September 27, 2010

நடுரோட்டுல நம்பர் தெரியாம நின்னுயிருக்கீங்களா?


நீங்க சென்னைல,அம்பத்தூர்லருந்து கிளம்பி பெருங்குடி போய்,உங்கள் நண்பனை அலுவலகத்தில் பார்க்க போய்கிறீர்கள்.உங்க நண்பண் "மச்சி என் ஆபிஸ் பக்கத்துல வந்து கால் பண்ணு வெளியே வரேன்னு சொல்லுராறு".நீங்களும் பல டிராபிக் கஷ்டங்களைத் தாண்டி(வெள்ளை சீருடை தரகர்களைத் தாண்டி..!)நண்பண் ஆபிஸ் பக்கத்துல போய், பேசுறதுக்கு மொபைல எடுத்த ஆப் ஆயிடுச்சி,திரும்பவும் ஆன் சென்சா ஆன் ஆகல‌ன்னு வச்சிக்ங்க,உங்களுக்கு நண்பண் நம்பரும் நினைவில இல்ல(நினைவில் வைத்திருப்பதில்லை என்பதே உண்மை..!)என்ன செய்வீங்க?


நம்ம சோம்பேறியா இருக்குறத்துக்கு,விஞ்ஞானம் தான் காரணம் சொன்னா இல்லன்னு சொல்லவா போறிங்க?இப்பொ எல்லா தேவைகளும் கைக்கு அடக்கமாக கிடைப்பதால்,நமது மூளைக்கு பெரும்பாலும் வேலை கொடுப்பதில்லை.


80,90க்களில் இந்தியா மற்றும் அயல்நாடுகளில் மிக சிறந்த வல்லுனர்களாக திகழ்ந்தவர்கள் எல்லோருக்கும் மனக்கணக்கு,நினைவுத்திறன் போன்றவையும் வெற்றிக் காரணமாக இருந்திருக்கிறது.இன்றைய இளைய தலைமுறைகளிடம் கொஞ்சம் காணாமல் போய் கொண்டிருக்கின்றன என்பது உண்மையே..!


அதற்கு நாமும் கூட விதிவிலக்கல்ல.அன்றைய காலக்கட்டத்தில் உதாரணமாக வாய்ப்பாடு(Multiplication Tables)மேலிருந்து கீழாகவும்,கீழிருந்து மேலாகவும் 20‍ம் வாய்ப்பாடு வரை மனனம் செய்து வைத்திருப்பார்கள்.இன்றைய நாட்களில் இதை திக்கி தடுமாறி சொல்ல‌முடியாமலும்,கால்குலேட்டர் உதவியில்லாமல் கணக்கு போட தெரியாதவர்கள் தான் அதிகம்.


மொபைல் போன் வருவதற்கு முன், நெருங்கிய, முக்கியமான நபர்களின் தொலைபேசி எண்களை தெரிந்து வைத்திருந்தோம். ஆனால், இன்று...?யாராவது தொடர்பு கொள்ள எண் கேட்டால்,உடனே மொபைல் போனைத் தான் தேடுகிறோம்.முக்கிய நபர்களின் எண்களைக் கூட மனனம் செய்து வைப்பதில்லை.மொபைல் போன் தொலைந்தால்,எண்கள் மறையும்; நட்பு வட்டமும் மறையும்.காரணம், எந்த எண்களுமே நினைவில் இல்லை..!நினைவில் வைத்திருப்பதில்லை என்பதே உண்மை என்று மேலேயே சொல்லிவிட்டேன்.


வெகு சிலரோ வீட்டில் டைரி மற்றும் கணிணியில் பதிவு செய்து வைத்திருப்பது வேறு விஷயம்...! நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கும் போது, டைரியையோ அல்லது கணிணியோ தேடி செல்ல இயலாது? அதுவும், முக்கிய அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் போது, மொபைலை பறி கொடுத்து தவிக்கும் தவிப்பு...! இங்கே வார்த்தைகளாக எழுத முடியாது...!


கையில் மொபைல் போன் இருந்தாலும், முக்கிய எண்களை மனனம் செய்ய வைத்துக்கொள்ளலாம், பர்ஸ்சில் கைகளுக்கு அடக்கமான டைரிகளில்( 5 ரூபாய் விலையில் கிடைக்கிறது) எண்களை எழுதி வைத்துக்கொள்ளலாம்!(இந்த டைரிய தொலைச்சுபுட்டு தேடுர ஆளுங்களுக்கொல்லாம் நான் பொறுப்பு கிடையாது..!).எண்களை (4 +4 +2=10)இலக்க எண்களாக மனனம் செய்துக் கொள்ளலாம்..!இதை போல உங்களுக்கு என்ன செய்தால் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமோ, அப்படி வைத்துக்கொள்ளுங்கள்..!
ஆகவே நான் சொல்ல வரக்கூடிய கருத்து என்னா?மொபைல உள்ள நம்பர மட்டும் நம்பி வெளிய கிளம்பி நடுரோட்டுல நம்பர் தெரியாம நிற்காதிங்க..!‌

போட்டோ கமெண்ட்:

நடுரோட்டுல நிக்கும்போது இப்படியா இருக்கும் முகம்..!


படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம‌ ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!

