November 26, 2010
எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள் (தொடர் பதிவு)
தம்பி பிலாசபி பிரபாகரன் என்னை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார்.தலைப்பாக "எனக்கு பிடித்த 10 கமல் படங்கள்" கொடுத்திருந்தார்.
நான் சிறுவயதில் இருந்து ரஜினி படங்கள் பார்த்த அளவுக்கு கமல் படங்கள் பார்த்ததில்லை...!!!இருந்தாலும் என்னை கவர்ந்த,பிடித்த கமல் படங்களும் இருக்கின்றன,எண்ணிக்கையில் பத்தை தாண்டும்.நினைவில் உள்ளதை எழுதுகிறேன்,10 படங்களுக்கு மிகாமல் எழுதுகிறேன்.அது போல புது படத்திற்கு விமர்சனத்திற்கும்,பழைய பட விமர்சனத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.ஏறக்குறைய எல்லோராலும் பார்க்கபட்டிருக்கும்...!!!பலராலும் ரசிக்கப் பட்ட விசயத்தை நாம் ரசித்து எழுதாமல் விட்டால் எப்படி இருக்கும்?வரிசை எண்க்கும் பிடித்த படங்களுக்கு சம்பந்தமில்லை.
* சத்யா
* அபூர்வ சகோதரர்கள்
* குணா
* தேவர் மகன்
* மகாநதி
* குருதிப்புனல்
* இந்தியன்
* ஹே ராம்
* அன்பே சிவம்
* விருமாண்டி
1.சத்யா:
சத்யா வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரி மற்றும் கோபக்கார இளைஞனாக நடித்திருப்பார்.சமுதாயத்தில் நடக்கும் பல அட்டூழியங்களை கண்டு பொங்கியொழும் கேரக்டராக வாழ்த்திருப்பார்.இதில் அவருடைய ஹேர்ஸ்டையில் பிரமாதமாக இருக்கும்.அமலா ஜோடியாக நடித்திருப்பார்.நண்பன் கொலைக்கு சாட்சி சொல்ல பொதுமக்களை கூப்பிடும் காட்சியில் கூர்மையான வசனங்கள் கையாண்டிருப்பார்கள்.கமலோட முக பாவனை ஏமாற்றத்தோடும்,வெறுப்போடும் வசனம் பேசி நடித்திருப்பார்."வளையோசை கல கலவென" என்ற பிரபல படலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர் பாடிருப்பார்கள்.இது தான் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிற்கு முதல்படம்.
2.அபூர்வ சகோதரர்கள்:
கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.ஏன் மூன்று வேடங்களில் (அப்பா கமலையும் சேர்த்து,அவர் அணிந்து வரும் காவல்துறை உடை நன்றாக இருக்கும்.) நடித்திருப்பார்.புத்திசாலிதனமாக தனது அப்பாவை கொன்றவர்களை பழி வாங்குபவராக குள்ள உருவத்தில் நடித்து அசத்திருப்பார்.உயரமாக வரும் ராஜா கேரக்டரிலும் மின்னிருப்பார்."ராஜா கைய வச்சா" மற்றும் "உன்ன நினைச்சேன்" பாடலும் இளையராஜாவின் இசையில் கேட்க இனிமையாக இருக்கும்.
