November 15, 2010

திறந்தவெளி 15/11/2010


எனது முந்தைய பதிவில் சினிமா விமர்சனம் முதன்முறையாக எழுதினேன்.அதற்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..!நன்றி..!
க‌லவை (அ)தொகுப்பு செய்திக‌ள் எழுதி சுவ‌ர‌ஸ்ய‌ ப‌திவாக‌ மாற்ற‌லாம் என க‌ண்டுபிடித்த‌ ப‌திவுல‌க‌ ச‌க்க‌ர‌வ‌ர்த்திக்கு ந‌ன்றி..!ந‌ன்றி..!!!(குரு வணக்கம்).இன்னொரு விச‌ய‌ம் இம்மாதிரியான‌ ப‌திவுகளுக்கு த‌லைப்பை பிடிப்ப‌து என்பது மகா கஷ்டம்.அதிலும் அடித்து,பிடித்து ஏதோ த‌லைப்பை க‌ண்டுபிடித்துவிட்டு ப‌திவுல‌கில் பார்த்தால் ந‌ம‌க்கு முன்னாடியே ஏதோ ம‌க‌ராசன்கள் அந்த‌ பெய‌ரில் கும்மிய‌டிக்கிறார்க‌ள்.

அப்புற‌ம் கற்பனை பஞ்சம் வந்தாலும் வரும்...!ஆனா த‌மிழில் வார்த்தைக‌ளுக்கா ப‌ஞ்ச‌ம்?ப‌ர‌ந்து விரிந்த‌து உல‌க‌ம்..!த‌மிழ் மொழியே திற‌ந்த‌வெளி பல்கலைகழகம் போன்றது.அதில் கிடைக்காத‌ வார்த்தைக‌ளா?ஆ வார்த்தையை பிடிச்சாசு.."திற‌ந்த‌வெளி" இனி ஒரு புது முயற்சியாக வார வாரம் "திறந்தவெளி" என்னும் பெயரில் அந்தவார நிகழ்வுகளும் எனது கருத்துக்களும் மற்றும் நான் ரசித்த,சொல்ல நினைக்கிற‌ விசயங்களையும் பற்றிய தொகுப்பாக‌ பதிவை எழுத‌ உள்ளேன்.உங்க‌ள் ஆதரவு,எதிர் க‌ருத்துக்க‌ளை பின்னூட்ட‌மாக‌ எதிர்ப்பார்க்கிறேன்.‍‍‍‍

-------------------------------------------------------------------------------------
கோட்டையில்லை கொடியில்லை அப்பவும் நான் ராஜா..!!!

நேற்றிரவு திரு ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முன்னாள் ‌மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆகியிருக்கிறார்..!இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட காத்திருத்தன எதிர்கட்சிகள்.
இதற்கிடையில் ராசா வகித்த பதவியை திமுக அமைச்சர்களுக்கு கொடுக்கக்கூடாது என திரு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆரம்பித்துவிட்டார்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு அது மீண்டும் கிடைக்குமா?ன்னு தெரியலை..!!!தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்துச்சோ இல்லியோ..!நம்ம கிட்ட அந்த பதவி இருந்த பீலீங் இப்பொ கிடைக்காது..!!!எது எப்படியோ ராசா விவகாரம் வடநாட்டு சேனல்களுக்கு நல்ல தீனீ..!!!

-------------------------------------------------------------------------------------
பாடவா டூயட் பாடலை
குரல் தேடலுக்கு குரல் கொடுத்து கலைஞர் டிவியில் விளம்பரம் வருகிறது.இவர்கள் குரல் தேடலை வேறு விதமாக ஆரம்பித்துவிட்டார்கள்.தனி தனியாக பாடிக் கொண்டிருப்பதை பார்த்து போர் அடித்துவிட்டது.இனி ஜோடியாக பாடுவதை குறிப்பாக தம்பதி சகவிதமாக டூயட் பாடுவதை காணலாம்.இந்நிகழ்ச்சி கலைஞர் டிவியின் டி.ஆர்.பி ரேட்டை கூட்டுமா? பார்ப்போம்...!!

