
சென்னையைப் பொறுத்தமட்டில், போக்குவரத்து நிர்வாகம்(Traffic management )என்ற சொல்லக்கூடியே ஒரு அணுகுமுறையே இல்லை. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத் தான் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.இச்சாலை மேம்படுத்தும் பணிகளும் பல்வேறு பிரச்சனைகளால்(கான்ட்ராக்டர்கள்,அதிகாரிகள் மெத்தனம், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்)பல கிடப்பில் கிடக்கிறது.வருகிற தேர்தலை முன்னுர்த்தி இனி விரைவாக நடக்கும் என்று நம்புவோமாக..!தரமற்ற சாலைகளில் மின்னல் வேகத்தில் பறந்து செல்வதால் விபத்துக்களும்,உயிரிழப்புகளும் தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு புள்ளி விபரத்தின் படி சென்னை மாநகரில் மட்டும் 6823 விபத்துக்கள் நடந்துள்ளதாக சொல்கிறது.மோசமான சாலை காரணமாக நடந்த 2 விபத்துக்களில் 3 பேர் இறந்துள்ளனர்.இருசக்கர வாகனங்களால் நடந்த 180 விபத்துக்களில் 183 பேரும், மூன்று சக்கர வாகனங்களால் நடந்த 68 விபத்துக்களில் 69 பேரும், இதர வாகனங்கள் மூலம் நடந்த 112 விபத்துக்களில் 117 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்துக்களுக்கு காரணங்களாக அறியபடுபவை மோசமான சாலை,போக்குவரத்து விதிமீறல்கள்,வாகன ஓட்டிகளின் கவனமின்மை போன்றவை.
சாலையின் நடைபாதை முழுவதும் நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.சென்னையில் சாலை இருபுறங்களில் உள்ள நடைபாதையில் 200mtrs வரைக்கூட தொடர்ந்து நடக்க முடியாத சூழல் தான் காணப்படுகிறது.சாலை என்பது வாகனங்களை பயன்படுத்துவதற்கு, கார், பேருந்து,டூவீலர் போவதற்குதான் என்று ஆகிவிட்டது. சைக்கிள் போவதற்கோ, நடப்பதற்கோ இல்லை என்று ஆகிவிட்டது.மோட்டாரற்ற போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஏட்டில் மட்டுமே இருக்கிறது. மோட்டாரற்ற போக்குவரத்து என்றால் நடப்பதும் சைக்கிளும்தான். இந்த இரண்டுக்கும் ஒன்றுமே செய்யவில்லை என்பது வேதனையான விசயம்.
வயதில் முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் நடந்து வெளியே சென்று வீட்டுக்கு வந்துவிட்டால்,ஆயுள் இன்னொறு நாள் கூடிவிட்டதாகவே எண்ணும் அளவுக்கு சாலைகள் இருக்கிறது...!!.நடைபாதை வியாபாரிகளுக்கு வணிக வளாகம் திறக்கப்படவேண்டும்.(தி.நகரில் பாண்டிபஜார் உட்பட 3 இடங்களில் திறக்கப்பட்டும்,தொடர்ந்து வழியிலேயே கடை பரப்பி வருகின்றனர்...!)
மாநகருக்குள் நுழைந்துவிட்டால் தேவையான வழிதகவல் (sign boards) கொண்ட குறிப்புகள் இல்லை.புதிதாக வருபவர்கள் பாடு திண்டாடம் தான்..!!!நீங்கள் சிக்னலில் நிற்கும்போது,உங்களிடம் வழிகேட்டோர் பல எண்ணிக்கையில் தான் இருந்திருப்பார்கள்...!சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடுதல்( டிராஃபிக் டைவர்ஷன்) ஒன் வே டிராஃபிக், டூ வே டிராஃபிக் என்று மாற்றியமைத்து விடுகிறார்கள்.இதனால் பலன்கள் உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது...! உ.தா.அசோக் பில்லர் ஓன் வே முதலில் கொண்டுவந்தார்கள்,பின் எடுத்தார்கள் ...... மாற்றியமைக்கப்பட்டு மறுபடியும் ஓன் வே நடைமுறையில் உள்ளது.இதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை கிடையாது, முன்னோட்டம் கிடையாது.
சாலையில் ஓரங்களில் கண்ட கண்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. மேலும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மினிகார்கள் பஸ் ஸ்டாப்புகளில் நிறுத்தப்படுவதால் மாநகர பேருந்து சற்று தள்ளி நிறுத்தப் படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. குறிப்பாக அலுவலக நாட்களில் காலை, மாலை நேரங்களில் பீக் அவர்'களில் சாலைகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சில போக்குவரத்து போலீசாரும் ஏனோதனோ என்ற பார்வையில் கண்டுகொள்வதில்லை.
கட்டுமானத்திற்கு சாலை ஆக்கிரமிக்கப்படுகிறது.அப்புறம் டாஸ்மாக் கடை இருக்கும் சாலை நடக்க,மோசமாக இருக்கும் வழியிலேயே குடிப்பார்கள்,குடித்துவிட்டு நடப்பவர்கள் நடை நம்மை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.இப்படி சாலையில் போவது என்பது பயங்கரமான அனுபவமாக உள்ளது. ....!!!!இதற்கெல்லாம் தீர்வு...!!!???
பதிவுகள் தொடரும்....
படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம ஓட்டு போடுங்க...!பின்னூட்டம் போடுங்க...!(என்னை மேம்படுத்திக்க முடியும்)
பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!
