September 14, 2010

இறந்தும் வாழ்கிறார்கள் சிலர்...!


ச‌மீப‌கால‌ங்க‌ளில்,நாளிதழ்களில் வெளியாகிற செய்திகளில் ஓன்று மூளைச்சாவு (பிரெய்ன் டெட்) மற்றும் உடல் உறுப்பு தானம் ப‌ற்றிய‌ச் செய்தி.அதைப் ப‌ற்றி தெரிந்துக் கொள்ள‌ எண்ணி இணையம் மற்றும் நாளிதழ்களில் என‌க்கு கிடைத்த தகவல்கள் உங்க‌ள் பார்வைக்கு ஓர் ப‌திவாக‌.தகவல்கள் தவறாக அர்த்தம் புரித்துக்கொள்ளாமல் இருக்க தகவல்கள் எடுக்கப்பட்ட சில இணைத்தின் எழுத்து நடையிலேயே சில வரிகள் இடம்பெற்றியிருக்கிறது,நடு நடுவே என் எண்ண எழுத்துக்களும் இடம்பெற்றியிருக்கிறது.என்னால் முடிந்த‌ வ‌ரை நீங்க‌ள் ப‌டிப்ப‌த‌ற்கு சுவார‌சிய‌மாக‌ வ‌ழ‌ங்கியிருக்கிறேன்...!


முதலில் மூளைச்சாவு ன்னா என்னான, ஓருவர் விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்து, உடல் செயலற்றுப்போவதை,டாக்டர்கள் "கோமா" என்கின்றனர்.அந்த‌ "கோமா"வை பல‌ வகையாக பிரிக்கப்படுகிறது.அதில் ஓரு வகை மீண்டு வர முடியாத நிலை தான் மூளைச்சாவு எனப்படுகிறது.இது அடைந்தவரின் இதயம் துடிக்கின்றபோதும்,சொந்தமாக மூச்சுவிட முடியாததால் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவிக் கொண்டு மூச்சு செலுத்தப்படும்.


மூளைச்சாவை உறுதிசெய்வ‌த‌ற்கு 13 வகையான சோதனைகள் க‌டைபிடிக்க‌ப்ப‌டுகிறது‌.


* ஆறு மணி நேர இடையில் இரு முறை சோதனைகள் நடத்தப்படும்.
* சோதனையின்போது,மூளைச்சாவு அடைந்தவர் உடல்,குளிர்ந்த நிலையிலும்,இரத்த வெளியேறி,உடல் சூடான நிலையிலும் இருக்கக் கூடாதாம்.
* கண்மணியின் அளவு எப்படி உள்ளது;அது சுருங்கி விரிகிறதா? மற்றும் காட்டன் துணியால், கரு விழி அசைகிறதா என தொட்டுப் பார்க்கப்படும்.
* ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் அகற்றிய பிறகு,அவரால் சுயமாக மூச்சு விட முடிகிறதா என்று சோதிக்கப்படும்.
* வாயில் பிளாஸ்க்டிக் டியூப் வைத்து, இருமல் உள்ளதா என்றும், காதுக்குள் சுடுநீர் ஊற்றி கண்ணசைவு உள்ளதா என்றும் சோதிக்கப்படும்.


இந்தச் சோதனைகளை நடத்தி ஒருவர் மூளைச்சாவு அடைந்ததை, அவருக்கு சிசிச்சை அளிக்கும் டாக்டர் முதலில் உறுதி செய்வார். அதன்பிறகு, அம்மருத்துவமனையின் சூப்பிரண்டு உறுதிப்படுத்துவார். தொடர்ந்து, நரம்பியல் நிபுணர்கள் (நியூராலஜிஸ்ட்) அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (நியூரோ சர்ஜன்) சோதிப்பர். அவர்களும் உறுதி செய்த பிறகு, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பதிவு பெற்ற டாக்டர் சோதிப்பார். இவ்வாறு நான்கு டாக்டர்கள் சோதனை நடத்திய பிறகே, ஒருவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படும்.


மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் ஒரு வாரம் வரை துடித்துக்கொண்டே இருக்கும். உடல் உள்ளுறுப்புகளைத் தொடர்ந்து இயங்க வைக்கத் தேவையான சக்தியைக் கொடுக்க, ஊசி மூலம் குளுகோஸ் செலுத்த வேண்டும். இதயத்தை சீராக இயங்க வைக்க டோபோமின், டிரன்லெனின், டோடிடமின், ஹைசோ பெர்னலின், வேசோ பிரசின், டி3 தைராக்சின் உள்ளிட்ட மருந்துகளை உடலினுள் தேவைக்கேற்ப செலுத்த வேண்டும்.


மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து இதயத்தை அகற்றிய பின், அதை நான்கு மணி நேரத்திற்குள்,மற்றவர் உடலில் செலுத்த வேண்டும்.இதயம் மட்டுமின்றி இதய வால்வுகளையும் தேவைப்படும் நபர்களுக்கு பயன்படுத்த முடியும்.கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், எலும்புகள், தோல் ஆகியவற்றையும் மற்றவர்களுக்கு பயன்படுத்தலாம்.



