November 06, 2010
மைனா - காதல் பயணம்
எனது முதல் திரைவிமர்சனம் இது.முடிந்த வரை நன்றாக எழுத முயற்சித்திருக்கிறேன்.தீபாவளி ரீலீஸில் திரைப்பட டிரைலர் மற்றும் விளம்பரங்களால் மற்றும் இயக்குனர் பிரபு சாலமன்னுக்காகவும் என்னை பார்க்க தூண்டிய திரைப்ப்டம் " மைனா".கமலா சினிமாஸில் நேற்று இரவுகாட்சியாக பார்த்தேன்.பிரபு தனது படங்களில்,சிற் சில விசயங்களை கையாள தெரியாமல் முயற்சித்து,தோற்று...தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க தவறியவர்.
கதைசுருக்கம்:
தேனீ மாவட்டம் குரங்குனி என்ற மலைக்கிராமம் தான் கதைக்களம்.தீபாவளிக்கு முந்தைய நாளும்,தீபாவளியென்றும் நடக்கும் சம்பவங்களே கதை.பெரியகுளம் கிளைச்சிறையில் இருந்து ஆரம்பிக்கிறது கதை.சிறுவயதிலேயே நாயகன்(சுருளி) நாயகியோட அம்மாவுக்கும்,நாயகி(மைனா)க்கும் தனக்கு தெரிந்த பாட்டியின் மூலம் அடைக்கலம் கொடுக்கிறான்.மைனாவின் மேல்,சிறு வயது முதல் ஏற்பட்ட அன்பு வளர்ந்துகொண்டே வந்து அவள் பூப்பெய்தும்போது காதலாக முழுமையடைகிறது. அவள்மேல் உயிரையே வைக்கிறான். அவள் தனக்குத்தான் என்று நம்புகிறான்.சூழ்நிலையில் நாயகி அம்மா காதலை எதிர்க்க, நாயகன் அடிக்க வர போலீஸ் அவரை கொலைமுயற்சி என கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்கிறது. விடுதலையாக 2 நாட்களே உள்ள நிலையில் நாயகிக்கு அவரது தாய் வேறு திருமண ஏற்பாடு செய்ய நாயகன் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்து நாயகியை மீட்டேடுக்கிறார். அதே சமயம் நெருக்கடியான சூழலில் இருக்கும் போலீசார் மீண்டும் நாயகனை கைது செய்து,சிறைக்கு கூப்பிட்டு வர வழியில் ஏற்படும் சம்பவங்களே மீதி கதை.
நாயகன் வித்தார்த் நன்றாக நடித்திருக்கிறார்.முக சாயலை பார்பதற்கு விக்ரம் மற்றும் மனோரமா மகன் பூபதியையும் நினைவூட்டுகிறது எனக்கு..!!!!கதைக்கு ஏற்ற நாயகன்...!!!வித்தார்த் முகத்தில் ஏதோ வசீகரம் தெரிகிறது.வரும் படங்களில் பார்ப்போம்.
நாயகி அமலாபால் அழகாக , மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார்,நன்றாக இருக்கிறது.இக்கதையில் அமலா இடத்தில் அஞ்சலியாக இருந்தாலும் ரசிக்கலாம்...!!!இருப்பினும் அமலா ரசிக்க முடிகிறது..!!!தமிழ் சினிமாவில் வருகின்ற படங்களில் இவரை காணலாம்.
மற்றபடி இன்ஸ்பெக்டராய் வரும் சேது ,ஜெயிலர் தம்பி ராமையா, மைனாவின் அம்மா,பொணம்தின்னி,நாயகன் உடன் வரும் அதிகம் பேசும் பையன்,சேது மனைவி மற்றும் அவரது குடும்பம் என்று எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இமான் இசையில் எல்லாப் பாட்டுகளும் நன்றாக இருப்பதோடு ,பாட்டின் வரிகள் அழகாக புரிகிறது.படமாக்கிய விதமும் அருமை.படத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் மற்றும் கலை இயக்குனர் வைரபாலனும். தங்களது திறமையினால், நம் மனதில் இடம்பிடிக்கின்றனர். தேனி மாவட்ட அழகை குறிப்பாக குறங்கினி, மூணார் போன்ற பச்சைப்பசேல் இடங்களை நமக்கு காட்டிய படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.
