
நீங்க சென்னைல,அம்பத்தூர்லருந்து கிளம்பி பெருங்குடி போய்,உங்கள் நண்பனை அலுவலகத்தில் பார்க்க போய்கிறீர்கள்.உங்க நண்பண் "மச்சி என் ஆபிஸ் பக்கத்துல வந்து கால் பண்ணு வெளியே வரேன்னு சொல்லுராறு".நீங்களும் பல டிராபிக் கஷ்டங்களைத் தாண்டி(வெள்ளை சீருடை தரகர்களைத் தாண்டி..!)நண்பண் ஆபிஸ் பக்கத்துல போய், பேசுறதுக்கு மொபைல எடுத்த ஆப் ஆயிடுச்சி,திரும்பவும் ஆன் சென்சா ஆன் ஆகலன்னு வச்சிக்ங்க,உங்களுக்கு நண்பண் நம்பரும் நினைவில இல்ல(நினைவில் வைத்திருப்பதில்லை என்பதே உண்மை..!)என்ன செய்வீங்க?
நம்ம சோம்பேறியா இருக்குறத்துக்கு,விஞ்ஞானம் தான் காரணம் சொன்னா இல்லன்னு சொல்லவா போறிங்க?இப்பொ எல்லா தேவைகளும் கைக்கு அடக்கமாக கிடைப்பதால்,நமது மூளைக்கு பெரும்பாலும் வேலை கொடுப்பதில்லை.
80,90க்களில் இந்தியா மற்றும் அயல்நாடுகளில் மிக சிறந்த வல்லுனர்களாக திகழ்ந்தவர்கள் எல்லோருக்கும் மனக்கணக்கு,நினைவுத்திறன் போன்றவையும் வெற்றிக் காரணமாக இருந்திருக்கிறது.இன்றைய இளைய தலைமுறைகளிடம் கொஞ்சம் காணாமல் போய் கொண்டிருக்கின்றன என்பது உண்மையே..!
அதற்கு நாமும் கூட விதிவிலக்கல்ல.அன்றைய காலக்கட்டத்தில் உதாரணமாக வாய்ப்பாடு(Multiplication Tables)மேலிருந்து கீழாகவும்,கீழிருந்து மேலாகவும் 20ம் வாய்ப்பாடு வரை மனனம் செய்து வைத்திருப்பார்கள்.இன்றைய நாட்களில் இதை திக்கி தடுமாறி சொல்லமுடியாமலும்,கால்குலேட்டர் உதவியில்லாமல் கணக்கு போட தெரியாதவர்கள் தான் அதிகம்.
மொபைல் போன் வருவதற்கு முன், நெருங்கிய, முக்கியமான நபர்களின் தொலைபேசி எண்களை தெரிந்து வைத்திருந்தோம். ஆனால், இன்று...?யாராவது தொடர்பு கொள்ள எண் கேட்டால்,உடனே மொபைல் போனைத் தான் தேடுகிறோம்.முக்கிய நபர்களின் எண்களைக் கூட மனனம் செய்து வைப்பதில்லை.மொபைல் போன் தொலைந்தால்,எண்கள் மறையும்; நட்பு வட்டமும் மறையும்.காரணம், எந்த எண்களுமே நினைவில் இல்லை..!நினைவில் வைத்திருப்பதில்லை என்பதே உண்மை என்று மேலேயே சொல்லிவிட்டேன்.
வெகு சிலரோ வீட்டில் டைரி மற்றும் கணிணியில் பதிவு செய்து வைத்திருப்பது வேறு விஷயம்...! நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கும் போது, டைரியையோ அல்லது கணிணியோ தேடி செல்ல இயலாது? அதுவும், முக்கிய அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் போது, மொபைலை பறி கொடுத்து தவிக்கும் தவிப்பு...! இங்கே வார்த்தைகளாக எழுத முடியாது...!
கையில் மொபைல் போன் இருந்தாலும், முக்கிய எண்களை மனனம் செய்ய வைத்துக்கொள்ளலாம், பர்ஸ்சில் கைகளுக்கு அடக்கமான டைரிகளில்( 5 ரூபாய் விலையில் கிடைக்கிறது) எண்களை எழுதி வைத்துக்கொள்ளலாம்!(இந்த டைரிய தொலைச்சுபுட்டு தேடுர ஆளுங்களுக்கொல்லாம் நான் பொறுப்பு கிடையாது..!).எண்களை (4 +4 +2=10)இலக்க எண்களாக மனனம் செய்துக் கொள்ளலாம்..!இதை போல உங்களுக்கு என்ன செய்தால் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமோ, அப்படி வைத்துக்கொள்ளுங்கள்..!
ஆகவே நான் சொல்ல வரக்கூடிய கருத்து என்னா?மொபைல உள்ள நம்பர மட்டும் நம்பி வெளிய கிளம்பி நடுரோட்டுல நம்பர் தெரியாம நிற்காதிங்க..!
போட்டோ கமெண்ட்:
நடுரோட்டுல நிக்கும்போது இப்படியா இருக்கும் முகம்..!
படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!
பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!