கடந்த ஆண்டில் மூளைச்சாவு ஏற்பட்ட 59 பேர், அவர்களது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்துள்ளனர். அவர்களது உடலில் இருந்து, 118 சிறுநீரகங்கள், 47 கல்லீரல்கள், 15 இருதயங்கள், 84 கண் வழித்திரை படலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் பாகங்கள், உடல் உறுப்புகளுக்காக காத்திருந்த பலருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இருதய மாற்று ஆபரேசன் சென்னை அரசு பொது மருத்துவமனை உட்பட இரண்டு மருத்துவமனைகளில் செய்யப்படுகின்றன. மற்ற உடல் உறுப்புகள் பெரும்பாலான மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்களால் பொருத்தப்படுகின்றன.இப்படியாக இறத்தும் வாழ்கிறார்கள் சிலர்...!


மூளைச்சாவு ஏற்பட்டவர்களை பராமரிக்க ரூ.5 கோடியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழக அரசு விசேஷ மையத்தை திறந்துள்ளது. மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. தானம் செய்யக்கூடிய உறுப்புகளை பாதுகாக்கத்தான் அரசு அதற்காக தனி பராமரிப்பு மையத்தை உருவாக்கி உள்ளது.


உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது மேலும் விளம்பரங்கள் மூலம் மக்களை சென்றடைய வைக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.தமிழகத்தில் மூளைச்சாவு ஏற்பட்டவரது உடல் உறுப்புகளை, ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு விரைவாக எடுத்துச் சென்று பொருத்த, தமிழக அரசுக்கு சொந்தமான சிறிய ரக விமானம், ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கு வருவ‌தாக‌ செய்தி வ‌ந்த‌து,அது ந‌டைமுறை ப‌ட்ட‌தாக‌ தெரிய‌வில்லை...!ஒருவர் கோமா நிலையில் இருக்கும்போதே பணத்திற்காக, இறந்ததாகக் கூறி அவரின் இதயத்தை வசதி படைத்தவர்களுக்கு விற்கும் வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.இது போன்ற‌ செய‌ல்க‌ள் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தால், ம‌க்க‌ளிட‌த்தில் ஏற்ப‌ட்டுள்ள‌ விழிப்புண‌ர்வு கேள்விகுறியாகிவிடும்,ஆக‌வே அர‌சு இதுபோன்ற‌ த‌வ‌றுக‌ள் ந‌டத்திடா வ‌ண்ண‌ம் தீவிர கண்காணிப்பு மற்றும் க‌டுமையான‌ ச‌ட்ட‌ங்க‌ள் மூல‌ம் நடக்காமல் தடுக்கப்பட‌ வேண்டும்.

போட்டோ கமெண்ட்:
உடல் உறுப்புக்கள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய இதயேந்திரன்.


படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

9 comments:

  1. அருமையான எழுத்து நடை

    சில தகவல் பிழைகள் உள்ளன.

    நீங்கள் எதை பார்த்து இந்த கட்டுரை எழுதினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

    ReplyDelete
  2. //அருமையான எழுத்து நடை

    சில தகவல் பிழைகள் உள்ளன.

    நீங்கள் எதை பார்த்து இந்த கட்டுரை எழுதினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா//

    பக்கம் வந்தமைக்கு நன்றி..!
    எந்த தகவல்கள் பிழையாக உள்ளது என்று கூறினால் மாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும்..!

    ReplyDelete
  3. You can also read this for more info:

    http://en.wikipedia.org/wiki/Brain_death

    :-)

    ReplyDelete
  4. வெற்றி!!..இந்த விழிப்புணர்விற்கு ..பிடியுங்கள் பாராட்டுக்களை!!!

    ReplyDelete
  5. //எந்த தகவல்கள் பிழையாக உள்ளது என்று கூறினால் மாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும்..!//

    //மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் ஒரு வாரம் வரை துடித்துக்கொண்டே இருக்கும். //

    ??

    குறிப்பிட்ட கால அளவு எதுவும் இல்லை
    1 நாளாக இருக்கலாம்
    1 மாதம் கூட இருக்கலாம்

    ReplyDelete
  6. நல்ல பதிவு....ஒரு மனிதனின் எல்லா உறுப்புகளும் முக்கியம் அதில் மூளையின் பங்கு மிக முக்கியமானது....ஒருவருக்கு மூளை சாவு ஏற்பட்டால் அம்மனிதன் இறந்ததற்கு சமம் என்பார்கள்....இதைதான் மெடிக்கல் சயின்ஸ் சொல்கிறது....மூளை சாவு எற்பட்டவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இதற்கான விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் சரியாக சேரவில்லை என்றே நினைக்கிறேன்....இப்பதிவின் விழிபுனர்வான உங்கள் பங்கை சரியாகவும் விளக்கமாக சொன்னீர்கள்...தொடர்ந்து இதுபோல பதிவுகளை எழுதுங்கள் எங்கள் வாழ்த்துகளுடன்....நன்றி

    ReplyDelete
  7. அருமை. Please continue to write such good articles.

    ReplyDelete