தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவி சேவை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை, நோயாளிகளின் விருப்பமின்றி கட்டாயமாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து லஞ்சம் பெற்றுக் கொள்வதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதாகவும். தவறு செய்த ஒன்பது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு, நான்கு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது.மேலும் 108 ஊழியர்கள் பணம் கேட்டாலோ, லஞ்சம் பெற்றிருந்தாலோ 108 இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளது.இப்பொழுதோ இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.வளரவிட்டால் எதிர்க்காலத்தில் நமக்கு ஆபத்து.இது போன்ற சமயத்தில் லஞ்சம் கேட்டால்,நாம் இருக்கும் அவசரத்தில் கொடுத்துவிடுவோம்.இதுபோன்றோர்களிடம் உரக்க கத்திக் கேளுங்கள்."எதற்கு தர வேண்டும் பணம்?" என்று..!
புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கவாபோகிறார்கள்? என்று விட்டுவிட வேண்டாம்.நமது எதிப்பை பதிவு செய்துவிடுங்கள்.என்ன ஒரு அரக்கக் குணம் பாருங்கள் ! அல்லாடிக் கொண்டிருக்கும் ஒரு உயிரையோ, உற்றாரையோ பற்றிச் சற்றும் கவலையின்றி, என்ன அரக்கத்தனம். யார் எப்படி?என்ன? ஆனால் என்ன பணத்தைப் பிடுங்கித் தன் வயிறை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
இதே நிலைதான் பிணகிடங்கு வேன் ஊழியர்களிடமும் ! பிணத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசும் பல ஜாதிக் கழிசடைகள் !அவர்கள் குடும்பத்தருக்கு அவசர உதவி தேவை படும் போது இவர்களின் சக உழியர்கள் இவர்களிடமே லஞ்சம் கொடுக்கும் போது தான் இவர்களுக்கு புரியுமோ?..
எனது இரண்டவது பதிவு இது...! படிச்சிட்டு பிடிச்சிருத்தா ஓட்டு போடுங்க,பின்னூட்டம் போடுங்க...நம்மளையும் மேலே ஏத்திவிடுங்க...!
வாழ்த்துக்கள்!! உங்கள் பார்வை எப்போதும் சமுதாயத்தின் மீதும் நமது பார்வை பரிமாற்றங்கள் சமுதாய விழிப்புணர்வுக்காகவும் இருந்தால் நான் எப்போதும் உங்கள் தோழன்..
ReplyDelete@ கோமாளி
ReplyDeleteநான் எப்பொதும் உங்கள் தோழனாக இருக்கவே விரும்புகிறேன்...!