October 14, 2010

உடல்நலனில் தண்ணீரின் பங்கு


தண்ணீர் வைத்தியம் பல பேரால் கூறப்பட்டு,நீங்கள் கேள்விபட்டியிருக்கலாம்.ஏன் இங்கயே எழுதப்பட்டிருக்கலாம்?இருந்தாலும் ஓரு நல்ல விசயத்தை திரும்ப,திரும்ப சொல்லுரது தப்பில்லன்னு நினைக்கிறேன்.பல்வேறு தளங்கள் மற்றும் இதழ்கள் படித்ததின் விளைவு இந்த பதிவு...!காலையில் எழுந்து,வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துதல்...!இந்த பழக்கம் ஆரோக்கியமான உடல்நலத்தை தரும்..!

தண்ணீர் அவசியம் :

1. அசைவ உணவு, பால், தக்காளி போன்ற ஆக்ஸலேட் உப்பு அதிகம் உள்ள உணவை அதிகம் சாப்பிடுபவர்கள்.
2. தினமும் கீரை சேர்ப்பவர்கள் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.
3. ஜாக்கிங் செல்பவர்களும், உடற்பயிற்சி செய்பவர்களும் உடலில் நீர்ச்சத்தை வியர்வை மூலம் அதிகம் அகற்றுகிறார்கள். அதே நேரத்தில் இந்த இழப்பை ஈடுகட்டப் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
4. உணவில் உப்பை நிறையச் சேர்த்துக் கொள்பவர்கள்,அவசியம் உட்கொள்ள வேண்டிய மருந்து தண்ணீர்.
5. 50 கிராமிற்கு மேல் வேர்க்கடலை சாப்பிடுவதும் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடும்,ஆகவே தண்ணீர் அருந்துங்கள்.

இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்...

நாளோன்றுக்கு ஒரு முறை குடிக்கும் அளவாக‌ 250 மில்லி வீதம் 8 முறையாவது ஒவ்வொருவரும் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.காலை எழுந்தவுடன் தண்ணீர் குடித்து விட்டு,இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை என கூறப்படுகிறது.குடித்த தண்ணீரை வற்றவைத்து விடுமாம் காபியில் உள்ள காபின்...!

முக்கியமாக அழகை பற்றி கவலைப்ப்டுபவர்கள்,அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும்.அது முகச்சுருக்கத்தை நீக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.(இந்த ஓரு காரணம் போதுமே..!)

இரவு நேர பணிக்கு செல்பவர்கள் குடிக்க வேண்டிய அருமருந்தும் தண்ணீர்.பணி முடிந்து காலையில் சிறுநீர் கழிக்கும் போது கவனித்தால் "மஞ்சள்" நிறத்தில் வெளியேரும் மாறாக இரவு நேர பணியில் இருக்கும் போது தண்ணீர் குடித்தால் மாற்றம் தெரியும்.

தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.மாற்றாக நாவின் சுவை உணர்வோடு கொஞ்சம்,கொஞ்சமாக பருக வேண்டுமாம்.

இரவு நேரத்தில் தூக்கம் கலைந்து சிறுநீர் கழித்தால்,குடி தண்ணீர் நன்கு அருந்திய பிறகு படுக்கைக்குச் செல்லுங்கள் என கூறப்படுகிறது(தண்ணீர் குடித்துவிட்டு,தொடர்ந்து தூக்கம் வராது சிலருக்கு.)

சிலர் நன்கு தண்ணீர் அருந்தினால்,அடிக்கடி சிறுநீர் கழிக்கப் போகவேண்டும் என்பதற்காகவே தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கிறார்க்ள.குறிப்பாக நீண்ட நேரம் பேருந்தில் பயணிக்கிறவர்கள் இதே போல் தவிர்த்து விடுகிறார்கள். இது நல்ல பழக்கமல்ல. ..! இருப்பினும் பயண‌முடிவில் இறங்குவதற்குச் சற்று முன்பும், பயணத்திற்கு இருமணி நேரம் முன்பும் தண்ணீர் அருந்தலாம்.பேருந்துப் பயண‌த்தில் அவசியம் பயணிகள் கையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்வது மிகவும் உகத்தது...!

தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்கின்றனர் பலர்.அவ்வாறில்லாமல் அடிக்கடி தண்ணீர் குடுக்க வேண்டும்.தண்ணீர் நிறைய குடிப்பதால் நமது செயல்திறனும் கவனமும் அதிகரிக்கும்..!தினமும் தண்ணீரை நன்கு அருந்தி உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...!தண்ணீர் நன்கு அருந்துவதால் பல நோய்கள் குணமாவதுடன் மன இறுக்கம் அகலும்...!உடல்நலனில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது..!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

17 comments:

  1. பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...

    ReplyDelete
  3. @வெறும்பய said...
    நன்றி..!நன்றி..!

    ReplyDelete
  4. அட, நல்ல பதிவா இருக்கே!

    ReplyDelete
  5. தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்கின்றனர் பலர்.அவ்வாறில்லாமல் அடிக்கடி தண்ணீர் குடுக்க வேண்டும்.தண்ணீர் நிறைய குடிப்பதால் நமது செயல்திறனும் கவனமும் அதிகரிக்கும்..!தினமும் தண்ணீரை நன்கு அருந்தி உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...!தண்ணீர் நன்கு அருந்துவதால் பல நோய்கள் குணமாவதுடன் மன இறுக்கம் அகலும்...!உடல்நலனில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது..!


    .....பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  6. //அட, நல்ல பதிவா இருக்கே!//
    நன்றி அருண்பிரசாத்

    ReplyDelete
  7. @Chitra
    தொடர்ந்து என் பக்கங்களுக்கு வருகை தரும் உங்களுக்கு நன்றி..!!

    ReplyDelete
  8. @மாதேவி said...
    தங்கள் வருகைக்கு நன்றி...!

    ReplyDelete
  9. ரொம்ப நல்ல பதிவு தண்ணீர் குடிக்கிறேன் நன்றி

    ReplyDelete
  10. @சௌந்தர் & Senthil

    வருகை தந்தமைக்கு நன்றி..!

    ReplyDelete
  11. தண்ணீர் எப்போதும் ஒரு அருமருந்து ...

    ReplyDelete
  12. @ கே.ஆர்.பி.செந்தில்
    என் பக்கம் வந்தமைக்கு நன்றி..!

    ReplyDelete
  13. //தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.மாற்றாக நாவின் சுவை உணர்வோடு கொஞ்சம்,கொஞ்சமாக பருக வேண்டுமாம்.`/

    உண்மைதான்.. நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  14. தண்ணீரை பற்றிய தகவல்களை தண்ணீராய் சொல்லி இருக்கிறீர்கள் ....

    ReplyDelete