-------------------------------------------------------------------------------------

கேமரா கண்ணில் பட்டு வாழ்..!!!

நிறுவனங்களில் மற்றும் பள்ளிகளில் கேமிரா பொறுத்துவது இன்று பேசஸனாகிவிட்டது (அ) கட்டாயமாக்கப்பட்டுவிட்டது..!.காசி தியேட்டரில் கழிவறையில் கேமிரா என கேள்விப்பட்டோம்.இம்..இம்..பாதுகாப்பு என்கிற பெயரில் ஏதோ அன்னிய கண்ணில் நாம் பதிவாகி கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே ஓரு மாதிரியாக இருக்கிறது...மற்றும் அவசரத்துக்கு தலையில் அறிப்பெடுத்தால் தலையை சொறிஞ்சால் கூட இந்த தேதியில்,இந்த நேரத்தில் இந்த நிமிடத்தில் இந்த ஆள் தலையை செறிஞ்சார் என டேடாபெஸ் சொல்லும்.இது வரமா?சாபமா? தெரியவில்லை..!!!வருங்காலங்களில் வீட்டைவிட்டு இறங்கியவுடன் தெருக்களில்,சாலைகளில்,பேருந்துகளில்..இப்படியாக பாதுகாப்பு என்கின்ற பெயரில் கேமராக்கள் வரும்....இதற்கு மாற்றாக வாழ முடியாது...ஊரோடு ஓட்டி வாழ பழக வேண்டும்...பழகுவோம்..!!!!

------------------------------------------------------------------------------------
தண்ணீர் அவசியம் பற்றிய வீடியோ காட்சி கீழே...



படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க.!
பின்னூட்டம் போடுங்க..!!

November 06, 2010

மைனா - காதல் பயண‌ம்


எனது முதல் திரைவிமர்சனம் இது.முடிந்த வரை நன்றாக எழுத முயற்சித்திருக்கிறேன்.தீபாவளி ரீலீஸில் திரைப்பட டிரைலர் மற்றும் விளம்பரங்களால் மற்றும் இயக்குனர் பிரபு சாலமன்னுக்காகவும் என்னை பார்க்க தூண்டிய திரைப்ப்டம் " மைனா".கமலா சினிமாஸில் நேற்று இரவுகாட்சியாக‌ பார்த்தேன்.பிரபு தனது படங்களில்,சிற் சில விசயங்களை கையாள தெரியாமல் முயற்சித்து,தோற்று...தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க தவறியவர்.

கதைசுருக்கம்:

தேனீ மாவட்டம் குரங்குனி என்ற மலைக்கிராமம் தான் கதைக்களம்.தீபாவளிக்கு முந்தைய நாளும்,தீபாவளியென்றும் நடக்கும் சம்பவங்களே கதை.பெரியகுளம் கிளைச்சிறையில் இருந்து ஆரம்பிக்கிறது கதை.சிறுவயதிலேயே நாயகன்(சுருளி) நாயகியோட அம்மாவுக்கும்,நாயகி(மைனா)க்கும் தனக்கு தெரிந்த பாட்டியின் மூலம் அடைக்கலம் கொடுக்கிறான்.மைனாவின் மேல்,சிறு வயது முதல் ஏற்பட்ட‌ அன்பு வளர்ந்துகொண்டே வந்து அவள் பூப்பெய்தும்போது காதலாக முழுமையடைகிறது. அவள்மேல் உயிரையே வைக்கிறான். அவள் தனக்குத்தான் என்று நம்புகிறான்.சூழ்நிலையில் நாயகி அம்மா காதலை எதிர்க்க, நாயகன் அடிக்க வர போலீஸ் அவரை கொலைமுயற்சி என‌ கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்கிறது. விடுதலையாக 2 நாட்களே உள்ள நிலையில் நாயகிக்கு அவரது தாய் வேறு திருமண ஏற்பாடு செய்ய நாயகன் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்து நாயகியை மீட்டேடுக்கிறார். அதே சமயம் நெருக்கடியான சூழலில் இருக்கும் போலீசார் மீண்டும் நாயகனை கைது செய்து,சிறைக்கு கூப்பிட்டு வர வழியில் ஏற்படும் சம்பவங்களே மீதி கதை.