ReplyDeleteபடமே மிரட்டுது... பிரச்சனையை நன்கு விளக்கி இருக்கீங்க.... தீர்வு? ம்ம்ம்....நல்லது விரைவில் நடக்க வேண்டும். அதிகரித்து வரும் traffic தேவைக்கு ஈடு கொடுக்க வேண்டுமே.
ReplyDeleteசாலை விதிகளை யாருமே மதிக்கறதில்லை:(
ReplyDeleteதப்பித்தவறிப் பிடிச்சாலும். 'ஏய் நான் யார்தெரியுமா'ன்னு அலட்டலும் மிரட்டலும்:(
சட்டம் ஒழுங்கு எல்லோருக்கும் ஒன்றாக இருந்தால்தான் சரிவரும்.
இந்தியாவில் அதுவும் சென்னையில் இது நடக்குமா?
@Chitra
ReplyDeleteநன்றி...!நன்றி...!
@துளசி கோபால்
ReplyDelete//தப்பித்தவறிப் பிடிச்சாலும். 'ஏய் நான் யார்தெரியுமா'ன்னு அலட்டலும் மிரட்டலும்:(//
சரியாக சொன்னீர்கள்...
வருகைக்கு நன்றி..!
ஆனால், சைதாப்பேட்டை - ராஜ்பவன் - கிண்டி ஒன்வே நல்ல திட்டம்... ஆனால், கிண்டி பாலத்தை சில சமயம் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்
ReplyDeleteநல்ல முயற்சி...
ReplyDeleteநல்ல அலசல் நண்பரே.. தொடரட்டும்..
@அருண் பிரசாத்
ReplyDelete//ஆனால், சைதாப்பேட்டை - ராஜ்பவன் - கிண்டி ஒன்வே நல்ல திட்டம்... ஆனால், கிண்டி பாலத்தை சில சமயம் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்//
உண்மையில் சைதாப்பேட்டை - ராஜ்பவன் - கிண்டி ஒன்வே நல்ல திட்டம் தான் மறுக்க முடியாது...!!!
சில குளறுபடிகளை தான் சுட்டிகாட்ட வேண்டியிருக்கிறது....
@வெறும்பய...
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே...!!!
nice
ReplyDeleteif you will be the Traffic Minister/CM, what solution do u offer for chennai traffic
ReplyDeleteபிரச்சனையை நன்கு விளக்கி இருக்கீங்க.நல்ல அலசல் நண்பரே
ReplyDeleteசாலை விதிகளை மதிக்காததுதான் விபத்துக்கள் நிகழ முக்கிய காரணம். போக்குவரத்து நெரிசம், மாசு அதிகரிப்பு எத்தனை பிரச்சினைகள்!!!
ReplyDeleteஅலசல் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
Well said வெற்றி... பைக் மற்றும் ஆட்டோ ஓட்டுபவர்கள் சாலை விதிகளை கொஞ்சம் கூட மதிப்பதில்லை... அவர்கள் திருந்தினாலே முக்கால்வாசி தலைவலி தீர்ந்துவிடும்...
ReplyDelete@ராம்ஜி_யாஹூ
ReplyDeleteநன்றி..!
இதைப் பற்றி விரிவாக எழுத ஆசைப்படுகிறேன்..!!!
@சே.குமார்...
ReplyDelete//பிரச்சனையை நன்கு விளக்கி இருக்கீங்க.நல்ல அலசல் நண்பரே//
தொடர்ந்து தரும் வருகைக்கும்,ஆதரவுக்கும் நன்றி..!நன்றி..!!!
@எஸ்.கே...
ReplyDelete//சாலை விதிகளை மதிக்காததுதான் விபத்துக்கள் நிகழ முக்கிய காரணம். போக்குவரத்து நெரிசம், மாசு அதிகரிப்பு எத்தனை பிரச்சினைகள்!!!
அலசல் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!//
சரியாக சொன்னீர்கள்...!வருகைக்கு நன்றி..!!!
@philosophy prabhakaran said...
ReplyDelete//Well said வெற்றி... பைக் மற்றும் ஆட்டோ ஓட்டுபவர்கள் சாலை விதிகளை கொஞ்சம் கூட மதிப்பதில்லை... அவர்கள் திருந்தினாலே முக்கால்வாசி தலைவலி தீர்ந்துவிடும்...//
கண்டிப்பாக அவர்களாகிய நாம் திருந்த வேண்டும்...!!!!
அய்யோ, இதுக்குப் பயந்தே நானு சென்னைக்கு வருவதைத் தவிர்ப்பேன்!! மற்ற நகரங்களும் சென்னைக்கு இணையாகப் பெருகி வருகின்றன.
ReplyDeleteபிரச்னைகள் இன்னவென்று இனங்கண்டுவிட்டோம்; தீர்வு எங்கே, எப்படி, யாரால்..? எப்படியாவது நடந்தாச் சரி..
சரியான புள்ளிவிவரங்கள் .....அறிந்து ,புரிந்து,ஆராயிந்து எழுத பட்ட தொடர் ..வாழ்த்துகள் ..தங்களுடைய இரண்டாவது பகுதிக்காக காத்து இருக்கிறேன் ...
ReplyDeleteசென்னை சாலைகள் நிறைய இடங்களில் ஒரு வழிப்பாதையாக மாறினால்தான் சரிப்படும் ..
ReplyDelete