எனது முதல் ஆங்கில திரைப்பட விமர்சனம் இது..!!!
டோனி ஸ்காட்டின் 11 வது திரைப்படமாக வந்துள்ளது " Unstoppable ".Denzel Washington மற்றும் Chris Pine இணைத்து கலக்கியிருக்கும் படம்.எனக்கு Denzel சிரிப்பு ஓர் வசீகரத்தை உண்டு பண்ணுகிறது.டோனி ஸ்காட்டிடம் ஃபக்ஸ் நிறுவனம் படத்தின் பட்ஜட்டை குறைக்க சொன்னபோது,தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டும் பட்ஜட்டை குறைத்தும் எடுக்கப்பட்ட படம். 2009 வருடம் ஓரு அதிகாலையில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த மின்சார ரயிலை மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று வேகமாக ஓட்டிச் சென்று, வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதினார் என்ற செய்தி நமக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம். அதுவே அந்த ரயில் ஓட்டுனரின் கவனக்குறைவால் ஆளில்லாமல் கிளம்பி,அந்த சரக்கு ரயில்வண்டியில் பேரழிவை ஏற்படுத்திடக்கூடிய நச்சுப்பொருளும், எரிபொருளும் இருத்து,அது மெல்ல மெல்ல வேகமெடுத்து,பின்பு 70 கிலோமீட்டர் வேகத்தில்,பிரேக் இல்லாமல் ஓடியிருந்தால் எப்படி இருக்கும்?நினைக்கவே பயமாக இருக்கிறதா?.
இது போன்றே 2001-ல் Ohio என்னும் US-ன் மத்தியகிழக்கு மாகாணத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.
கதை இது தான்:
Ethan Suplee மற்றும் T J Miller யார்ட் பணியாளர்கள்,அந்த ஆள் இல்லாத ரயிலின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள்.Ethan Suplee கவனக்குறைவால் 777எண் ரயில் pennsylvania நகரத்தை நோக்கி அதை நிறுத்த உள்ளே யாரும் இல்லாத நிலையில் தனது முழுவேகத்தில் பயணிக்கிறது, டென்சல் மற்றும் டோனி இவர்களின் ரயிலும் அந்த ஆள் இல்லா ரயில் செல்லும் பாதையில் நேருக்கு நேராக வருகிறது.எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய, மீண்டும் அசுர வேகமெடுத்து ஓடும் ரயிலிடமிருந்து,அவர்கள் விபத்து இல்லாமல் தப்பிப்பதோடு,அந்த ரயில் staton என்ற இடத்தில் வருகிற வளைவில் 15 கிலோமீட்டரில் திரும்பவிட்டால் ஏற்படும் விபத்தை எப்படி தடுத்து,ரயிலை நிறுத்திகிறார்கள் என்பது வரை எல்லாமே சுவாரஸ்யமே.
ஓரு அதிரடி மாசலாவுக்கு தேவையானநடிப்பு,படத்தொகுப்பு,ஓளிப்பதிவு,இசை என அத்தனை அம்சங்களும் இருக்கிறது.777எண் ரயிலை பார்க்கும் ஓவ்வொரு வினாடியும் நமக்கு பதபதப்பை உருவக்கும் விதமாக படம் பிடித்திருப்பது அருமை.செய்தி சேகரிக்கும் ஹெலிகாப்டர்கள்,துரத்தி வரும் போலிஸ் கார்கள், ஓரு வேனை இடித்துவிட்டு செல்லும்வதும் போன்ற காட்சி அமைப்புகள் பிரமிக்கும் விதமாக அமைத்துள்ளன.ஓடும் ரயிலை காட்டி மீண்டும் ரசிகர்களை கட்டிப்போட்ட பெருமை ஹாலிவுட் மற்றும் டோனி ஸ்காட்க்கே சேரும்.
இயக்குனர் டோனி ஸ்காட் மற்றும் படத்தின் டிரைலர்:
Unstoppable - அசுர வேகத்தில் ரயில்
படக்குழுவினர் விபரம்:
Directed by Tony Scott
Produced by Tony Scott
Julie Yorn
Mimi Rogers
Eric McLeod
Alex Young
Written by Mark Bomback
Starring Denzel Washington
Chris Pine
Rosario Dawson
Ethan Suplee
Jessy Schram
Music by Harry Gregson-Williams
Cinematography Ben Seresin
Editing by Chris Lebenzon
Robert Duffy
Studio Scott Free Productions
Prospect Park
Millbrook Farm Productions[1]
Distributed by 20th Century Fox
Release date(s) November 12, 2010 (2010-11-12)
Running time 98 minutes
Country United States[2]
Language English
Budget $85 million[3][4]
Gross revenue $136,078,234[5]
படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம ஓட்டு போடுங்க...!
பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!
ReplyDeleteArumaiyana Vimarsanam....
ReplyDeleteஎழுத்து நடையை பார்க்கும்போது முதல் விமர்சனம் போல தெரியவில்லை... நிறைய விமர்சனங்களை படித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது... ஆனால் கொஞ்சமாக எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது...
ReplyDelete@சே.குமார் said...
ReplyDeleteArumaiyana Vimarsanam...
நன்றி..!!!
//Philosophy Prabhakaran said...
ReplyDeleteஎழுத்து நடையை பார்க்கும்போது முதல் விமர்சனம் போல தெரியவில்லை... நிறைய விமர்சனங்களை படித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது... ஆனால் கொஞ்சமாக எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது...//
நீளமாக போய்விடும் என்றேண்ணி சுருக்கமாக எழுதினேன்..!!!!நன்றி..!நன்றி..!!!