October 08, 2010

மரங்களை வேரறுப்போம்..!!



"மரங்கள் வளர்ப்போம்" என்ற கோஷத்தை கேள்விப்பட்டுயிருக்கிறோம்.அது என்ன
" மரங்களை வேரறுப்போம்" என்று சொல்கிறேன் என்று பார்க்கீறீர்களா?சமீபகாலங்களாக சமூக ஆர்வலர்களும்,சில நாளிதழ்களும் ஓரு மரத்தைப் பற்றி கூறிவருகிற தகவல் நமக்கு அதிர்ச்சி தருபவைகளாக இருக்கிறது.

காட்டுகருவை என்றும்,சீமை கருவை என்றும் வேலி காத்தான் என்றும் அழைக்கப்படும், இந்த விஷ அரக்கனை முற்றாக அழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.எதற்காக இந்த மரத்தை அழிக்க‌ வேண்டும்? என்ற கோஷம் வெளிவருகிறது என்பதை பார்ப்போம்.இந்த‌ ப‌திவில் நான் "சீமை கருவை" என்ற சொல்லையே பயன்படுத்திருக்கிறேன்.சீமையிலிருந்து நம் கருவை(சந்ததியை) அழிக்க வந்தது என்ற பொருளில்..!


சீமை கருவை:
1. மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை.
2. வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது.
3. வெப்பத்தைக் மட்டுமே கக்கும் தன்மைக் கொண்டது.
4. ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது.இதனால் சுற்றுப்புற காற்று மண்டலம் நச்சு தன்மைக்கு மாறுகிறது.
5. நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு...!
6. முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளமையோடு வளரமுடியாது.
7. வெட்டினால் மட்டும் அழித்துவிடாது,வேரோடு அழிக்கவேண்டும்.
8. இதில் எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை.(ஐந்தறிவு உயிரினம்...!நாம்?).
9. மரத்தைச் சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன.
10. முட்கள் விஷ‌த்த‌ன்மை கொண்ட‌வை.


எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமை கருவை மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி ,தனது இலைகளை வாட‌விடாமல் பார்த்துக்கொள்கிறது.நாமலே பல வழிகளில் நீரை தேவையில்லாமல் செலவிட்டு வருகிறோம்,இதில் இது வேறு..!பார்க்க போனால் நம் அரசியல்வியாதிகளை விட சுயநலமாக இருக்குதே..! நிலத்தடி நீரை முடிந்த வரை உறிஞ்சிவிடுவதால், பூமி தானாகவே வறண்டு விடுகிறது.இது தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது.


சீமை கருவை மற்றும் யூகலிப்டஸ் மரமும் நம் நாட்டு தாவரங்கள் இல்லை,இறக்குமதி செய்யப்பட்டவை. இரண்டும் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சுபவை.சீமை கருவை விதைகள் மெக்சிகோவிலிருந்து வரவழைக்கப்பட்டு காமராஜர் அவர்கள் காலத்தில் ஆகாயத்தில் இருந்து தூவப்பட்டன என தெரிகிறது.அமெரிக்கா உணவு உதவி வழ‌ங்கும்போது இலவசமாக கொடுத்தது ;அப்போதைய காங்கிரஸ் அரசு இதை சரியாக ஆராயாமல் இந்த மரம் விறகுக்கு ஆகும் என்று அனுமதிததாக தகவல்.


அமெரிக்காவில், சீமை கருவை மரங்களை வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது.நமக்கு கொடுக்கும்போது இது நச்சுத்தன்மை வாய்ந்தது என அமொரிக்காவுக்கு தெரிந்ததா? என தகவல் இல்லை.பேராண்மை திரைப்படத்தில் சீமை கருவை அடியோட அழிக்க வேண்டும் என்பதாக காட்சி வைக்கப்பட்டதற்கு இயக்குனர் S.P.ஜன‌நாதனுக்கு நன்றி..!


இரு மரங்கள் புதிதாய் வைப்பதற்க்கு சமம். ஒரு சீமை கருவை அழிப்பது. மரம் நடுவோம் என்ற கோஷத்தை விட நாம் அதிகம் பின்பற்றவேண்டியது, இருக்கும் சீமை கருவை மரங்களை வேரறுப்போம் என்பதே!


விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என சீமை கருவையின் பாகங்களை பிரித்து மேய்ந்து விற்பனை செய்து ஈட்படும் தனிநபர் லாபத்திற்காக ஒட்டு மொத்த பூமி பழியாவதை தடுக்க வேண்டும்.அரசு அலுவலங்கம் மற்றும் நிலங்களில் வெற்றி வாகை சூடியது போல் நின்று காட்சி தரும் மரங்களை அரசு அழிக்க வேண்டும். இந்த மரங்களை அழித்துவிட்டு அந்த இடத்தினில் நன்மை பயக்கக்கூடிய வேறு மரங்களை நடுதல் வேண்டும்.பொதுமக்கள் தரப்பில் இது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும்...!



படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

32 comments:

  1. பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!

    ReplyDelete
  2. நல்ல விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
  3. http://kousalya2010.blogspot.com/2010/07/blog-post_22.html
    இந்த மரத்தை பற்றி ஏற்கனவே தோழி ஒருவர் எழுதி இருக்கிறார்.....அந்த பதிவு மெயில் மூலம் பலருக்கும் சென்று இருக்கிறது....உங்களது இந்த பதிவும் நல்லா இருக்கிறது....கண்டிப்பாக இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வு பலரையும் சென்று சேர வேண்டும்....நன்றி

    ReplyDelete
  4. "மரங்கள் வளர்ப்போம்" - என்ற கருத்து அழகாக புரிகிறது. வாழ்த்துக்கள் .... உங்கள் புகழும் மரங்கள் போல செழிக்கட்டும்......

