September 23, 2010

இராஜராஜ சோழனும்,மழைநீர் சேகரிப்பும்



இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது என்று ஓர் ஆய்வு சொல்கிறது.எதிர் காலத்தில் நீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் ஏற்படும் என்றும். நீரை சேமித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுத்திருப்பதை நாம் அறிவோம். எனவே இருக்கின்ற நீரை செம்மையாக பயன்படுத்திடவும், பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்திடுவதிலுமே தமிழகத்தின் நீர் மேலாண்மை சார்ந்துள்ளது.



மழைநீர் சேகரிப்புக்கு உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், ஊருணிகள் மற்றும் கோவில் குளங்கள் அனைத்தும் இன்றும் அப்பணியினைச் செவ்வனே செய்தும்,செய்யாமலும் இருக்கிறன...!நகர்ப்புறங்களில் மழைநீர் சேகரிப்பு முயற்சி இராஜஇராஜன் (கி.பி. 10ம் நூற்றாண்டு) காலத்திலேயே தஞ்சையில்தொடங்கப்பட்டது. தஞ்சைப் பெரியகோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுமையும் சேமிக்கும் இடமாகச் சிவகங்கை குளத்தை இராஜஇராஜன் அமைத்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. அதற்குப் பின்னர் தஞ்சையை ஆண்டு செல்வப்ப நாயக்கன், செல்வப்பன் ஏரியைப் (சேப்பன வாரி) வெட்டி அதில் தஞ்சை நகரில் பெய்யும் மழை நீரைச் சேகரித்து, வண்டல் கலந்த நீர் தெளிந்த பின்னர், தனிக்குழாய் மூலம் சிவகங்கைக் குளத்தில் சேமிக்கும்படி அமைத்தான். பிறகு நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் நகரில் உள்ள முக்கிய குளங்களுக்கும், கிணறுகளுக்கும், அரண்மனைக்கும் விநியோகம் செய்த தடயங்கள் கிடைத்துள்ளது‌.


பண்டைய தமிழர்கள் நீரை எவ்வாறு சேமித்து பாசனங்களுக்கு பயன்படுத்தியதையும், நீர்மேலாண்மை குறித்த தமிழர்களின் அறிவு, ஆற்றல் இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மழை நீரை சேமிப்பதற்காக குளம், குட்டைகள், ஏரிகள், மடு, கண்மாய் என்று ஏராளமான நீர் நிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.இதை கல்வெட்டுகளிலும் குட ஓலைகளிலும், செப்பேடுகளிலும் மூலம் அறியபடுகிறது.

முதலாம் பரமேஸ்வரன், நஞ்சுவர்மன், கரிகால சோழன்,ராஜேந்திர சோழன் உள்ளிட்ட மன்னர்களும் குளங்கள், கிணறுகள், அணைகள் மற்றும் ஏரிகளை உருவாக்கி நீர் மேலாண்மை செய்த வரலாறுகள் பல உண்டு.இவ்வாறு உருவான ஏரிகள்தான் உத்திரமேரூர் ஏரி, பொன்னேரி ஏரி, வீரானம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளாகும்.

பண்டைய தமிழகர்களிடம் இருந்த அறிவு, ஆற்றல் இப்போ எங்க போய் அடமானம் வைச்சொம்முன்னு தெரியல.அவங்க தோண்டிய ஏரி,குளத்த மூடி பிளாட்டு போட்டு வித்து,வீடுக் கட்டிக்கிட்டு,அவங்க கட்டுன கோயில போய் இறைவன "நல்லா இருக்குன்னு" கும்பிட்ட எப்படி நல்லா இருப்போம்..? நீர் ஆதாரம் தான் அடிப்படை,அத காப்பாத்தினா தான் நல்லா இருப்போம்...!



பிரேசில் நாட்டின் திரு. ரோஜர் எல் சாண்டோஸ் அவர்களின் ‘Right Under Our Nose’ குறும்படம்,சில வினாடிகளில் மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை அழகாக சொல்கிறது..!என்னை இந்த பதிவு எழுத தூண்டிய இந்த குறும்படத்திற்கு நன்றி..!