ReplyDeleteஉண்மை! இதை நான் பல முறை யோசிச்சு இருக்கிறேன் ஆனால் மனனம் செய்ய முயற்சி செய்யவில்லை.
ReplyDeleteஇது பரவாயில்லை, சிலர் கிரெடிட்கார்டு எண்களையும் நினைவில் வைப்பது இல்லை. தொலைத்துவிட்டு திண்டாட வேண்டியதுதான்...
வாழ்த்துக்கள் நண்பரே ..ஒவ்வொரு இடுகையிலும் உங்கள் எழுத்து மிளிர்கிறது உபயோகமான பதிவு
ReplyDeleteமுக்கிய நபர்களின் எண்களைக் கூட மனனம் செய்து வைப்பதில்லை.//
ReplyDeleteஅப்பா அம்மா நம்பர் கேட்டாலும்ஜஸ்ட் மினிட் என்பவர்கள் உண்டு
படம் சூப்பரா இருக்கு போங்க
ReplyDelete//
ReplyDeleteநடுரோட்டுல நிக்கும்போது இப்படியா இருக்கும் முகம்..!
//
superb expression
எனக்கும் இவ்வெண்ணம் உண்டு. ஆனால், எத்தனாஇ எண்களைத்தான் மனனம் செய்வது? ஒருவருக்கே இரண்டு மூன்று எண்கள். அதுவும் 10 இலக்கங்கள்!! பயன்பாட்டில் ஒருவழியாக மனனம் ஆனால், அடுத்த நாள் “நம்பர் மாற்றிவிட்டேன்” என்று மெஸேஜ்!!
ReplyDeleteமொபைல் நம்பர் மட்டுமா, இ-மெயில் ஐடிகள், பாஸ்வேர்ட்கள், கிரெடிட் கார்ட் நம்பர்கள், பான் கார்ட் நம்பர்கள், பாங்க் அக்கவுண்ட் நம்பர்கள், என்று டிஜிட்டல் உலகில் மனிதர்களே நம்பர்களாக நிற்கும்போது மனனம் செய்வதை நினைத்தாலே மனம் குழம்புகிறது!!
நாம், வசதி வசதி என்று பெறுபவைகள் எல்லாம், நம்மை சோம்பேறியாக, முட்டாள்களாக மாற்றி கொண்டு வருகிறது. நல்ல பகிர்வு.
ReplyDeleteஉபயோகமான பதிவு.
ReplyDeleteபடம் சூப்பரா இருக்கு.
//அருண் பிரசாத்//
ReplyDelete//ஆர்.கே.சதீஷ்குமார்//
//Ramesh //
//ஹுஸைனம்மா//
//தமிழ் உதயம்//
//சே.குமார்//
வாசித்து,பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்திய எல்லோருக்கும் நன்றி..!
//நம்ம சோம்பேறியா இருக்குறத்துக்கு,விஞ்ஞானம் தான் காரணம் சொன்னா இல்லன்னு சொல்லவா போறிங்க?இப்பொ எல்லா தேவைகளும் கைக்கு அடக்கமாக கிடைப்பதால்,நமது மூளைக்கு பெரும்பாலும் வேலை கொடுப்பதில்லை.//
ReplyDeleteஎனக்கு என் மனைவியின் எண் மற்றும் அலுவலக எண் கூட தெரியாது.போனைக் கையில் எடுத்துட்டுப் போகாமல் போன் செய்ய வேண்டிய அவசியத்தில் ஙே என்று விழித்த அனுபவமுண்டு.
//இது பரவாயில்லை, சிலர் கிரெடிட்கார்டு எண்களையும் நினைவில் வைப்பது இல்லை. தொலைத்துவிட்டு திண்டாட வேண்டியதுதான்...//
ReplyDeleteகிரடிட் கார்டு எண்ணையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள ஐன்ஸ்டீனாவோ,சகுந்தலா தேவியோவாத்தான் பிறக்கணும்:)
நல்ல பதிவு நண்பா.என்னைக்கவர்ந்த வரிகள்>>
ReplyDeleteஇப்பொ எல்லா தேவைகளும் கைக்கு அடக்கமாக கிடைப்பதால்,நமது மூளைக்கு பெரும்பாலும் வேலை கொடுப்பதில்லை.>>>>
சாரி ஃபார் டிலே.
தமி 10 ல ஏன் இணைக்கலை?இணைத்துவிடவா?
இது மாதிரி பல தடவை நமக்கு நடந்திருக்குண்ணே.! அடுத்த தடவை மொபைல நல்லா சார்ஜ் பண்ணிட்டு வரணும்ணு தோணும், ஆனா ஒரு தடவை கூட நம்பர் மனப்பாடம் பண்ணணும்னு தோணியதில்ல.
ReplyDeleteஎன்றும் அன்புடன்,
பிரகாஷ் சேதுராமன்
// uranjith1//
ReplyDelete// ராஜ நடராஜன்//
// சி.பி.செந்தில்குமார்//
// பிரகாஷ் சேதுராமன் //
வந்து வாழ்த்தியமைக்கு நன்றி..!