3.குணா:
கமல் மனநோயாளியாக நடித்திருப்பார்.நண்பன் வற்புறுத்தலால் கோவிலுக்கு கொள்ளையடிக்க செல்லுமிடத்தில்,தன் கனவில் பார்த்த பெண்"அபிராமி"என நினைத்து மலைக்கு கடத்திச்சென்று காதல் மழை பொழிவார்.பல திருப்பங்களுக்கு பிறகு கடைசியில் நாயகியின் சொத்துக்களை அடைய விரும்புபவன் அவளைச் சுட்டு வீழ்த்துகின்றான்.தனது காதலி மடிந்து கிடப்பதைப் பார்த்த குணா அவள் உடலைத் தூக்கியவாறு தற்கொலை செய்து கொள்வதாக படம் முடிவடையும்.மனநோயாளியாக மிக பிரமாதமாக நடித்திருப்பார்.பிறகு வந்த கதாநாயகன் மனநோயாளியாக காட்ட படங்களுக்கு முன்னோடி படம் இது.படம் வந்தபோது "அபிராமி,அபிராமி" என்ற வசனம் மிகவும் புகழ் பெற்றது."கண்மணி அன்போடு காதலன்" என்ற வாலி பாடலை கமல் மற்றும் ஜானகி பாடியிருப்பார்கள்.எனக்கு மிகவும் பிடித்த காட்சியாக "பார்த்த விழி" பார்த்தடி" என்ற பாடலும்,அது இடம்பெறும் காட்சிகள் படமாக்கிய விதமும்.இளையராஜாவின் "பிஜிம்" மனதை வருடும் விதமாக இருக்கும்.
4.தேவர் மகன்:
வெளிநாட்டில் படித்து கிராமத்துக்கு காதலியோடு வருவார் கமல்.கிராமத்தில் நடைபெறும் பங்காளி சண்டையை கண்முன் நிறுத்திருப்பார் இயக்குனர்.இதில் கமலும்,சிவாஜியும் கிராமத்து மனிதர்களாக வாழ்த்திருப்பார்கள்.பிடித்த காட்சிகளாக எழுதினால்,ஏறக்குறைய படம் முழுவதும் எழுத வேண்டும்.பஞ்சவர்ணமாக நடித்த ரேவதி மற்றும் கவுதமி
என்று எல்லோருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.எனக்கு எல்லா பாடல்களும் பிடிக்கும்.
5.மகாநதி:
கமல் படங்களிலே என்னை ரொம்பவும் கவர்ந்த படம்.முதன்முதலில் சினிமா சூட்டிங் பார்த்த படம்.நான் கும்பகோணத்தில் ஸ்கூல் படிக்கும் போது,பக்கத்தில் மகாநதி சூட்டிங் நடந்தது.அங்கே "ஸ்ரீதேவி தேவி ரெங்க ரெங்க நாதனின் பாதம்" என்ற பாடல் எடுக்கப்பட்டது.கமல் மற்றும் சந்தானபாரதி இருவரையும் பார்த்தேன்.படம் மிக அம்சமான காட்சிகளுடனும்,சிறப்பான வசனங்களுடனும் எடுக்க பட்டிருக்கும்.கிளைமாக்ஸ் காட்சி மிக சிறப்பாக கையாளப்பட்டிருக்கும்.
6.குருதி புனல்:
கமல் மற்றும் அர்ஜீன் இருவரும் காவல் துறை அதிகார்களாக நடித்த படம்.பத்ரி என்ற வேடத்தில் நாசர் தனது திறமையை வெளிபடுத்திருப்பார்.ஓளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இயக்கிய படம்.ஆங்கில படங்களுக்கு இணையாக காமிரா ஆங்கிள் வைக்கப்பட்டிருக்கும். "குருதி புனல்" என்ற தமிழ் பெயர் வைத்து வந்த தமிழ் படம்.அப்பொழுது தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற சட்டமில்லை என்பது குறிப்பிடதக்கது...!!!பாடல்கள் இல்லாத படம்...!!!
