
வேற எங்கையுமில்லை நம்ம தமிழ்நாட்டில் தான்..!காஞ்சிபுரத்தில் ஆட்சியராக பதவி வகிக்கும் "சந்தோஷ் மிஸ்ரா"இதை செயல்படுத்தி வருகிறார்.அவருக்கு மனுக்கள் கொடுத்தால் இரசீது கிடைக்கிறதாம்.மனுக்கள் தொடர்பான நடவடிக்கை எடுக்கபடுகிறதாம்,ரசீதைக் காட்டி "இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை என்ன?என்று வினவலமாம்.
இரசீது இல்லாமல் மனுக்கள் வாங்கப்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை என்று எச்சரித்துள்ளதாக கேள்வி.இதன் மூலம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை ஏற்படுகிறது...!
பொதுவாக நான் கேள்வி பட்டவரை,நமது தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இ.ஆ.ப அதிகாரிகளின் ஈடுபாடு மந்தமாக இருப்பது போல் தோன்றுகிறது,சிலரே தனித்துவத்துடன் செயல்படுத்துகின்றனர்.உதாரணமாக இறையன்பு,உமாசங்கர்,இராதகிருஷ்ணண் இப்படியாக உள்ளது.ஆனால் வேற்று மாநிலத்தில் இருந்து உயர் பொறுப்புக்கு வரும் அதிகாரிகள் தைரியமாக செயல்படுவது போல தெரிகிறது.சில ஆட்சியர்களின் நிலை இன்று வருந்ததக்கதாய் இருக்கிறது,ஆட்சியாளார்களுக்கு ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் உதைபந்தாக தெரிவது பரிதாபமாகயுள்ளது...!
மனுக்களுக்கான இரசீது முறை மூலம் ஒருவிதத் தார்மீகப் பொறுப்பையும் சந்தோஷ் மிஸ்ரா பெற்றுள்ளார் என்றே நாம் நம்ப வேண்டியுள்ளது.ரசீதுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் அரசியல் மற்றும் எந்த ஓரு நிர்பந்தங்களுக்கும் உட்பட தேவையில்லை.இந்த மாதிரியான செயல்கள் மக்களுக்கும் அதிகாரிக்கும் உள்ளே இடைவெளியை குறைக்கும் என்பதில் சிறிது அளவும் சந்தேகமில்லை.இது போல சின்ன சின்ன மாற்றங்களை ஆட்சியர் மற்றும் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கொண்டு வரலாம்.
ஆட்சியர் பணி என்பது நாட்டின் முக்கியமான பதவி ஆகும்.அதை கெளரவ பணியாக கருதாமல்,நிறைய மாற்றங்களை செய்து,நற்காரியங்கள் செய்ய வாய்ப்பு இருக்கிறது.புதியதாக ஓரு வேலை செய்யும்போது,மனதுக்குள் ஓர் வேகம் இருக்கும் இது மனித இயல்பு.புதிதாக பொறுப்புக்கு வரும் உயர் அதிகாரிகள் சட்டங்களை பயன்படுத்தி,புதிய செயல்களை,திட்டங்களை வெளிக்கொண்டு வரலாம்.சிறிய செயல்கள் நாளை ஓர் பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்...!
படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!
பதிவுலகத்துக்கு புதியவன்...!பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!
ReplyDeleteதகவலுக்கு நன்றி, ஆயினும் தமிழகத்தின் எந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் மண்டே பெட்டிசன் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமை வாங்கப்படும் மனுக்களுக்கு கணணி ரசீது தரப்படும். அதில் பதில் கிடைக்கும் நாளும் பார்க்க வேண்டிய அதிகாரியின் பதவியும் குறிக்கப்பட்டிருக்கும்.
ReplyDelete@Prabhu Rajadurai
ReplyDeleteதகவலுக்கு நன்றி.உங்களை போன்ற இடப்படும் பின்னூட்டங்கள் தான்,என்னை மேன்மேலும் கற்றுக் கொள்ள தூண்டுகிறது..!
Nalla pathivu. nanbar prabhu rajadurai solli iruppathu unmanai.
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க வெற்றி. தொடர்ந்து எழுதுங்க... விஷயமுள்ளவரா இருக்கீங்க... உங்ககிட்ட நான் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சிறிய செயல்கள் நாளை ஓர் பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்...!
ReplyDelete...... absolutely true!
///காஞ்சிபுரத்தில் ஆட்சியராக பதவி வகிக்கும் "சந்தோஷ் மிஸ்ரா"இதை செயல்படுத்தி வருகிறார்.அவருக்கு மனுக்கள் கொடுத்தால் இரசீது கிடைக்கிறதாம்///
ReplyDeleteமிகவும் வரவேற்கப் படவேண்டிய விஷயம்... பகிர்வுக்கு நன்றி :-))
இது போல சின்ன சின்ன மாற்றங்கள்.. மக்களுக்கு நல்லது நடக்க உதவும் என்பதில் சந்தேகமே இல்லை..