பிடித்த காட்சிகள்:
@ சைக்கிள்:
நாயகியை,நாயகன் பள்ளிக்கு சைக்கிளில் அழைத்து வரும் காட்சி.
@பயணம்:
ஜீப் களில் மலை பாதையில் பயணம் செய்யும் காட்சிகள்.தத்ரூபமாக எடுக்கப்பட்டுயிருக்கிறது.
@ தோளில் சுமத்து வரும் காட்சி :
நாயகன் நாயகியை தன் தோளில் சுமந்து வரும் காட்சி.
@ பஸ் விபத்து காட்சி:
நாயகன் காப்பாற்றும் காட்சி அருமை. காட்சி அமைப்பு ஆங்கில படங்களுக்கு இணையாக.
@ எதிர்பாராத கிளைமாக்ஸ்:
நல்ல கிளைமாக்ஸ் .நன்றாக எடுக்கப்பட்டுள்ளது.என்னால் யூகிக்க முடித்தது...!!!
இயக்குனர் இந்த திரைபடத்திலும் திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டுயிருப்பது உண்மை...!!! எனினும் தனக்கான இடத்தை கைப்பற்றிவிட்டார் என்பதும் உண்மை..!!!
சில குறைகள் இருந்தாலூம் ...!பல பேரின் உழைப்பு மற்றும் இயக்குனரின் விடாமுயற்சிக்காக பார்க்கலாம்..!!!!
மைனா - காதல் பயணம்
படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம ஓட்டு போடுங்க...!
பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்).
Subscribe to:
Post Comments (Atom)
பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!
ReplyDeleteபுதிய பாணியிலான விமர்சனம் நன்றாக இருக்கிறது .. பாராட்டுக்கள்... படம் பார்க்கப் போகலாமா? வேண்டாமா? என்றிருக்கிறேன்.. விமர்சனங்கள் குழப்புகின்றன...
ReplyDelete@கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteவந்தமைக்கு நன்றி..!!!!
கண்டிப்பாக பார்க்கலாம்...
நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDelete@எஸ்.கே said...
ReplyDeleteநன்றி..!!!
மைனாக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete@மாதேவி
ReplyDeleteநன்றி...!!!!
நல்ல விமர்சனம்.. பாராட்டுக்கள்..
ReplyDelete@ KRP செந்தில் : படம் நன்றாக உள்ளது.. நிச்சயம் பாருங்கள்..
CHECK MY REVIEW @
http://suthershan.blogspot.com/2010/11/blog-post.html
@Suthershan said...
ReplyDeleteஎனது வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி..!
நல்ல விமர்சனம். முதல் விமர்சனம் போல தெரியவில்லை. வாழ்த்துக்கள்
ReplyDeletemiga nandraga ullathu
ReplyDelete@மதுரை சரவணன் said...
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு நன்றி..!!!
//jackjack said... //
ReplyDeleteநன்றி..!!! நன்றி..!!!
விமர்சனம் நன்றாக இருக்கிறது.
ReplyDelete//@சே.குமார் said... //
ReplyDeleteதொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி..!!!!
முதல் விமர்சனம் அருமை!!! வாழ்த்துக்கள்....
ReplyDelete@சிவா said...
ReplyDeleteநன்றி!!!
நல்ல விமர்சனம் தம்பி..
ReplyDeleteநல்ல விமர்சனம் வெற்றி வாழ்த்துக்கள்....
ReplyDeleteநன்றி கேபிள்ஜீ
ReplyDelete@பிரியமுடன் ரமேஷ் said...
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி...!!!!
too good..........
ReplyDelete