7.இந்தியன்:
சுதந்திர போராட்ட தியாகியாகவும்,R.T.O வாகவும் கமல் இரட்டை வேடங்களில் நடித்த படம்.இயக்குனர் ஷங்கரின் மூன்றாவது படம்.காட்சிகள்,இசை,வசனம் மற்றும் நடிப்பு என சரியான கலவையாக அமைந்த படம்.இதிலும் பிளாஷ்பக் காட்சிகள் மனதை நேருடும் வகையில் அமைத்திருக்கும்.வர்மக்கலையும்,இந்தியன் தாத்தாவும் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது.நகைச்சுவை காட்சிகளும் நன்றாக இருக்கும்."பச்சை கிளிகள்" பாடல் சிறப்பாக இருக்கும்.அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமை
8.ஹே ராம்:
1940ல் நடைபெறும் கதைகளமாக அமைக்கப்பட்டிருக்கும்.கமல் இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்திருப்பார்."சாக்கேத் ராம்" என்ற கேரட்டரில் நடித்திருப்பார்.இளையராஜா இசை கதைக்கு சரியாக பொருத்திருக்கும்.பிடித்த காட்சிகளாக பல இருக்கிறது.அதில் தனது கைத் துப்பாக்கியை ,காவல்துறையினரால் தேடப்படும் போது ஒரு ஊர்தியி ல் போட்டு விடுவார்.அவ்வூர்தியும் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவே அங்கு தனது பழைய நண்பனான அம்ஜத்தையும் சந்திக்கும் காட்சி மற்றும் காந்தி ஆசரமத்தில் நடைபெறும் காட்சிகள் நன்றாக இருக்கும்."நீ பார்த்த பார்வை ஒரு நன்றி" என்ற பாடல் மனதை கொள்ளை கொள்பவை.
9.அன்பே சிவம்:
பயண கதையாக அமைத்திருக்கும் படம்.கமலும்,மாதவனும் இணைத்து புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு வரும் போது பிளாஷ்பாக் காட்சிகளாக படம் விரியும்.இப்படத்தில் "மதன்" அவர்கள் வசனம் எழுதியிருப்பார்.வசனங்கள் மிகவும் ரசிக்க தக்கவையாக இருக்கும்.நாசர் மற்றும் சந்தான பாரதியுடைய நடிப்பு நன்றாக இருக்கும்.முதலில் பிரியதர்ஷன் இயக்குவதாக இருந்தது,பின் கமலுக்கும்,அவருக்கும் ஏற்பட்ட மனகசப்பால் இயக்குனர் "சுந்தர்.சி" இயக்கியிருப்பார்.படத்தில் எல்லா காட்சிகளும் நன்றாகவே இருக்கும்.கிளைமாக்ஸ் காட்சியில் கமல் நடிப்பால் பிரமாதப்படுத்திருப்பார்."யார் யார் சிவம்" என்ற பாடலும் "பூ வாசம் புறப்படும் பெண்ணே" என்ற பாடலும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
10.விருமாண்டி:
திரைக்கதை தான் இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக நகரும்.விருமாண்டியாக அச்சு அசலாக வெளிநாடு போய் திரும்பி வந்த கிராமத்து ஆளாக நடித்திருப்பார் கமல்.அவருடைய கெட்டப் அருமையாக இருக்கும்.இளையராஜா இசையில் பாடல்கள் நன்றாக இருக்கும்.கிணற்றுக்குள் உட்கார்ந்து காதலியோடு பேசுவது,மாடு ஓட்டிக் கொண்டு போகும்போது கமல் பேசிக் கொண்டு வருவது.இப்படியாக காட்சி அமைப்புக்கள் நன்றாக இருக்கும்.ஓரு கொலையை விருமாண்டி செய்ததாக எண்ணிஅபிராமி தூங்கிக்கொண்டிருக்கும் கமல் மீது பானையை போட்டு பேசும் வசனமும்,அதற்கு கமல் எதிர்வினையும் இயல்பாக,ரசிக்க கூடியவைகளாக இருக்கும்."உன்ன விட" என்ற பாடல் சிறப்பாக இருக்கும்.
குறிப்பு:
தொடர் பதிவை மற்றவரை தொடரச் சொல்வது தான் மரபு என்பதற்க்கிணங்க..!இத்தொடர் பதிவை சூப்பர் ஸ்டாரின் விரும்பிகளை எழுத அழைக்கிறேன்.மாறுபட்ட விமர்சனமாக அமையும் என்றும்,ஆரோக்கியமான விமர்சனமாக அமையும் என்பதால்...தொடர் பதிவை எழுத
1.வெறும்பய
2.கொஞ்சம் வெட்டி பேச்சு
அழைக்கிறேன்....!!!
படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம ஓட்டு போடுங்க.!
Subscribe to:
Post Comments (Atom)
பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!