September 23, 2010

இராஜராஜ சோழனும்,மழைநீர் சேகரிப்பும்



இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது என்று ஓர் ஆய்வு சொல்கிறது.எதிர் காலத்தில் நீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் ஏற்படும் என்றும். நீரை சேமித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுத்திருப்பதை நாம் அறிவோம். எனவே இருக்கின்ற நீரை செம்மையாக பயன்படுத்திடவும், பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்திடுவதிலுமே தமிழகத்தின் நீர் மேலாண்மை சார்ந்துள்ளது.



மழைநீர் சேகரிப்புக்கு உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், ஊருணிகள் மற்றும் கோவில் குளங்கள் அனைத்தும் இன்றும் அப்பணியினைச் செவ்வனே செய்தும்,செய்யாமலும் இருக்கிறன...!நகர்ப்புறங்களில் மழைநீர் சேகரிப்பு முயற்சி இராஜஇராஜன் (கி.பி. 10ம் நூற்றாண்டு) காலத்திலேயே தஞ்சையில்தொடங்கப்பட்டது. தஞ்சைப் பெரியகோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுமையும் சேமிக்கும் இடமாகச் சிவகங்கை குளத்தை இராஜஇராஜன் அமைத்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. அதற்குப் பின்னர் தஞ்சையை ஆண்டு செல்வப்ப நாயக்கன், செல்வப்பன் ஏரியைப் (சேப்பன வாரி) வெட்டி அதில் தஞ்சை நகரில் பெய்யும் மழை நீரைச் சேகரித்து, வண்டல் கலந்த நீர் தெளிந்த பின்னர், தனிக்குழாய் மூலம் சிவகங்கைக் குளத்தில் சேமிக்கும்படி அமைத்தான். பிறகு நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் நகரில் உள்ள முக்கிய குளங்களுக்கும், கிணறுகளுக்கும், அரண்மனைக்கும் விநியோகம் செய்த தடயங்கள் கிடைத்துள்ளது‌.


பண்டைய தமிழர்கள் நீரை எவ்வாறு சேமித்து பாசனங்களுக்கு பயன்படுத்தியதையும், நீர்மேலாண்மை குறித்த தமிழர்களின் அறிவு, ஆற்றல் இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மழை நீரை சேமிப்பதற்காக குளம், குட்டைகள், ஏரிகள், மடு, கண்மாய் என்று ஏராளமான நீர் நிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.இதை கல்வெட்டுகளிலும் குட ஓலைகளிலும், செப்பேடுகளிலும் மூலம் அறியபடுகிறது.

முதலாம் பரமேஸ்வரன், நஞ்சுவர்மன், கரிகால சோழன்,ராஜேந்திர சோழன் உள்ளிட்ட மன்னர்களும் குளங்கள், கிணறுகள், அணைகள் மற்றும் ஏரிகளை உருவாக்கி நீர் மேலாண்மை செய்த வரலாறுகள் பல உண்டு.இவ்வாறு உருவான ஏரிகள்தான் உத்திரமேரூர் ஏரி, பொன்னேரி ஏரி, வீரானம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளாகும்.

பண்டைய தமிழகர்களிடம் இருந்த அறிவு, ஆற்றல் இப்போ எங்க போய் அடமானம் வைச்சொம்முன்னு தெரியல.அவங்க தோண்டிய ஏரி,குளத்த மூடி பிளாட்டு போட்டு வித்து,வீடுக் கட்டிக்கிட்டு,அவங்க கட்டுன கோயில போய் இறைவன "நல்லா இருக்குன்னு" கும்பிட்ட எப்படி நல்லா இருப்போம்..? நீர் ஆதாரம் தான் அடிப்படை,அத காப்பாத்தினா தான் நல்லா இருப்போம்...!



பிரேசில் நாட்டின் திரு. ரோஜர் எல் சாண்டோஸ் அவர்களின் ‘Right Under Our Nose’ குறும்படம்,சில வினாடிகளில் மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை அழகாக சொல்கிறது..!என்னை இந்த பதிவு எழுத தூண்டிய இந்த குறும்படத்திற்கு நன்றி..!





தமிழக கட்டுமான விதிகளின் படி, வீடுகள் கட்டப்படும்போது, தரையில் சிமெண்டால் வீட்டைச் சுற்றித் தளம் அமைப்பது தவறு. ஆனால், சென்னை போன்ற நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், இந்த விதி சர்வ சாதாரணமாக மீறப்படுகிறது. இதனால், பூமிக்குச் செல்லும் நீர்வரத்து நின்றுபோய், நில நீரளவும் குறைந்து விட்டது. குறைந்த பட்சம் கார் பார்க்கிங் லது மணல் தரைய விட்டு வைக்கலாம்...!


கவனித்துத் தடுக்கவேண்டிய அரசாங்க அதிகாரிகள் சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு, வாய்மூடி மௌனியாய் இருப்பது வேதனை தருகிறது.இதன் அவசியத்தை அதிகாரத்தில் உள்ளவர்களும்,மக்களுமாகிய நாமும் தான் உணரவேண்டும், உணர மட்டுமல்ல‌ கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதும் தேவையாகிறது..!

படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க(என்னை மேம்படுத்திக்க முடியும்)...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!