரயில்கள் மின்சாரத்தில் தான் ஓடுகின்றன. ஆங்கிலத்தில் local trains என்று அழைப்பதை தமிழ் படுத்துங்கள்.

    ReplyDelete
  6. நல்வரவு .

    இது போன்ற உப்யோகமான தகவல்களை தாருங்கள் தொடர்ந்து...

    வெற்றி நிச்சயம்..

    ( பதிவுலக குப்பைகளோடு கலந்துவிடாமல் நல்ல தகவல்களை , நிகழ்வுகளை பதியுங்கள்.. முக்கியமா பின்னூட்ட மொகத்தில் விழாமல்)

    வாழ்த்துகள்

    ReplyDelete
  7. ரயில்வே துறையில் பல குறைபாடுகளில் இதுவும் ஒன்று.சமீப காலங்களில் செங்கல்பட்டு போகும் ரயில்களில் போகும் போது அதுவும் நின்றுகொண்டு போகும் போது எந்த ஸ்டேஷன் வந்திருக்கு என்றே தெரியாமல் அவஸ்தைபடும் அளவுக்கு உள்ளது.நிறைய போர்டுகளை காணவில்லை.

    ReplyDelete
  8. உண்மை தான் தோழரே. இது போன்ற பல குறை பாடுகள் இருக்கின்றன... நம் நாட்டின் பல துறைகளில்..

    வாழ்த்துக்கள் நண்பரே.. தொடரட்டும் உங்கள் பணி..

    ReplyDelete
  9. @புன்னகை தேசம்,வெறும்பய & ADAM
    எனது வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி...!

    ReplyDelete
  10. @ வடுவூர் குமார்
    எனது வலைப்பக்கம் வந்தமைக்கும்,பின்னூட்டம் போட்டு, ஊக்கப்படுத்திமைக்கும் நன்றி...!

    ReplyDelete