ReplyDeleteஅதுக்குள்ள போட்டாச்சா... நல்ல கலெக்ஷன்ஸ்
ReplyDeletePresent, Sir!
ReplyDelete//அதுக்குள்ள போட்டாச்சா... நல்ல கலெக்ஷன்ஸ்//
ReplyDeleteநேரமின்மை காரணமாக இன்று வெளி வந்துள்ளது,இல்லையென்றால் நேற்று வந்திருக்கும்..!!!
@Chitra said...
ReplyDeleteThanks Madam!
Super Collection.
ReplyDelete@சே.குமார் said..
ReplyDeleteThanks for your visit...
நல்ல தேர்வுகள்...
ReplyDelete//வெறும்பய said...
ReplyDeleteநல்ல தேர்வுகள்...//
நன்றி..!!!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநண்பரே... என்ன இது மின்னல் வேகத்தில் எழுதியிருக்கிறீர்கள்... சும்மா கலக்கீட்டிங்க போங்க... கமலின் ஓவியம் சூப்பர்... நிறைய கூட்டத்தை உங்கள் பக்கம் கொண்டுவரும்...
ReplyDeleteஇன்ட்லியில் ஹிட் போல...
ReplyDeleteநண்பரே சொல்ல மறந்துவிட்டேன்... தொடர்பதிவு என்றால் நீங்கள் எழுதி முடித்ததும் இந்தப் பதிவின் இறுதியில் உங்கள் நண்பர்கள் இரண்டு அல்லது மூன்று பேரை தொடர்வதற்கு அழைக்க வேண்டும் அதுதான் முறை...
ReplyDelete//philosophy prabhakaran said...
ReplyDeleteநண்பரே... என்ன இது மின்னல் வேகத்தில் எழுதியிருக்கிறீர்கள்... சும்மா கலக்கீட்டிங்க போங்க... கமலின் ஓவியம் சூப்பர்... நிறைய கூட்டத்தை உங்கள் பக்கம் கொண்டுவரும்...//
ஆம் மின்னல் வேகத்தில் எழுதப்பட்ட பதிவு தான்..!!!
@philosophy prabhakaran said...
ReplyDelete//இன்ட்லியில் ஹிட் போல...//
//நண்பரே சொல்ல மறந்துவிட்டேன்... தொடர்பதிவு என்றால் நீங்கள் எழுதி முடித்ததும் இந்தப் பதிவின் இறுதியில் உங்கள் நண்பர்கள் இரண்டு அல்லது மூன்று பேரை தொடர்வதற்கு அழைக்க வேண்டும் அதுதான் முறை...//
அவசரத்தில் எழுதாமல் விட்டுவிட்டேன்..!!!இப்பொழுது அழைப்பை இணைத்துவிட்டேன்..!!!நன்றி..!!!
றிப்பு:
ReplyDeleteதொடர் பதிவை மற்றவரை தொடரச் சொல்வது தான் மரபு என்பதுக்கிணங்க..!இத்தொடர் பதிவை சூப்பர் ஸ்டாரின் விரும்பிகளை எழுத அழைக்கிறேன்.மாறுபட்ட விமர்சனமாக அமையும் என்றும்,ஆரோக்கியமான விமர்சனமாக அமையும் என்பதால்...தொடர் பதிவை எழுத
2.கொஞ்சம் வெட்டி பேச்சு
அழைக்கிறேன்....!!!
........புலி பசித்தாலும் புல்லை தின்னாது. நாங்க pure ரஜினிடேரியன்ஸ். Sorry.
கிட்டத்தட்ட என்னுடைய தேர்வுகள் மாதிரியே இருக்கு. அருமை.
ReplyDelete//Chitra said...
ReplyDeleteறிப்பு:
தொடர் பதிவை மற்றவரை தொடரச் சொல்வது தான் மரபு என்பதுக்கிணங்க..!இத்தொடர் பதிவை சூப்பர் ஸ்டாரின் விரும்பிகளை எழுத அழைக்கிறேன்.மாறுபட்ட விமர்சனமாக அமையும் என்றும்,ஆரோக்கியமான விமர்சனமாக அமையும் என்பதால்...தொடர் பதிவை எழுத
2.கொஞ்சம் வெட்டி பேச்சு
அழைக்கிறேன்....!!!
