November 15, 2010

திறந்தவெளி 15/11/2010


எனது முந்தைய பதிவில் சினிமா விமர்சனம் முதன்முறையாக எழுதினேன்.அதற்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..!நன்றி..!
க‌லவை (அ)தொகுப்பு செய்திக‌ள் எழுதி சுவ‌ர‌ஸ்ய‌ ப‌திவாக‌ மாற்ற‌லாம் என க‌ண்டுபிடித்த‌ ப‌திவுல‌க‌ ச‌க்க‌ர‌வ‌ர்த்திக்கு ந‌ன்றி..!ந‌ன்றி..!!!(குரு வணக்கம்).இன்னொரு விச‌ய‌ம் இம்மாதிரியான‌ ப‌திவுகளுக்கு த‌லைப்பை பிடிப்ப‌து என்பது மகா கஷ்டம்.அதிலும் அடித்து,பிடித்து ஏதோ த‌லைப்பை க‌ண்டுபிடித்துவிட்டு ப‌திவுல‌கில் பார்த்தால் ந‌ம‌க்கு முன்னாடியே ஏதோ ம‌க‌ராசன்கள் அந்த‌ பெய‌ரில் கும்மிய‌டிக்கிறார்க‌ள்.

அப்புற‌ம் கற்பனை பஞ்சம் வந்தாலும் வரும்...!ஆனா த‌மிழில் வார்த்தைக‌ளுக்கா ப‌ஞ்ச‌ம்?ப‌ர‌ந்து விரிந்த‌து உல‌க‌ம்..!த‌மிழ் மொழியே திற‌ந்த‌வெளி பல்கலைகழகம் போன்றது.அதில் கிடைக்காத‌ வார்த்தைக‌ளா?ஆ வார்த்தையை பிடிச்சாசு.."திற‌ந்த‌வெளி" இனி ஒரு புது முயற்சியாக வார வாரம் "திறந்தவெளி" என்னும் பெயரில் அந்தவார நிகழ்வுகளும் எனது கருத்துக்களும் மற்றும் நான் ரசித்த,சொல்ல நினைக்கிற‌ விசயங்களையும் பற்றிய தொகுப்பாக‌ பதிவை எழுத‌ உள்ளேன்.உங்க‌ள் ஆதரவு,எதிர் க‌ருத்துக்க‌ளை பின்னூட்ட‌மாக‌ எதிர்ப்பார்க்கிறேன்.‍‍‍‍

-------------------------------------------------------------------------------------
கோட்டையில்லை கொடியில்லை அப்பவும் நான் ராஜா..!!!

நேற்றிரவு திரு ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முன்னாள் ‌மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆகியிருக்கிறார்..!இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட காத்திருத்தன எதிர்கட்சிகள்.
இதற்கிடையில் ராசா வகித்த பதவியை திமுக அமைச்சர்களுக்கு கொடுக்கக்கூடாது என திரு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆரம்பித்துவிட்டார்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு அது மீண்டும் கிடைக்குமா?ன்னு தெரியலை..!!!தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்துச்சோ இல்லியோ..!நம்ம கிட்ட அந்த பதவி இருந்த பீலீங் இப்பொ கிடைக்காது..!!!எது எப்படியோ ராசா விவகாரம் வடநாட்டு சேனல்களுக்கு நல்ல தீனீ..!!!

-------------------------------------------------------------------------------------
பாடவா டூயட் பாடலை
குரல் தேடலுக்கு குரல் கொடுத்து கலைஞர் டிவியில் விளம்பரம் வருகிறது.இவர்கள் குரல் தேடலை வேறு விதமாக ஆரம்பித்துவிட்டார்கள்.தனி தனியாக பாடிக் கொண்டிருப்பதை பார்த்து போர் அடித்துவிட்டது.இனி ஜோடியாக பாடுவதை குறிப்பாக தம்பதி சகவிதமாக டூயட் பாடுவதை காணலாம்.இந்நிகழ்ச்சி கலைஞர் டிவியின் டி.ஆர்.பி ரேட்டை கூட்டுமா? பார்ப்போம்...!!

-------------------------------------------------------------------------------------

கேமரா கண்ணில் பட்டு வாழ்..!!!

நிறுவனங்களில் மற்றும் பள்ளிகளில் கேமிரா பொறுத்துவது இன்று பேசஸனாகிவிட்டது (அ) கட்டாயமாக்கப்பட்டுவிட்டது..!.காசி தியேட்டரில் கழிவறையில் கேமிரா என கேள்விப்பட்டோம்.இம்..இம்..பாதுகாப்பு என்கிற பெயரில் ஏதோ அன்னிய கண்ணில் நாம் பதிவாகி கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே ஓரு மாதிரியாக இருக்கிறது...மற்றும் அவசரத்துக்கு தலையில் அறிப்பெடுத்தால் தலையை சொறிஞ்சால் கூட இந்த தேதியில்,இந்த நேரத்தில் இந்த நிமிடத்தில் இந்த ஆள் தலையை செறிஞ்சார் என டேடாபெஸ் சொல்லும்.இது வரமா?சாபமா? தெரியவில்லை..!!!வருங்காலங்களில் வீட்டைவிட்டு இறங்கியவுடன் தெருக்களில்,சாலைகளில்,பேருந்துகளில்..இப்படியாக பாதுகாப்பு என்கின்ற பெயரில் கேமராக்கள் வரும்....இதற்கு மாற்றாக வாழ முடியாது...ஊரோடு ஓட்டி வாழ பழக வேண்டும்...பழகுவோம்..!!!!

------------------------------------------------------------------------------------
தண்ணீர் அவசியம் பற்றிய வீடியோ காட்சி கீழே...படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!
பின்னூட்டம் போடுங்க..!!

10 comments:

 1. பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!

  ReplyDelete
 2. நல்ல முயற்சி நண்பரே... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ராசாவிற்கு பாட்டு சூப்பரு

  ReplyDelete
 4. @வெறும்பய said...

  நன்றி..!!!தங்கள் வருகைக்கு நன்றி..!!!

  ReplyDelete
 5. @அருண் பிரசாத் said...
  அந்த பகுதி எழுதும் போது..தானகவே அந்த பாட்டு மைன்ட்ல வத்துச்சு...
  நன்றி..!

  ReplyDelete
 6. // இம்மாதிரியான‌ ப‌திவுகளுக்கு த‌லைப்பை பிடிப்ப‌து என்பது மகா கஷ்டம் //
  சரியாக சொன்னீர்கள்... நானும் அனுபவப்பட்டிருக்கிறேன்...

  ReplyDelete
 7. @philosophy prabhakaran

  நன்றி..!!!தங்கள் வருகைக்கு நன்றி..!!!

  ReplyDelete
 8. நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. வீடியோ பயனுள்ளதா இருக்கு. மெயிலில் நண்பர்களுக்கு அனுப்புவேன். நன்றி.

  ReplyDelete
 10. //ஹுஸைனம்மா said...
  வீடியோ பயனுள்ளதா இருக்கு. மெயிலில் நண்பர்களுக்கு அனுப்புவேன். நன்றி.//

  ரொம்ப நன்றி..!!!எனது தங்கள் மூலம் நிறைவேறுவதை நினைத்து...!!!!

  ReplyDelete