தெலுங்கானா:
ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிஷனின் 6 அம்சம் பரிந்துரையால் விளைந்தது குழப்பம் மட்டுமே! "வரும் ...ஆனா ...வராது என்ற சினிமா ஸ்டைலில் உள்ளது..!!!அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை இல்லை.வேறுபாடு துவங்கியுள்ளது. இதனால், மேலும் குழப்பமான நிலைமையே உருவாகி வருகிறது.தெலுங்கானா மோதல் மீண்டும் ஆந்திராவில் துவங்கிவிட்டது.என்னை பொறுத்தவரை இன்றைய ஆந்திரா சூழ்நிலையில் வளர்ச்சியற்ற தெலுங்கானாவும் , வளர்ச்சி பெற்ற கடலோர ஆந்திரமும், வளர்ந்து வரும் ராயலசீமாவும் தெலுங்கு மக்கள் என்கிற அடிப்படையில் மட்டும் இணைந்து வாழ முடியவில்லை என்றால் பிரிவதில் தவறில்லை..!"தெலுங்கு" என்ற மொழியின் கீழ் இவர்களைத் திரட்டுவது சரியாக இருக்காது என்பதே என் எண்ணம்..!!
-------------------------------------------------------------------------------
போலீசாருக்கு மொபைல் சேவை:
சலுகை கட்டணத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் போலீசாருக்கு மொபைல் சேவை கொடுக்கிறது.சியுஜி' குரூப் திட்டத்தின் மூலம் ஒரு குரூப்பில் 12 ஆயிரம் காவல் துறை மொபைல்கள், போன்களில் இலவசமாக பேசலாமாம். மாநிலம் முழுவதும் 10 மண்டலங்களாக பிரித்து குரூப் திட்டத்தில் பேசும் வசதி செய்யப்படுகிறது.
போலீஸ்காரர்களுக்கு குரூப் திட்டத்தில் மொபைல் சேவை வழங்குவதால் ஸ்டேஷன் டெலிபோன் பில் அதிகம் ஆகாது.மேலும் உரிய நேரத்தில் போலீஸ்கார்களை பணிக்கு அழைக்கவும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் கொடுக்கப்படுகிறதாம்..!நினைச்சது நடந்தா சந்தோசம் தான்...!
-------------------------------------------------------------------------------
மனிதனே இல்லாத உலகம்:
-------------------------------------------------------------------------------
ஆம்புலன்ஸ் தினம்:
இன்று ஆம்புலன்ஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஓருக்காலத்தில் பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், இன்று "108' என்ற பெயரில் இலவசமாக அரசால் வழங்கப்படுவது மகிழ்ச்சியே...
-------------------------------------------------------------------------------
வாழ்த்துக்கள்:
கேபிள் சங்கரின் புதிய புத்தகமான "மீண்டும் ஓரு காதல் கதை" வெளியீட்டு விழாவிலேயே வாங்கியாச்சி,ஓன்றிரண்டு கதைகள் தவிர வேறேதும் இன்னும் படிக்கவில்லை வேலைப்பளூக் காரணமாக..!படித்து முடித்தக்கதையில் "கமான்..கமான்.." நன்றாக இருந்தது..முழுவதும் படித்துவிட்டு புத்தகத்தை பற்றிய விமர்சனம் எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன்.ஓ.ஆர்.பி ராஜா மற்றும் கே.ஆர்.பி செந்திலின் "ழ" பதிப்பகம் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
புத்தகம் வாங்க ஆன்லைன் முகவரி
----------------------------------------------------------
January 08, 2011
January 03, 2011
Unstoppable - அசுர வேகத்தில் ரயில்
எனது முதல் ஆங்கில திரைப்பட விமர்சனம் இது..!!!