இந்த காலத்தில்கூட இப்படி ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ReplyDeleteரசீது தருவது நல்ல விசயம் நடவ்டிக்கையும் உண்டா ரசிது மட்டும் தானா
ReplyDeleteநல்ல விஷயத்தை மக்கள் மத்தியில் சொல்லி இருக்கிங்க. உங்க சமூக பார்வையை பாராட்டுகிறேன். தொடருங்கள் நண்பரே!
ReplyDeleteநானும் இப்ப உங்களுக்கு பாலோயர் தல!
ReplyDeleteவெற்றி நல்லா எழுதுரீங்க... கண்டிப்பா நெறய பேர் வந்து படிப்பாங்க...டோண்ட் வொர்ரி..:)
ReplyDeleteநல்லவிசயம். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDelete//சே.குமார்
ReplyDeleteNalla pathivu. nanbar prabhu rajadurai solli iruppathu unmanai.//
வருகைக்கு நன்றி...
//நல்லவன்:நல்லா எழுதியிருக்கீங்க வெற்றி. தொடர்ந்து எழுதுங்க... விஷயமுள்ளவரா இருக்கீங்க... உங்ககிட்ட நான் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.....
ReplyDeleteவாழ்த்துக்கள்...//
உங்களை வார்த்தைகளை உண்மையாக்க முயற்ச்சிக்கிறேன்.
@Chitra
ReplyDelete@Ananthi
@Robin
@என்னது நானு யாரா?
@Jey
@மதுரை சரவணன்
தங்களின் பின்னூட்டங்கள் மேன்மேலும் எழுத தூண்டுகிறது..!
//வால்பையன் said...
ReplyDeleteநானும் இப்ப உங்களுக்கு பாலோயர் தல!//
நன்றி தல
//sasi said...
ReplyDeleteசிறிய செயல்கள் நாளை ஓர் பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்...
உண்மைதான் சார்.......இந்த காலத்தில்கூட இப்படி ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்தஒருசிலர் பலராக மாற வேண்டும்................வாழ்த்துக்கள் நண்பரே நல்ல பகிர்வு..//
சிலர் பலராக தான் இது மாதிரியான பதிவு...!
தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்.. :)
ReplyDeleteverygood,சமூகம் சார்ந்து உங்கள் எழுத்துக்கள் ஜொலிக்கிறது,தொடர்ந்து நீங்கள் சமூக ஆர்வலராக,வளர வாழ்த்துக்கள்
ReplyDelete//verygood,சமூகம் சார்ந்து உங்கள் எழுத்துக்கள் ஜொலிக்கிறது,தொடர்ந்து நீங்கள் சமூக ஆர்வலராக,வளர வாழ்த்துக்கள்//
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி...!
நல்ல பயிற்சி பெற்று பொறுப்புணர்ந்து தான் பணியில் சேர்கிறார்கள்..அரசியல் தலையீடு, குறுக்குவழியில் எளிதான முன்னேற்றம், தனிமனித ஒப்பிடூ இவையெல்லாம் அவர்களை பாதகத்திற்கு இழுத்துச்செல்கிறது...
ReplyDeleteஅபூர்வமாக அமையும் காஞ்சி மாவட்ட ஆட்சியர்களை நிச்சயம் பாராட்டவேண்டும்.
நல்ல பதிவு ..வாழ்த்துக்கள்
மிக நல்ல பதிவு. தாமதமாக இன்று தான் உங்கள் தளம் வந்தேன். உங்களின் சமூக சிந்தனை பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள்
ReplyDelete//மிக நல்ல பதிவு. தாமதமாக இன்று தான் உங்கள் தளம் வந்தேன். உங்களின் சமூக சிந்தனை பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள்//
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி...!
நாமக்கல் ஆட்சியர் திரு.சகாயம் அவர்களும் ஒரு முன்மாதிரியான ஆட்சியர்.
ReplyDeleteதன்னுடைய வருமானத்தை சொத்துக் கணக்கை வெளிப்படையாக அறிவித்த முதல் அரசு உயர் அதிகாரி. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தாலும் விடாப்பிடியாக மக்களுக்கான ஆட்சியராகப் பவனி வருகின்றார்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து இளையர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இணையப் பயிற்சியளித்து அந்தக் கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை மின்மடல் மூலமாகத் தன்னை விரைவாக வந்தடைய வழி செய்தவர்.
கிராமங்களில் மக்களோடு தங்கியிருந்து அவர்கள் பிரச்சினையை விரைந்து முடிக்கின்றார்.
முதியோர் உதவித்தொகை பிரச்சினையை அப்பொழுதே முடிக்கின்றார்...
இப்படி இன்னும் ஏராளம் சொல்லலாம்.....