    ReplyDelete
  5. நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு! உலக வெப்பமயமாதல் அதிகமாக உள்ள நேரத்தில் மரங்களின் தேவையை மக்கள் உணர வேண்டும்!

    ReplyDelete
  6. இது உண்மை தான் காமராஜர் காலத்தில் இது ஹெலிகாப்ட்டர் மூலம் தூவப்பட்டது .விறகுக்காக என்று எண்ணி இதை செய்தார்கள் இது இப்போது எமனாக நமக்கு ஆகிறது ................நம் நாட்டின் மண் வளத்தை கெடுப்பதற்கு வெளிநாடு செய்த சதி

    ReplyDelete
  7. //சௌந்தர்//
    நாளிதழில் படித்தது...!நம்மாழ்வார் ரால் பல முறை பேசப்பட்டுயிருக்கிறது..!மரத்தை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்..
    தகவலுக்கு நன்றி..!

    ReplyDelete
  8. ஆமாம் நாளிதழில் வந்து இருக்கு இந்த மரத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்

    ReplyDelete
  9. @ஈரோடு தங்கதுரை//
    //"மரங்கள் வளர்ப்போம்" - என்ற கருத்து அழகாக புரிகிறது. வாழ்த்துக்கள் .... உங்கள் புகழும் மரங்கள் போல செழிக்கட்டும்......//

    வாழ்த்தியமைக்கு நன்றி..!

    ReplyDelete
  10. @எஸ்.கே said..
    மரங்கள் மீது நமக்கு காதல் வரவேண்டும்..!

    ReplyDelete
  11. மிகவும் அவசியமான பதிவு. மரங்களை வளர்ப்பது ஒரு நல்ல நோக்கம் என்றால், சில மரங்களை அழிப்பது அதைவிட நல்லது என்ற கருத்து மிக அவசியமானது. பேராண்மை படத்தில் அதை சுட்டிக்காட்டிய ஜனநாதனுக்கு நன்றிகள். உங்களுக்கும்....

    ReplyDelete
  12. //கவிதை காதலன் //
    வந்து வாழ்த்தியமைக்கு நன்றி..!

    ReplyDelete
  13. கௌசல்யா அவர்களின் பதிவிலும் வாசித்து இருக்கிறேன். உங்கள் பதிவுலேயும் விரிவாக விளக்கி இருக்கீங்க. அரசு ஆவன செய்ய முன் வர வேண்டும். மக்களும், இதன் பாதிப்பை புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  14. @Chitra said...

    அரசு மற்றும் N.S.S,Rotatary போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அழிக்கும் முயச்சியில் ஈடுபடலாம்..!
    நன்றி..!

    ReplyDelete
  15. பலரிடம் கண்டிப்பாக கொண்டு போகவேண்டியது நம் கடமையும் கூட....!! முதலில் சம்பந்த பட்ட அதிகாரிகளிடம் மெயில் மூலமாக தெரிவிக்கலாம்.....ஊர் கூடி தேரை இழுப்பதை போலத்தான்....!!

    பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  16. விழிப்புணர்வூட்டும் பதிவு....

    ReplyDelete
  17. கண்டிப்பாக ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும்..
    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  18. @ஆர்.கே.சதீஷ்குமார் said.
    நன்றி..!நன்றி..!நன்றி..!

    ReplyDelete
  19. நல்ல பதிவு நண்பரே

    ReplyDelete
  20. @VELU.G said...

    நன்றி..!தொடர்ந்து வருகை தாருங்கள்..!

    ReplyDelete
  21. @மாதேவி said...
    நன்றி..!தொடர்ந்து வருகை தாருங்கள்..!

    ReplyDelete
  22. "மரங்கள் வளர்ப்போம்" - என்ற கருத்து அழகாக புரிகிறது

    ReplyDelete
  23. @சே.குமார் said...
    தங்கள் தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றி..!நன்றி..!

    ReplyDelete
  24. முற்றிலும் உண்மை...வரவேற்கிறேன்..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. http://greenindiafoundation.blogspot.com/நண்பர்களே!தயவுசெய்து இந்த பதிவை காணவும்.

    ReplyDelete
  26. @கிரீன்இந்தியா said...
    நன்றி..!தொடர்ந்து வருகை தாருங்கள்..!

    ReplyDelete
  27. Hi vetridreams,

    Congrats!

    Your story titled 'மரங்களை வேரறுப்போம்..!!' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 10th October 2010 06:48:02 PM GMT



    Here is the link to the story: http://ta.indli.com/story/350849

    Thanks for using Indli

    Regards,
    -Indli

    இதை சாத்தியப்ப‌டுத்திய‌ இன்ட்லி வாசகர்களுக்கு நன்றி...! நன்றி...!

    ReplyDelete
  28. காட்டுக் கருவை குறித்து இது போன்றதொரு பதிவை சகோதரி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார் நண்பரே. இருப்பினும் இந்த விழிப்புணர்வு குறித்த உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு!
    நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க ! :)

    ReplyDelete
  30. மிக அருமையான பதிவு..காமராஜர் அன்று அன்றாட உணவுக்கு வழி இல்லாத ஏழை மக்கள் விறகு வெட்டியாவது ஒரு வேளை சாப்பிடட்டும் என்ற சமுக பொருளாதார சிந்தனையோடு இந்த மரங்களை நட்டார்.ஆனால் அதற்க்கு முன்னால் இதன் கேடுகள் குறித்து நீண்ட ஆய்வு செய்திருக்க வேண்டும்

    ReplyDelete