தமிழக கட்டுமான விதிகளின் படி, வீடுகள் கட்டப்படும்போது, தரையில் சிமெண்டால் வீட்டைச் சுற்றித் தளம் அமைப்பது தவறு. ஆனால், சென்னை போன்ற நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், இந்த விதி சர்வ சாதாரணமாக மீறப்படுகிறது. இதனால், பூமிக்குச் செல்லும் நீர்வரத்து நின்றுபோய், நில நீரளவும் குறைந்து விட்டது. குறைந்த பட்சம் கார் பார்க்கிங் லது மணல் தரைய விட்டு வைக்கலாம்...!


கவனித்துத் தடுக்கவேண்டிய அரசாங்க அதிகாரிகள் சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு, வாய்மூடி மௌனியாய் இருப்பது வேதனை தருகிறது.இதன் அவசியத்தை அதிகாரத்தில் உள்ளவர்களும்,மக்களுமாகிய நாமும் தான் உணரவேண்டும், உணர மட்டுமல்ல‌ கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதும் தேவையாகிறது..!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

16 comments:

  1. பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!

    ReplyDelete
  2. அவசியமான கட்டுரை...
    தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருக்க மழை நீர் சேகரிப்பு அவசியம். தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு எல்லார் வீட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதை சரிவர செயல்படுத்தியவர்கள் மிகக் குறைவே. பிளாஸ்டிக் குழாய் விற்பனையில் ஏற்பட்ட புரட்சி (?) யால் பலர் ஏனோதானோ என்று செய்து வைத்தனர். இப்ப அந்த மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் போன இடம் தெரியவில்லை.

    கிராமங்களில் இருக்கும் கண்மாய், ஊரணிகளை அரசாங்கம் வருடம் ஒருமுறை செப்பனிட கான் ட்ராக்ட் விடுகிறது. எடுக்கும் அரசியல் புள்ளி அதிலும் ஏப்பம்விட ம்ழைக்காலங்களில் தண்ணீர் தங்குவதில்லை. இப்ப பெரும்பாலான கண்மாய்கள் கருவை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன, அருமையான பகிர்வு வெற்றி சார்.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. enna thaan room pottu yosichu pala pathivukalilum pathichu dhinasari paperlayum padichalum 70 mm screenla pottalum PASSING CLOUDS mathiri maranthudurathu naveena thamizhar kalachaaram?!!?

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள பதிவு

    அந்த வீடியோ அருமை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //பிறகு நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் நகரில் உள்ள முக்கிய குளங்களுக்கும், கிணறுகளுக்கும், அரண்மனைக்கும் விநியோகம் செய்த தடயங்கள் கிடைத்துள்ளது‌.//

    இந்த தகவல் புதியது. நல்ல பயனுள்ள பதிவு...

    ReplyDelete
  6. அருமையான பதிவு. வரலாற்றுத்தகவல்களும் அருமை.

    காணொளி மிகவும் அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. /தரையில் சிமெண்டால் வீட்டைச் சுற்றித் தளம் அமைப்பது தவறு//

    ம்ம்.. எங்கயாவது வீட்டைச் சுத்தி இடம்விட்டாத்தானே? அதையும் சேத்துல்ல வீட்டைக் கட்டிக்கிறாங்க!!

    ReplyDelete
  8. நல்ல பயனுள்ள பதிவா போட்டுகிட்டு வர்றிங்க..பாராட்டுக்க:ள்

    ReplyDelete
  9. இன்னும் சிறிது விளக்கமாக எழுதியிருக்கலாம் நண்பரே!

    ReplyDelete
  10. என் பக்கத்திற்கு வந்து பின்னூட்டம் அளிந்த அனைவருக்கும் நன்றி...!

    ReplyDelete
  11. அவசியமான பதிவு. காணொளியும் அருமை.

    ReplyDelete
  12. சரியான நேரத்துல போட்ட பதிவு..

    ReplyDelete
  13. ராஜராஜன் பற்றி எல்லோரும் கோயில் பற்றியே எழுத நீங்க மட்டும் மழை நீர் சேமிப்பு பற்றி எழுதினீங்களே அதாங்க வெற்றி டச்!

    ReplyDelete
  14. மிகவும் அவசியமான மற்றும் உபயோகமான பதிவு..

    இதை எல்லோரும் முறையாக பின்பற்றினால், நாம் குடிநீர் பஞ்சத்திலிருந்து தப்பலாம்...

    வாழ்த்துக்கள் வெற்றி........

    ReplyDelete
  15. Arumayana padhivu...

    ReplyDelete