
ஜெயலலிதா Vs ஸ்டாலின்..?
ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் அடுத்த முதல்வர் யார் என்று ஒரு சர்வே பற்றி கேபிள் சங்கர் எழுதியிருக்கிறார்.கலைஞரா?ஜெயலலிதாவா? என்ற சர்வே மாற்றாக ஸ்டாலினா? ஜெயலலிதாவா? என்ற கேள்விக்கு வித்யசமான ரிசல்ட் கிடைக்கும் என்று சொல்கிறார்.இதை நானும் வழிமொழிகிறேன்.ஸ்டாலின் துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றுவதாகவே தெரிகிறது.தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக "முதல்வர் வேட்பாளர்" ஸ்டாலின் என்று களத்தில் இறக்கிவிட்டால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது..!
----------------------------------------------------------------------------------------
சமூக கொடுமை
செப்டிக் டேங்க்குகளை சுத்தம் செய்யவோ, இதற்கான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யும் பணிகளிலோ, எக்காரணம் கொண்டும் நேரடியாக துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்த பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தடை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மனித கழிவுகளை மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது சமூக நோக்கில் மிகவும் கொடுமையான விசயம்.இந்த உத்தரவுக்கு பின்னால் நாராயணன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு கிடைத்த வெற்றி இது..!சமூக அக்கறைக் கொண்ட தனி மனிதன் நாராயணணுக்கு நன்றி..!!!
-------------------------------------------------------------------------------------
பேஸ்புக் VS கூகுள்?
முகபுத்தக நிறுவனம் அதாங்க பேஸ்புக் தற்போது, இ-மெயில் சேவையிலும் நுழைந்துள்ளது என்றும்.பேஸ்புக் வலைதளத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. "ஸ்பாம்' மெயில்கள் இதில் வடிகட்டி அனுப்பப்படுவது இதில் சிறப்பம்சமாக கூறப்படுகிறது.இது கூகுள் மெயிலுக்கு போட்டியாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.என்னை பொருத்தவரை கூகுளை அவ்வளவு எளிதில் யாரலும் மிஞ்ச முடியாது..!!!விட்டா பட்டி தொட்டி எல்லாம் சொல்லுவான் கூகுள் பத்தி..!
------------------------------------------------------------------------------------

குடும்ப சண்டை
நடிகர் விஜயகுமார் வீட்டில் குடும்ப பிரச்சனை.மகளால இப்ப சந்தி சிரிக்குது. பழைய பகையை தீர்த்துக்கொள்ளுது ஓரு பேப்பர் குரூப்..!!!இன்னும் என்ன என்னவெல்லாம் வரும் என்று?தினமும் பேப்பர படிக்குது ஓரு குரூப்..!!எப்பா அந்த புள்ளைய கூப்புட்டு சமாதான பேசுங்கப்பா..!ஆ..உனான்னா அடுத்தவன் உட்டு கதய ஆரம்பிப்பாளாம் ஆச்சி..!(ஹி..ஹி..."பஞ்ச்"பழமொழி தெரியல அதான்..!)
--------------------------------------------------------------------------------
பெட்ரோல் கொள்ளை
நேற்று கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வந்துக்கொண்டிருந்தேன்,பள்ளிக்கரனை பாலம் ஏறி,இறங்கியவுடன் எனது டூவீலருக்கு(Apache)பெட்ரோல் போட பங்குக்கு சென்றேன். பணம் கொடுப்பதாகட்டும்,பெட்ரோல் போடும் மீட்டராகட்டும் மற்றும் பெட்ரோல் போடும்போதாகட்டும் கவனமாக கவனித்தேன்.இதுல என்ன செய்திருக்கு? அப்படின்ன நினைக்க வேண்டாம்.சென்னையில பெட்ரோல் பங்குல நடக்குர மேட்டர பத்தி எனது நண்பர் என்னிடம் சொன்ன விசயம் கீழே:
உ.தா: நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்கிறீர்கள் என்றால் பங்குகளில் பணத்தை வசூல் செய்யும் நபர் உங்களிடம் 100 பணத்தை வாங்கிக்கொண்டே பெட்ரோல் போடச் சொல்லுவார் பங்கு பைப் பிடித்துக் கொண்டிருப்பவரிடம்,அவர் நமக்கு முன்னால் "0" ஆக்கிவிடுவார்,ஆனால் அவர் செட் பண்ணியிருப்பது "50ரூ"க்கு செய்திருப்பார்.நம்மிடம்"0" பார்த்துக்கொள்ள சொல்லிக்கொண்டே,நீங்கள் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் அவர் பெட்ரோல் போட ஆரம்பிப்பார்.அதே சமயம் பணம் பெற்றுக் கொண்டவர்"நம்மிடம் பேச ஆரம்பிப்பார்"..."வண்டி என்ன மைலேஜ் தருது சார்?" மற்றும் "வண்டி லாங் டிராவல் சுமூத்தா இருக்குதா சார்?"என்ற ரீதியில் இருக்கும்.அதற்குள் "50"க்கு போட்டுவிட்டு மீண்டும் "0" ஆக்கிவிடுவார் பெட்ரோல் போடுபவர்.இப்படி பல தினுசு தினுசா யோசிச்சி அடிக்குராங்களாம்.அதோடயில்ல பேசுறவன் வாய பார்த்த நம்ம பணம் இப்படி தான் போகுமாம்"?
-------------------------------------------------------------------------------------
மறுசூழர்ச்சி பற்றிய வீடியோ,இதில் வரும் பாடலும்,இசையும் நன்றாக இருக்கிறது.இசை ஜாக் ஜான்சன்...
படிச்சிட்டு பிடிச்சிருத்தா மறக்காம ஓட்டு போடுங்க.!