November 22, 2010

வெற்றி டைம்ஸ் 22/11/10


கடந்த வாரம் "திறந்த வெளி" என்ற பெயரில் எழுதிய பதிவு இனி "வெற்றி டைம்ஸ்" என்ற பெயரில்...
---------------------------------------------------------------

எடியூரப்பா = ஏடாகூட‌ம்?
முதல்வர் எடியூரப்பா தனது மகன்களுக்கு ஏக்கர் கணக்கில் நிலம் ஒதுக்கிய சிக்கலில் மாட்டிக்கொண்டு,தற்போது பதவியில் நீடிப்பாரா அல்லது அவருக்கு பதில் மாற்று நபர் முதல்வர் பதவியில் அமர்த்தப்படுவார்களா என்று பட்டிமன்றம் நடந்து வருகிறது.
காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழல்-முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்புவதற்கு எடியூரப்பா விவகாரம் இடையூறாக இருப்பதாக பாஜகவினர் கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.அதனால் அவரை தில்லி வருமாறு பாஜக அழைத்திருக்கிறது.இந்தியாவில் அதிக சோதனையை சந்தித்த முதல்வர்...இவராக‌ மட்டுமே இருக்க முடியும்...!!!!எதிராளியால் போகாத பதவி..பாஜகவின்னாலேயே போகுமோ?
--------------------------------------------------------------------------------------------
உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க‌:

தொலைக்காட்சியில் நேர‌டி ஓளிப‌ர‌ப்பில் ஓவ்வொரு சேன‌லிலும் கால் ப‌ண்ணி பேசும் நேய‌ர்க‌ள் கால்பேசும் போது தொகுப்பாளினி நேய‌ர்க‌ளின் போனை மூயூட் அ ச‌வுண்டை குறைக்க‌வோ சொல்கிறார்க‌ள்.எக்கோ ஆகும் என‌ சொல்வார்க‌ள்.நேய‌ர்க‌ள் கால் ப‌ண்ணி பேசுவ‌தே அவ‌ர்க‌ள் பேசுற‌து டிவில‌ கேட்குறத,அவங்க வீட்டில‌ உள்ள‌வ‌ங்க‌ கேட்க‌னுன்னு உள்ள‌ ஆசையில‌ தான்...!இதுக்கு டெக்கினிக்க‌ல‌ ஏதாவ‌து செய்யுங்க‌ டெக்னிக்க‌ல் புழு க்க‌ளே(புத்த‌க‌ புழு போல‌ இது)...!!!
--------------------------------------------------------------------------------------------
மழை சீசன் இது:

டூவீலர் பயணம் செய்பவர்கள் கவனிக்கவேண்டியது.மழை பெய்யும் போதோ இல்ல மழை விட்டு இருக்கும் போதோ ரோட்டுல தேங்கியிருக்கிற மழை தண்ணி முன்னாடி போற வண்டி பின்னால் வரும் வண்டியில வர‌வங்கள குளிப்பாட்டி கிட்டே வருகிறது.முன்னல்லாம் வண்டி பின்னாடி வீல்ல லெதர் ஓண்ணு தொங்கும் அது மண்ணு கலத்த தண்ணிய தேக்கி பின்னாடி அடிக்க விடாது.இப்பொ வர்ற வண்டியில பேசன் ங்க்கிற பேர்ல பின்னாடி வீல் “மட்காட்” சின்னதா புது வண்டியில வர்து..இதுக்கு ஹேண்டில ஏதாவது சுவீட்சி போல வைச்சி,மழை நேரத்துல மட்டும் வெளியே வந்து,உபயோக படுத்திக்கொள்வது போல செய்யலாம்.
--------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல் சமூக விழிப்புணர்வுக்காக பிளாஸ்டிக் ஓழிப்பு பற்றிய அனிமேட்டட் வீடியோ:--------------------------------------------------------------------------------------------
படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!

15 comments:

 1. பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!

  ReplyDelete
 2. டிவி வால்யூம் - டிவியில் பேசுவதைக் கேட்டுக் கொண்டே பேச நினைத்தால், அது தொலைபேசியில் எக்கோ ஆகும். மேலும், பேசுபவர் (நேயர்) கவனம் டிவியில் இருப்பதால், தொலைபேசியில் பேசுவத்ற்கு டிலே ஆகும். இது நிகழ்ச்சியினைத் தாமதப்படுத்தும். தொலைபேசியை வெளியில் எடுத்துச் சென்று பேசினால், வீட்டில் இருப்பவர்கள் டிவியைப் பார்த்துக் கொள்ளலாம். தடங்கல் இருக்காது.

  மழை நீர் - மட்கார்ட் - ஆமாம், ஏதாவது செய்வது நல்லது.

  ReplyDelete
 3. கொத்து பரோட்டா அளவுக்கு பிரபலம் ஆக வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. @ஹுஸைனம்மா said...
  தகவலுக்கு நன்றி...!!!

  ReplyDelete
 5. @கே.ஆர்.பி.செந்தில் said...
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..!!!

  ReplyDelete
 6. அட நீங்களும் ஆரம்பிச்சாச்சா?

  வாழ்த்துக்கள்... டீவி மேட்டர் யோசிக்கவேண்டிய விஷயம்

  ReplyDelete
 7. //@அருண் பிரசாத் said...

  அட நீங்களும் ஆரம்பிச்சாச்சா?

  வாழ்த்துக்கள்... டீவி மேட்டர் யோசிக்கவேண்டிய விஷயம்//
  நாங்களும் ஆரம்பிச்சுட்டம்ல...!!!
  வருகைக்கு நன்றி..!!!

  ReplyDelete
 8. தொகுப்பு கலக்கல்!!

  ReplyDelete
 9. //எஸ்.கே said...
  தொகுப்பு கலக்கல்!!//
  உங்கள் பின்னூட்டம் உற்சாகத்தை தருகிறது...

  ReplyDelete
 10. பல்சுவைப்பதிவுகளுக்கு தலைப்பு பிடிக்க எல்லோருமே படாத பாடுதான் படுகிறோம் போல...

  ReplyDelete
 11. //philosophy prabhakaran said...
  பல்சுவைப்பதிவுகளுக்கு தலைப்பு பிடிக்க எல்லோருமே படாத பாடுதான் படுகிறோம் போல...//
  ரொம்ப கஷ்டமாக தான் இருக்கிறது....

  ReplyDelete
 12. வெற்றி! நலமா? தொகுப்பு சுவாரஸ்யமாய் இருக்கிறது. தொடர்ந்து கலக்குங்கள்.

  ReplyDelete
 13. 'வெற்றி டைம்ஸ்' பிரபலம் ஆக வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. //மோகன்ஜி said...

  வெற்றி! நலமா? தொகுப்பு சுவாரஸ்யமாய் இருக்கிறது. தொடர்ந்து கலக்குங்கள்.//

  நலம்..தொடர்ந்து கலக்க முயற்சிக்கிறேன்...!!!!

  ReplyDelete
 15. //சே.குமார் said...
  'வெற்றி டைம்ஸ்' பிரபலம் ஆக வாழ்த்துக்கள்...//
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...!!!

  ReplyDelete