........புலி பசித்தாலும் புல்லை தின்னாது. நாங்க pure ரஜினிடேரியன்ஸ். Sorry.//
ஓஹோ..!!!நன்றி..!!!
//ஜோ/Joe said...
ReplyDeleteகிட்டத்தட்ட என்னுடைய தேர்வுகள் மாதிரியே இருக்கு. அருமை.//
மேலே குறிப்பிட்ட படங்கள் ஏறக்குறைய எல்லாராலும் விரும்பி பார்க்க பட்ட படங்களின் வரிசை..!!!
நல்ல தேர்வுகள்!
ReplyDeletesuper
ReplyDelete//எஸ்.கே said...
ReplyDeleteநல்ல தேர்வுகள்!//
நன்றி..!!!நன்றி..!!!
//;நாஞ்சில் மனோ said...
ReplyDeletesuper//
தொடர்ந்து வருகை தாருங்கள்..!!!!நன்றி..!!!
Hi vetridreams,
ReplyDeleteCongrats!
Your story titled 'எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள் (தொடர் பதிவு)' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 26th November 2010 10:28:01 AM GMT
Here is the link to the story: http://ta.indli.com/story/375324
Thanks for using Indli
Regards,
-Indli
இந்த வெற்றியை தந்த உங்களுக்கு நன்றி..!!!
நானும் கமலின் தீவிர ரசிகன்தான் வெற்றி. என் மனதில் பட்ட படங்களை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள். பதினாறு வயதினிலே ஏன் இடம்பெறவில்லை? உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். இன்று முதல் உங்களை பின் தொடர்கிறேன். (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)
ReplyDeleteநன்றி சிவக்குமார்,
ReplyDeleteஎண்ணிக்கையில் பத்து எழுத வேண்டும் என்பது அன்பு கட்டளை..!"சப்பானி"யை மறக்க முடியாது...10 என்றபோது எதை எழுதுவது எதை விடுவது? என்ற குழப்பமே மேலோங்கியது..!எனினும் மேலே எழுதிய படங்களுக்கு தனி பதிவுகளே போடலாம்.ஓவ்வொரு படத்திலும் ரசித்த விசயங்கள் நிறைய இருக்கு..!!!
நல்ல தொகுப்பு... (மகாநதி நீங்களாக...)
ReplyDelete//பிரியமுடன் ரமேஷ் said...
ReplyDeleteநல்ல தொகுப்பு... (மகாநதி நீங்களாக...)//
நன்றி..!!!நன்றி..!!!
நல்ல தொகுப்பு...
ReplyDeleteஒவ்வொரு படத்துக்கும் நீங்கள் கொடுத்திருக்கும் குட்டி மேலோட்டம் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது - பத்தில் ஒன்பது படங்களைப் பார்த்ததில்லை!
ReplyDeletenice collection ,,,
ReplyDeletekeep going ...
my collection of kamal movies here ...
❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅
http://rockzsrajesh.blogspot.com/2010/11/10-philosophy.html
This way my pal Wesley Virgin's report begins with this SHOCKING and controversial VIDEO.
ReplyDeleteAs a matter of fact, Wesley was in the military-and shortly after leaving-he revealed hidden, "SELF MIND CONTROL" secrets that the CIA and others used to get anything they want.
As it turns out, these are the same secrets tons of famous people (especially those who "became famous out of nothing") and elite business people used to become rich and famous.
You've heard that you use less than 10% of your brain.
Mostly, that's because the majority of your brain's power is UNTAPPED.
Perhaps that thought has even taken place INSIDE your very own head... as it did in my good friend Wesley Virgin's head 7 years ago, while riding a non-registered, trash bucket of a car without a license and in his bank account.
"I'm absolutely fed up with living check to check! Why can't I become successful?"
You've been a part of those those thoughts, isn't it so?
Your own success story is waiting to happen. You just have to take a leap of faith in YOURSELF.
WATCH WESLEY SPEAK NOW