நாயகன் வித்தார்த் நன்றாக நடித்திருக்கிறார்.முக சாயலை பார்பதற்கு விக்ரம் மற்றும் மனோரமா மகன் பூபதியையும் நினைவூட்டுகிறது எனக்கு..!!!!கதைக்கு ஏற்ற நாயகன்...!!!வித்தார்த் முகத்தில் ஏதோ வசீகரம் தெரிகிறது.வரும் படங்களில் பார்ப்போம்.

நாயகி அமலாபால் அழகாக , மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார்,நன்றாக இருக்கிறது.இக்கதையில் அமலா இடத்தில் அஞ்சலியாக இருந்தாலும் ரசிக்கலாம்...!!!இருப்பினும் அமலா ரசிக்க முடிகிறது..!!!தமிழ் சினிமாவில் வருகின்ற படங்களில் இவரை காணலாம்.

மற்றபடி இன்ஸ்பெக்டராய் வரும் சேது ,ஜெயிலர் தம்பி ராமையா, மைனாவின் அம்மா,பொணம்தின்னி,நாயகன் உடன் வரும் அதிகம் பேசும் பையன்,சேது மனைவி மற்றும் அவரது குடும்பம் என்று எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இமான் இசையில் எல்லாப் பாட்டுகளும் நன்றாக இருப்பதோடு ,பாட்டின் வரிகள் அழகாக புரிகிறது.படமாக்கிய விதமும் அருமை.ப‌டத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் மற்றும் கலை இயக்குனர் வைரபாலனும். தங்களது திறமையினால், நம் மனதில் இடம்பிடிக்கின்றனர். தேனி மாவட்ட அழகை குறிப்பாக குறங்கினி, மூணார் போன்ற‌ பச்சைப்பசேல் இடங்களை நமக்கு காட்டிய‌ படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.


பிடித்த காட்சிகள்:
@ சைக்கிள்:
நாயகியை,நாயகன் பள்ளிக்கு சைக்கிளில் அழைத்து வரும் காட்சி.
@பயண‌ம்:
ஜீப் களில் மலை பாதையில் பயணம் செய்யும் காட்சிகள்.தத்ரூபமாக எடுக்கப்பட்டுயிருக்கிறது.
@ தோளில் சுமத்து வரும் காட்சி :
நாயகன் நாயகியை தன் தோளில் சுமந்து வரும் காட்சி.
@ பஸ் விபத்து காட்சி: ‍‍
நாயகன் காப்பாற்றும் காட்சி அருமை. காட்சி அமைப்பு ஆங்கில படங்களுக்கு இணையாக.

@ எதிர்பாராத கிளைமாக்ஸ்:

நல்ல கிளைமாக்ஸ் .நன்றாக எடுக்கப்பட்டுள்ளது.என்னால் யூகிக்க முடித்தது...!!!

இயக்குனர் இந்த திரைபடத்திலும் திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டுயிருப்பது உண்மை...!!! எனினும் தனக்கான இடத்தை கைப்பற்றிவிட்டார் என்பதும் உண்மை..!!!
சில குறைகள் இருந்தாலூம் ...!பல பேரின் உழைப்பு மற்றும் இயக்குனரின் விடாமுயற்சிக்காக‌ பார்க்கலாம்..!!!!

மைனா ‍- காதல் பயண‌ம்


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!
பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்).