September 17, 2010

ஆன்லைன் வசதி -‍ அரசு துறைகள்தமிழக அரசு,ஆன்லைனில் வசதி பெறும் வகையில் இரண்டு சேவைகளை,இரண்டு நாட்களுக்கு முன் ஏற்படுத்தியிருக்கிறது.

அ:

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், "கம்ப்யூட்டர் நெட் ஒர்க்" மூலம் இணைக்கப்பட்டுள்ளதால்,வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதியை துவங்கி இருக்கிறது தமிழக அரசு.
ஆன்லைனில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

ஆ:

ஓட்டுநர் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை தமிழக போக்குவரத்துத் துறை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

முதல்ல -க்கு வருவோம்,5 கோடி ரூபாய் மதிப்பில் இதை செயல்படுத்திருக்கிறது அரசு.இனி கல்வித் தகுதியை,அவரவர் வீட்டில் இருந்தபடியே இணையதள முகவரியான : www.tnvelaivaaippu.gov.in ஆன்லைனில் பதிவு செய்யலாம்.விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் "ஸ்கேன்' செய்து அனுப்ப வேண்டும்.அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும்.மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை என்கிறது தமிழக அரசு.பயனாளர்களின் சார்பாக‌ பாராட்டுக்கள்...!

முதல்ல -க்கு வருவோம், http://transport.tn.nic.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பதாரரின் கேட்கப்பட்ட விபரங்களைக் கொடுத்தால்,அடையாள எண்ணோடு (ஐ.டி. எண்) ஒப்புகை சீட்டு(Acknowledgement) வந்துவிடும்.சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சென்று கட்டணத்தைச் செலுத்தி, கணினி மூலம் நடத்தப்படும் எல்.எல்.ஆர். தேர்வில் வெற்றி பெற்றால்,உடனடியாக ஓட்டுநர் பழகுனர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.தனக்கு விரும்பிய நாளையும்,நேரத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம் என்பது இதன் சிறப்பு அம்சமாக கூறுகிறது அரசு.

ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிவு வந்ததும் 10, பிளஸ்2 மாணவர்களின் கூட்டம் எந்நேரமும் அலைமோதும்.நான் பலமுறை அலுவலகத்தை கடந்து செல்கையில், மாணவிகளோடு "வறுகடலை" வறுத்தப்படி மாணவர்களை...! பார்த்துயிருக்கிறேன்.(இனி அவங்க என்ன செய்வாங்க..?).

ஏனைய நாட்களில் பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் தங்கள் கல்வித் தகுதியை பதிவு மற்றும் பதிவுமூப்பு செய்ய வருவதால்,எந்நேரமும் கூட்டம் அலைமோதும். அதே போன்று எல்.எல்.ஆர். விண்ணப்பத்துக்கு ஒப்புகை அட்டையும் கிடைக்கிறது.விரும்பிய நாளில், விரும்பிய நேரத்தில் தேர்வு செய்துகொள்ளலாம். விண்ணப்பதார‌ருடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம் முதலான விவரங்களை பிழையின்றி பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது.பொதுவாக‌ இந்த வசதிகள் மூலம் ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுவது குறையும்.நான் எல்.எல்.ஆர். எடுக்க கே.கே.நகர்(சென்னை) ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பட்டபாடு எனக்கு தானே தெரியும்..!?

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் அலையாமலாவது இருக்கலாம் அல்லவா?போக்குவரத்து துறையில்,எல்.எல்.ஆர். எடுப்பதற்கே தரகர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு நிற்பவர்களை நான் பார்த்துயிருக்கிறேன்...!இனி இந்த தரகர்கள் சாரி சாரி...(ஓட்டுநர் பயிற்சி பள்ளி (அ) இந்தியன் கமல்'கள்)புண்ணியவான்கள் என்ன செய்வாங்க...?எல்லாத்துக்கும் வழியிருக்கும் பாஸ்...!

அரசின் இன்னும் சில துறைகளில் ஏற்கனவே கணினி மயமாக்கப்பட்டுயிருக்கிறது மின்சார வாரியம்,பத்திரபதிவு அலுவலகம் போன்றவற்றில்...? அந்த அலுவலங்களில் எப்படியொல்லாம் இந்த வசதிகள் பயன்பாட்டில் இருக்கிறது என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றங்கள் தான் காத்திருக்கிறது..!? உதாரணமாக கணினியில் பிரிண்டர் சரி இல்லை,மை தீர்ந்துரிருக்கும்,அந்த இணையதளம் வேலை செய்யாது இப்படியாக இருக்கும் பிரச்சனைகள்...!
இரண்டு நாட்களில் வேலை வாய்ப்பு பதிவு தளம் வேலை செய்யவில்லை...??!!திட்டங்கள் கொண்டு வருவது போல,அதில் கூடுதல் கவனம் செலுத்த அரசு முன்வர வேண்டும்.

இந்தியாவில் ஐ.டி துறையில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஓன்றான,தமிழ் நாட்டில் பொறியியல் மற்றும் இளங்கலை படிப்பின் மூலம் ஆண்டிற்கு லட்சங்களில் மென் பொருள் வல்லுனர்களை உருவாக்கும் இந்த முற்போக்கு மாநிலத்தில் இந்த முறைகள் பல‌ ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும்...!அரசின் தாமதமான முடிவானாலும் வரவேற்க தவற மாட்டோம்.வரவேற்க தயாராயிருக்கின்ற நாங்கள் சில தவறுகளை சுட்டிக் காட்டுவதும் எங்கள் கடமையாகி விடுகிறது...!

போட்டோ கமெண்ட்:எல்.எல்.ஆர். விண்ணப்பிக்க ஆன் லைனில் இடம்பெற்றிருக்கிற விண்ணப்பம்

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

8 comments:

 1. பதிவுலகத்துக்கு புதியவன்...!பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!

  ReplyDelete
 2. இரண்டு நாட்களில் வேலை வாய்ப்பு பதிவு தளம் வேலை செய்யவில்லை...??!!திட்டங்கள் கொண்டு வருவது போல,அதில் கூடுதல் கவனம் செலுத்த அரசு முன்வர வேண்டும்.

  .....நவீனமயமாக்குதல் மட்டும் அல்ல, அத்துடன் updates and maintenance லேயும் கவனம் செலுத்துவதின் அவசியத்தை உணர வேண்டுமே!
  நல்ல இடுகை!
  பதிவுலகில் "வெற்றி" பெற வாழ்த்துக்கள்! :-)

  ReplyDelete
 3. @Chitra said...
  வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி...!

  ReplyDelete
 4. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் அலையாமலாவது இருக்கலாம் அல்லவா?///

  ஆமா ரொம்ப பயன் உள்ள தகவல் நன்றி

  ReplyDelete
 5. அருமையான் பயனுள்ளஒரு பதிவு.இதனால் இண்டர்னெட் பயன்பாடு அதிகரிக்கும்.வேலையும் மிச்சம்.புரோக்கரை நம்ப வேண்டியதில்லை

  ReplyDelete
 6. உபயோகமான தகவல்களை சொல்லியிருக்கீங்க வெற்றி. நல்ல தொடக்கம். சும்மா மொக்கை போடுவதற்கு பதில் இது மிகவும் சிறப்பு. :-)

  தொடர்ந்து சிறப்புற வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. ரொம்ப பயன் உள்ள தகவல் நன்றி.

  ReplyDelete