
"நீ மட்டும் என்ன ரொம்ப ஓழுங்கா?"
என்று உங்களை ஓருவர் கேட்கிறார் என்றால்,நாம என்ன செஞ்சியிருந்த நம்மல பார்த்து கேட்டுயிருப்பார்?ரூம் போடாமலேயே யோசிச்ச தெரிஞ்சிடும்..!நீங்க அவரது செயல்பாடுகளை சுட்டிக்காட்டி,குறைக் கூறியிருக்கீறீர்கள் என்று அர்த்தம்.எப்பொழுதுமே பிறர் தங்களை நோக்கிச் சுட்டுவிரல் காட்டுவதை யாரும் விரும்புவதில்லை.இன்னும் சிலர் இந்த கேள்விய கேட்கமுடியாம?பக்கத்துல உள்ளவர்கிட்ட சொல்லிவிட்டு,இல்ல "கிளம்பி வந்தூட்டனுங்க"...ன்னு மனசுக்குள்ளே புலம்பிக்கிட்டு போய்விடுவார்.
ஏன் நாம் சுட்டிக் காட்ட ஆசைப் படுகிறோம்..?என்கிற கேள்விக்கு... "ஏதோ நமக்கு தெரிச்ச நல்லத சொல்லலாமேன்னு..." பதில் வரும்.நீங்க என்ன தான் நல்ல நோக்கத்தோடு சென்னாலூம்,அவை சில நேரங்களில் பலிக்காது இத்தனைக்கும் யாரோ ரோட்டில் நடந்து போரவர்கிட்ட சொல்ல போவதில்லை.(சொன்ன காட்டுன சுட்டுவிரல கையோட எடுத்துக்கிட்டு போற ஆளுளாம் இருக்கான்).நம்முடைய நெருங்கிய சொந்தமோ, நண்பர்களிடத்தில் சொல்லியிருப்போம்..!நம் நோக்கம் வீணடிக்கப்பட்டதற்காகவும் , திசைமாறிப் போனதற்காகவும் நாம் நிச்சயம் வருந்த வேண்டிவரும்.நாம் வார்த்தைகளை வாய்க்குள்ளயே விழுங்க வேண்டியிருக்கும்.
நாம சொல்ல வேண்டிய பொறுப்புல இருக்குரதனால சொல்ல வேண்டிருக்கும் போது, நம்ம என்ன சொல்ல விரும்புறோமோ,அதை பார்முலா பயன்படுத்திச் சொன்ன கேப்பாங்க..!பார்முலாவா எது எதுக்கெல்லாம் கண்டுபிடிப்பிங்கடா?
பார்முலா : (கட்டம் கட்டுனா தனியா 2 மார்க் போடுவாங்கன்னு எங்க வாத்தியார் பள்ளிகூடத்துல சொன்னது)
****************************
* முரண்பாடா பேசுறது...! *
****************************
"என்ன மச்சான் (நண்பேண்டா) டைலியும் சரக்கு போல..!"சில கணங்கள் அவர் முகத்தை பார்த்துவிட்டு,"வேல டென்சனா இருக்கும்...!என்ன தான் டென்சனா இருந்தாலும் டைலி அது கொஞ்சம் ஓவர் தான்..!" இந்த ரீதில பேசனூம்.இந்த இடத்துல டைலாக் டெலிவரி ரொம்ப முக்கியம்..
"வீட்டையும் கொஞ்சம் கவனிங்க மச்சான்!(சொந்தம்டா) அத்தனை பேருக்கும் உங்கமேல ரொம்ப எதிர்பார்ப்பும்,வருத்தமும் நிறைய இருக்கு?” சிறு கணத்தை முழுங்கிவிட்டு, ”நீங்க என்ன பண்ணுவீங்க? எல்லா தொழிலயும் நஷ்டம் வர தான செய்யுது? குடும்பத்துக்கு குறை வைக்கக் கூடாதுன்னுதான் பார்க்குறீங்க! நீங்களும் வீட்ல இருக்கறவங்களும் மனசுவிட்டுப் பேசினாதானே?” என்கிற ரீதியில்...
இது தான் முரண்பாடா பேசுர பார்முலா? இந்த முரண்பாடு என்னத்த சொல்லுது? "நாணயத்தின் இருபக்கங்களையும் உணர்ந்தது போல இருபுறமும் உணர்ந்துதான் இருக்கிறேன். இருந்தாலும் நான் சொன்னதில் நல்லதை எடுத்துக்கோ" என்கிற இந்த மாதிரியன அணுகுமுறைகள்தான் நம்மை பார்த்து சுட்டுவிரலை நீட்டி கேட்காது
"நீ மட்டும் என்ன ரொம்ப ஓழுங்கா?"
போட்டோ கமெண்ட்:
மேலே உள்ள கேள்வி கேட்டா முகத்த பக்கெட் போட்டு மூடிக்கிட்ட சுத்த முடியாது..!
படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!
பதிவுலகத்துக்கு புதியவன்...!பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க..பாஸ்..
ReplyDeleteநாம சொல்ல வேண்டிய பொறுப்புல இருக்குரதனால சொல்ல வேண்டிருக்கும் போது, நம்ம என்ன சொல்ல விரும்புறோமோ,அதை பார்முலா பயன்படுத்திச் சொன்ன கேப்பாங்க..!பார்முலாவா எது எதுக்கெல்லாம் கண்டுபிடிப்பிங்கடா?
ReplyDeleteபார்முலா : (கட்டம் கட்டுனா தனியா 2 மார்க் போடுவாங்கன்னு எங்க வாத்தியார் பள்ளிகூடத்துல சொன்னது)
.......ஆஹா... சூப்பர் டிப்ஸ்! நன்றி. நன்றி.
@ஆர்.கே.சதீஷ்குமார் & Chitra
ReplyDeleteபக்கம் வந்தமைக்கு நன்றி..! நன்றி..!
உண்மையான உபயொகமான பதிவு.
ReplyDeleteவெற்றி! நீங்க மட்டும் ரொம்ப ஒழுங்கா? என் பதிவு சூப்பர்ன்னு எழுதிட்டு அதவிட சூப்பரால்ல பதிவிட்டிருக்கீங்க !! வாழ்த்துக்கள் வெற்றி!
ReplyDelete@தமிழ் உதயம் & மோகன்ஜி
ReplyDeleteவந்தமைக்கு நன்றி..!
தரமான பகிர்வு
ReplyDeleteதியாவின் பேனா விற்கு நன்றி...!
ReplyDeleteநல்ல பதிவு, வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றி நல்ல விசயத்த எடுத்து அழகா எழுதி இருக்கீங்க , வாழ்த்துக்கள் . (ஹி.ஹி.ஹி. எங்கயோ ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பிங்க போல )
ReplyDeleteஅருமையாக இருக்கு...
ReplyDeleteHi vetri,
ReplyDeleteCongrats!
Your story titled 'நீ மட்டும் என்ன ரொம்ப ஓழுங்கா?' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 21st September 2010 05:28:12 AM GMT
Here is the link to the story: http://ta.indli.com/story/340945
Thanks for using Indli
Regards,
-Indli
இதை சாத்தியப்படுத்திய இன்ட்லி வாசகர்களுக்கு நன்றி...! நன்றி...!
நல்லா எழுதி இருக்கீங்க..
ReplyDelete