டோனி ஸ்காட்டின் 11 வது திரைப்படமாக வந்துள்ளது " Unstoppable ".Denzel Washington மற்றும் Chris Pine இணைத்து கலக்கியிருக்கும் படம்.எனக்கு Denzel சிரிப்பு ஓர் வசீகரத்தை உண்டு பண்ணுகிறது.டோனி ஸ்காட்டிடம் ஃபக்ஸ் நிறுவனம் படத்தின் பட்ஜட்டை குறைக்க சொன்னபோது,தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டும் பட்ஜட்டை குறைத்தும் எடுக்கப்பட்ட படம். 2009 வருடம் ஓரு அதிகாலையில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த மின்சார ரயிலை மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று வேகமாக ஓட்டிச் சென்று, வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதினார் என்ற செய்தி நமக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம். அதுவே அந்த ரயில் ஓட்டுனரின் கவனக்குறைவால் ஆளில்லாமல் கிளம்பி,அந்த சரக்கு ரயில்வண்டியில் பேரழிவை ஏற்படுத்திடக்கூடிய நச்சுப்பொருளும், எரிபொருளும் இருத்து,அது மெல்ல மெல்ல வேகமெடுத்து,பின்பு 70 கிலோமீட்டர் வேகத்தில்,பிரேக் இல்லாமல் ஓடியிருந்தால் எப்படி இருக்கும்?நினைக்கவே பயமாக இருக்கிறதா?.
இது போன்றே 2001-ல் Ohio என்னும் US-ன் மத்தியகிழக்கு மாகாணத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.
கதை இது தான்:
Ethan Suplee மற்றும் T J Miller யார்ட் பணியாளர்கள்,அந்த ஆள் இல்லாத ரயிலின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள்.Ethan Suplee கவனக்குறைவால் 777எண் ரயில் pennsylvania நகரத்தை நோக்கி அதை நிறுத்த உள்ளே யாரும் இல்லாத நிலையில் தனது முழுவேகத்தில் பயணிக்கிறது, டென்சல் மற்றும் டோனி இவர்களின் ரயிலும் அந்த ஆள் இல்லா ரயில் செல்லும் பாதையில் நேருக்கு நேராக வருகிறது.எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய, மீண்டும் அசுர வேகமெடுத்து ஓடும் ரயிலிடமிருந்து,அவர்கள் விபத்து இல்லாமல் தப்பிப்பதோடு,அந்த ரயில் staton என்ற இடத்தில் வருகிற வளைவில் 15 கிலோமீட்டரில் திரும்பவிட்டால் ஏற்படும் விபத்தை எப்படி தடுத்து,ரயிலை நிறுத்திகிறார்கள் என்பது வரை எல்லாமே சுவாரஸ்யமே.
ஓரு அதிரடி மாசலாவுக்கு தேவையானநடிப்பு,படத்தொகுப்பு,ஓளிப்பதிவு,இசை என அத்தனை அம்சங்களும் இருக்கிறது.777எண் ரயிலை பார்க்கும் ஓவ்வொரு வினாடியும் நமக்கு பதபதப்பை உருவக்கும் விதமாக படம் பிடித்திருப்பது அருமை.செய்தி சேகரிக்கும் ஹெலிகாப்டர்கள்,துரத்தி வரும் போலிஸ் கார்கள், ஓரு வேனை இடித்துவிட்டு செல்லும்வதும் போன்ற காட்சி அமைப்புகள் பிரமிக்கும் விதமாக அமைத்துள்ளன.ஓடும் ரயிலை காட்டி மீண்டும் ரசிகர்களை கட்டிப்போட்ட பெருமை ஹாலிவுட் மற்றும் டோனி ஸ்காட்க்கே சேரும்.
இயக்குனர் டோனி ஸ்காட் மற்றும் படத்தின் டிரைலர்:
Unstoppable - அசுர வேகத்தில் ரயில்
படக்குழுவினர் விபரம்:
Directed by Tony Scott
Produced by Tony Scott
Julie Yorn
Mimi Rogers
Eric McLeod
Alex Young
Written by Mark Bomback
Starring Denzel Washington
Chris Pine
Rosario Dawson
Ethan Suplee
Jessy Schram
Music by Harry Gregson-Williams
Cinematography Ben Seresin
Editing by Chris Lebenzon
Robert Duffy
Studio Scott Free Productions
Prospect Park
Millbrook Farm Productions[1]
Distributed by 20th Century Fox
Release date(s) November 12, 2010 (2010-11-12)
Running time 98 minutes
Country United States[2]
Language English
Budget $85 million[3][4]
Gross revenue $136,078,234[5]
படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம ஓட்டு போடுங்க...!

Subscribe to:
Posts (Atom)